• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் நிலன் செம க்யூட்.. நோ நை நை பேபி.. மகன் குறித்து சிலாகிக்கும் விஜயலட்சுமி!

|

சென்னை: கலைஞர் டிவியில் இரவு நேரத்தில் நம்ம வீட்டு நட்சத்திரம்னு ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடத்திக்கிட்டு வராங்க. சின்னத்திரை, வெள்ளித் திரை பிரபலங்களை சந்தித்து அவர்கள் வீட்டில் தொடங்கி வெளியில் போவது வரை ஒரு நாள் பொழுதை போக்குவது.

இது ஒரு பெரிய நிகழ்ச்சி இல்லேன்னாலும், சில நட்சத்திரங்கள் பயனுள்ள விஷயங்களை செய்யும்போது, பலருக்கும் இது இன்ஸ்பிரேஷனா இருக்கும். இந்த நல்ல நோக்கத்துல நிகழ்ச்சியை கொண்டு போனா நல்லாத்தான் இருக்கும்.

Vijayalakshmi happy about her son Nilan

சென்னை 28 படம் புகழ் விஜயலட்சுமி அகத்தியனை அவங்க வீட்டுலயே போயி சந்திச்சு பேசுறாங்க. பல விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டாலும், நமது மனசில் நின்னதுன்னு சிலதை பற்றி சொல்லலாம்.

இயக்குநர் அகத்தியரின் இளைய மகள் விஜயலட்சுமி. அகத்தியன் காதல் திருமணம் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செய்துக்கிட்டவராம். அவர் உதவி இயக்குநரா இருந்தப்பவே நாங்கள் மூன்று பிள்ளைகள் பிறந்துட்டோம்...

ரொம்ப எளிமையாத்தான் பள்ளிப் பருவத்துல வளர்ந்தோம். ஒரு தீபாவளிக்கு அப்பாவால் எங்களுக்கு புது துணி எடுத்து தர முடியலை. அதுக்கு அப்பா கூட நான் சண்டை போட்டு இருக்கேன். அதுக்குப் பிறகு விவரம் தெரிஞ்சு அப்பாகிட்ட நான் சாரி கேட்டு இருக்கேன்.

Vijayalakshmi happy about her son Nilan

ரொம்ப போராடித்தான் அப்பா சினிமாவுல ஒரு இடம் பிடிச்சார். இப்பவும் சினிமாவில் நுழைவது அவ்ளோ சுலபம் கிடையாது. அதுல அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாங்கன்னு தெரியும். அப்பா நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச பின்னர்தான் குடும்ப நிலைமை மாறுச்சு.

என் குழந்தை நிலன் பத்தி சொல்லனும்னா, எல்லாரும் சொல்ற மாதிரி இரவுல தூங்காம அழற குழந்தை இல்லை. நான் பக்கத்துல இருக்கணும். நான் எப்பப்போ தூங்கறேனோ, அப்போ அவரும் என் கூட படுத்துடுவார். திரும்ப எப்போ நான் எழுந்திக்கறேனோ அப்போதான் அவரும் எழுவார். நானே பாவம் 10 மணியாயிருச்சே.. குழந்தைக்கு பசிக்குமேன்னு எழுந்தாதான் உண்டு.

நான் என்ன செய்றோனோ அதை ப்ரோக்ராம் பண்ணின மாதிரி நிலன். ஷாப்பிங் போனா தொந்திரவு தராத குழந்தை.. எப்பவும் நைநை பேபியா அவர் அழுது அடம் பிடிச்சது இல்லை. இப்படி நிலன் பத்தி எந்த பிரச்சனையும் இல்லை.

மகாலட்சுமி நாத்தனாரை மணக்கப் போகும் மதன்.. நடுவுல பொள்ளாச்சி கும்பல் போல காமலீலைகள்

எல்லாருக்கும் போல சமையல்தான் எனக்கு பெரிய பிரச்சனை. இன்னிக்கு சமையல் முடிஞ்சுதான்னு சொல்லி இருக்க மாட்டேன்... நாளைக்கு என்ன பண்ணலாம்னு யோசிப்பேன். என் ஹஸ்பெண்ட்கிட்ட சில சமயம் கேட்டா, அவர் உனக்கு பிடிச்சதை செய்னு சொல்லிடுவார். என்ன பண்றது நானே யோசிச்சு ஏதாவது சமைப்பேன்னு சொல்லி சிரிக்கிறார் விஜயலட்சுமி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
The kitchen is a big problem for everyone. I will not tell you what to cook tomorrow ... I'll think about what tomorrow. Ask me some time at my husbend, and he will tell you what you like. Wondering what I'm doing, I'm thinking of something cooked by Vijayalakshmi

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more