ஈசிஆரில் ரூ.35 லட்சம் மனித குரங்கை கொஞ்சிய விக்ரம்.. பின்னணியில் அந்த தொழிலதிபர்? அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: லார் கீபன் (Lar Gibbon) எனப்படும் அரிய வகை மனித குரங்குடன் நடிகர் சியான் விக்ரம் எடுத்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து, சினிமா உலகிலும், பொதுமக்களிடையேயும் மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின்படி, பாதுகாக்கப்பட்ட காட்டு விலங்குகளை வீட்டில் வளர்ப்பதும், காட்சிப்படுத்துவதும், வர்த்தகம் செய்வதும் கடுமையான குற்றமாகும். இந்த விவகாரம் குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "லார் கீபன் என்பது இந்தியாவில் இயல்பாக வாழும் உயிரினம் கிடையாது. இவை மலேசியா மற்றும் இந்தோனேசிய நாட்டின் அடர்ந்த மழைக்காடுகளில், 100 முதல் 150 ஆண்டுகள் வரை பழமையான உயர்ந்த மரங்களின் உச்சியில் வாழும் மனித குரங்கு வகையைச் சேர்ந்தவை.

Vikram ECR 35 Lakh Monkey Monkey Smuggling Case Businessman Vikram Video 35

விக்ரம் கொஞ்சிய குரங்கு

இவை இப்போது உலகளவில் மிக வேகமாக அழிந்து வரும் அரிய உயிரினங்களின் லிஸ்ட்டில் உள்ளன. இயற்கை சூழலில் சுதந்திரமாக உலவ வேண்டிய இத்தகைய விலங்குகளை, நாம் எவ்வளவு வசதியான செயற்கை சூழலில் அடைத்து வைத்து காஸ்ட்லியான உணவுகளை கொடுத்தாலும் அவையால் இங்கு இயல்பாக வாழ முடியாது. பறவைகளாக இருந்தாலும் சரி, வனவிலங்குகளாக இருந்தாலும் சரி, அவைகளின் சுதந்திரத்தை பறித்து வீடுகளில் அடைப்பது மிகப்பெரிய பாவமாகும்.

மணிப்பூர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் 3 மனித குரங்குகளில், 2 குரங்குகள் ஈரோடு பெருந்துறையில் உள்ள ஒரு தொழிலதிபருக்கும், இன்னொன்று விக்ரமின் சம்மந்தியான கெவின் கேர் சி.கே. ரங்கநாதனின் குடும்பத்திற்கும் விற்பனை செய்யக் கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈசிஆர் உள்ள தனது சம்மந்தி வீட்டிற்கு மகளைப் பார்க்கச் சென்ற விக்ரம், அங்கிருந்த குரங்குடன் விளையாட்டாக வீடியோ எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈசிஆர் அக்கறையில் சம்மந்தி வீட்டுக்கு போன விக்ரம்

அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையானவுடன், விக்ரம் அந்தப் பதிவை உடனடியாக நீக்கிவிட்டார். இருந்தாலும் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியபோது, "நான் சம்மந்தி வீட்டிற்குச் சென்றபோது குரங்கை பார்த்து வீடியோ மட்டுமே எடுத்தேன், தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.

அதற்கு பிறகு, அக்கரையில் உள்ள பண்ணை வீட்டிற்குச் சென்று வனத்துறையினரும் அதிகாரிகளும் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் உரிமையாளர்கள் யாரும் அங்கு இல்லை. அங்கிருந்த மேனேஜரிடம் விசாரித்தபோது, "வியாபாரி ஒருவர் விற்பனைக்காக இந்தக் குரங்கைக் கொண்டு வந்தாரே தவிர, நாங்கள் அதை விலைக்கு வாங்கவில்லை" என்று கூறியுள்ளார்.

ஆதிவாசி - அந்தமான் தீவுகள்

ஆனால், சர்வதேச சந்தையில் சுமார் 33 முதல் 35 லட்சம் ரூபாய் வரை மதிப்பைக் கொண்ட இந்த அரிய உயிரினங்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகப் பிரிவின் கீழ் வரும். கடத்தி வரப்பட்ட 3 குரங்குகளில் ஒன்று ஏற்கனவே சூழல் மாற்றத்தால் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு ஒரு தெளிவான உதாரணத்தைக் கூறலாம். அந்தமான் தீவுகளில் பல 100 ஆண்டுகளாக வாழும் ஆதிவாசி மக்களை இந்திய அரசு நகரத்திற்கு அழைத்து வந்து வாழ வைக்க முயற்சி செய்தது. ஆனால், நமது உணவு முறை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாறுபட்டதால் தொற்று நோய்கள் தாக்கி அவர்கள் உயிரிழக்கத் தொடங்கினார்கள்.. அதனால் அரசு அவர்களை மீண்டும் அந்த தீவிலேயே சுதந்திரமாக வாழ விட்டுவிட்டது. அதேபோலத்தான் காடுகளில் வாழ வேண்டிய இந்த விலங்குகளையும் வேறு சூழலில் அடைக்கும்போது அவை உயிரிழக்கின்றன.

2 மனித குரங்குகள் எங்கே

வெளிநாட்டு விலங்குகளை வளர்க்க "PARIVESH" போன்ற செயலிகளில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்று சொன்னாலும், இந்த மனித குரங்கு எந்த சட்ட அட்டவணையிலும் வராததால் இதற்கு யாருமே உரிமம் வழங்க முடியாது. மற்ற 2 குரங்குகள் எங்கே என்ற விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக வனவிலங்குகளை வைத்திருந்தது கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மான் வேட்டையாடிய வழக்கில் இன்றும் கடுமையான சட்டப் போராட்டங்களையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகிறார். அதேபோல, 2012ம் ஆண்டில் நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு இன்றளவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, பிரபலங்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமே. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது வனத்துறை நிச்சயமாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+