உன் விழியும்.. என் விழியும் சந்தித்தால்.. ஆஹா.. என்னா ரொமான்ஸுப்பா
சென்னை: அரண்மனைக் கிளி நடிகர் விஜித் ருத்ரன் திருமணம் சீரும் சிறப்புமாக லாக்டவுன் சமயத்தில் நடந்துள்ளது. அது தொடர்பான புகைப்படங்கள் இன்னும் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.
லாக்டவுன் சமயம் என்பதால் ரொம்ப சிம்பிளாக திருமணத்தை முடித்துள்ளார் விஜித். இவர் யாருன்னு கேட்டா.. ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா ஒரு வித்தியாசமான வில்லன் நடிகர்தாங்க இந்த விஜித் ருத்ரன்.
ரன் சீரியல் பாத்திருப்பீங்க. அதில் இவர்தான் வில்லன். தொடர்ந்து பல சீரியல்கள். அதில் முக்கியமானது அரண்மனைக் கிளி சீரியல். அதிலும் இவர்தான் கலக்கியுள்ளார்.

மக்கள் விரக்தி
லாக்டவுன் சமயம் என்பதால் சீரியல் ஷூட்டிங்குகளும் நடக்கவில்லை. புதிய எபிசோடுகளும் ஒளிபரப்பாகலை.. இதனால் மக்கள் வெறுத்துப் போயுள்ளனர். ஏன் நடிகர் நடிகைகளும் கூடத்தான். சரித்தான் இப்படியே இருந்தா எப்படி என்று பலர் கல்யாணம் செய்து கொள்ள கிளம்பி விட்டனர். அப்படித்தான் விஜித்தும் தனது திருமணத்தை சத்தம் போடாமல் முடித்து விட்டார்.

ஹீரோவும் நானே
இவர் ஒரே நேரத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என இரு துருவமாக கலக்கிக் கொண்டிருக்கும் வித்தியாசமான நடிகர். ரன் வில்லனுக்காக மெனக்கெட்டு நடத்த இவர் அதே அளவிலான மெனக்கெடலை அரண்மனைக் கிளிக்கும் கொடுத்து அசத்தியவர். இதனால்தான் சினிமா ஹீரோக்களுக்கு இணையான பெயரும் புகழும் விஜித்துக்குக் கிடைத்துள்ளது.

சிம்பிளாக கல்யாணம்
இவருக்கு சமீபத்தில் சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். அரசு விதித்த கண்டிஷன்களுக்கேற்ப திருமணம் நடந்ததால் யாரையும் பெரிய அளவில் கூப்பிட முடியவில்லையாம். திருமணத்தை முடித்த கையோடு அதில் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருந்தார்.

விஜித் நன்றி
இவரின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் ரசிகர்கள் வாழ்த்து கூறியதற்கு உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார் விஜித். அவருடைய புகைப்படங்களை பார்த்து சின்னத்திரை பிரபலங்களும் திரைப்படத்துறையினர் களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ஆனால் சிங்கிள்ஸ் மட்டும் அவருடைய போட்டோக்களை பார்த்து கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

இரு விழிகளின் சந்திப்பு
திருமணம் முடித்த கையோடு திருமண கோலத்தில் மணப்பெண்ணும் மணமகனும் கட்டிப்பிடித்து நிற்பது போலவும் அதனை கண்ட பெண்ணின் தோழிகளும் ஆணின் தோழர்களும் முகத்தை மறைத்து வைப்பது போலவும் உள்ள படம்தான் இப்போது வைரலாகப் பரவி வருகிறதாம். சிங்கிள்களை எல்லாம் புலம்ப விட்டுட்டீங்களே விஜித் சார்.!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications