லீக்கான வீடியோஸ்.. குறைந்த ஆரவாரம்! இருந்தாலும் 100 கோடி கிளப்பில் விஜய்யின் "ஜனநாயகன்" அடித்த சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.. வழக்கமாக விஜய் படம் என்றாலே தியேட்டர் வாசலில் கூட்டம் நிரம்பி வழியும்.. ஆனால், இந்த முறை அந்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று ஒரு சாரார் கருத்து கூறுகிறார்கள்.. மற்றொருபுறம் ஜனநாயகன் படத்தின் சக்ஸஸ், மற்றும் அதன் வசூல் நிலவரத்தை பதிவிட்டும் ஒருசாரார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் முதல் கலெக்‌ஷன் குறித்து சொல்லப்படும தகவல் என்ன?

Marshal Media சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ப்ரியன், "ஜனநாயகன் படத்தின் சீன்கள் சோஷியல் மீடியாவில் ஏற்கனவே கசிந்ததால் லட்சக்கணக்கான மக்கள் ஏற்கனவே அதைப் பார்த்திருப்பார்கள். இப்போது படம் வெளியாகும்போது விஜய்யின் படங்களுக்கு வழக்கமாக இருக்கும் கொண்டாட்டமும், அனைத்துத் தரப்பு ரசிகர்களின் ஆதரவும் காணப்படுகிறது.

Jana Nayagan

ஜனநாயகன் விஜய்

விஜய் ஒரு சிறந்த நடிகர்.. இளைஞர்களைக் கவர்ந்தவர். ஆனால், இப்போது அவர் அரசியலுக்கு வந்த பிறகு, அதே அளவிலான ரசிகர்கள் தியேட்டருக்கு வருகிறார்களா என்பது கேள்விகுறியாக உள்ளது.

காசி தியேட்டர் வழியாக நான் வரும்போது கவனித்தேன்.. முன்பெல்லாம் விஜய் படம் ரிலீஸாகும்போது அந்த பகுதியே பிளாக் ஆகும் அளவிற்குப் பெரிய கூட்டம் இருக்கும். ஆனால் இன்று அந்த அளவுக்கு பெரிய கூட்டம் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை அவரது அரசியல் வருகை தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

தியேட்டர் வாசலில் குறைந்த கூட்டம்

அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் அவருக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள், அவரது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக தொடர்ந்து ரசிகர்களாக நீடிப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. தியேட்டர்களில் அன்று காணப்பட்ட உற்சாகம் இன்று இல்லை.

எம்ஜிஆர் முதலமைச்சரானபோதும், அவரது படங்கள் வெளியாகின. "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" ஷூட்டிங் முடித்துவிட்டுத்தான் அவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார். எம்.ஜி.ஆர் 1950களிலிருந்தே திமுகவில் அரசியல்வாதியாக இருந்தவர். ஆனால் விஜய் அரசியலுக்குப் புதியவர். எம்ஜிஆரின் ரசிகர்கள் திமுகவினராகவும், திமுகவினர் எம்ஜிஆரின் ரசிகர்களாகவும் இருந்தனர்.

35 சதவீத வாக்குகள்

ஆனால் விஜய்யின் ரசிகர்கள் அனைத்து அரசியல் கட்சிகளிலும் பரவி இருந்தனர். அதனால் எம்.ஜி.ஆரால் தேர்தலுக்குப் பிறகும் தனது அரசியல் ஆதரவை நிலைநிறுத்த முடிந்தது. ஆனால் விஜய்யைப் பொறுத்தவரை, நடிகராகத் தனக்கு இருந்த ஆதரவை இழந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. அரசியலில் அவருக்கு ஆதரவு கிடைத்து, மக்கள் வாக்களித்து 35 சதவீத வாக்குகளுடன் ஆட்சிக்கு வந்திருக்கலாம். ஆனால், நடிகராக அவருக்கு இருந்த ஆதரவு குறைந்திருக்க வாய்ப்புள்ளது.

இதுவே தனது கடைசித் திரைப்படம் என்கிறார் விஜய்.. ஆனால் நடிகர்களின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒருவேளை அரசியலில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் மறுபடியும் சினிமாவில் நடிக்க வரக்கூடும். தற்சமயத்திற்கு, விஜய்யின் அரசியல் நிலைப்பாடு காரணமாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்திருக்கிறது என்றே தோன்றுகிறது" என தெரிவித்துள்ளார்.

முதல் நாள் கலெக்‌ஷன்?

அதேபோல மூத்த சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜனநாயகன் பற்றி பேசும்போது, ஜனநாயகன் படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல் ரூ. 90 கோடி முதல் ரூ. 110 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய வசூலாகும். இந்த ஆண்டில் "கருப்பு" படம் தமிழகத்தில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. விஜய்யின் மாஸ் மற்றும் ரசிகர் பலத்தினால் 'ஜனநாயகன்' படம் நிச்சயம் கருப்பு படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+