இன்று பிள்ளையார் சதுர்த்தி... தொலைக் காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளில் மும்முரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று விநாயகர் சதுர்த்தி. தினம் தொலைக்காட்சிகளில் வழக்கமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் வழக்கம் போல சிறப்பு தினமான இன்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

பட்டி மன்றம், சீரியல் குடும்பங்களின் விளையாட்டு, கலாட்டாக்கள், நடிகர் நடிகைகளின் நேர்காணல் என்று நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஒரு காலத்தில் பண்டிகை நாட்கள் என்றால் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தால் மட்டுமே பண்டிகை நாட்கள் என்று தெரியும்.. ஆனால், இன்று சின்ன பண்டிகை என்றால் கூட மிக பிரமாண்டமாக நம்மை ஃபீல் பண்ண வைக்கின்றன நமது சேனல்கள்.

மக்கள் எதிர்பார்ப்பு

மக்கள் எதிர்பார்ப்பு

மக்கள் ஒரு காலத்தில் பண்டிகை நாட்கள் என்றால் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக இருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் என்னென்ன என்று பார்க்க ஆவலாக இருந்தனர். அவர்களை மிகவும் கவரும் நிகழ்ச்சிகளாக சினிமா நட்சத்திரங்களின் சிறப்பு பேட்டிகள், சிறப்பான பட்டி மன்றம், சிறப்பான ரியாலிட்டி ஷோ என்று இருந்தன.

இல்லை மாற்றம்

இல்லை மாற்றம்

ஆனால், பல வருடங்களாக இதே போல நிகழ்ச்சிகளையே சேனல்கள் ஓளிபரப்பி வருவதிலிருந்து மாறவே இல்லை என்பதால் மக்கள்
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை நிஜமாக எந்த தொலைக்காட்சி சேனல்களாலும் தர முடியவில்லை. இதைத் தவிர்க்க மக்கள் எல்லா சேனல்களையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு, கடைசியில் எதாவது ஒரு படத்தில் ஐக்கியமாகி விடுகிறார்கள். சிலர் தூங்கிவிடுவதும் உண்டு, பலர் வெளியில் சென்று பொழுதை போக்குவதும் உண்டு.

பாணி ஒன்றுதான்

பாணி ஒன்றுதான்

பண்டிகை நாட்களில் எல்லா சேனல்களும் சீரியல் நடிகர், நடிகைகளை விடுவதில்லை.சும்மா இருக்கும் இவர்களை அழைத்து, அந்த சீரியல், குடும்பத்துக்கும், இந்த சீரியல் குடும்பத்துக்கும் மோதல் என்று ரியாலிட்டி ஷோ நடத்துவதை விதிமுறையாகவே கடைப்பிடித்து வருகிறார்கள். இதை மக்களில் ஒருவராக பார்க்கும்போது நிஜமா ரொம்ப போரடிக்குது.

பண்டிகை தொடர்பான

பண்டிகை தொடர்பான

பண்டிகை நாட்களில் பண்டிகையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள், கதைகள், பாடல்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. அதை சுவை பட எந்த தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும் என்று சிந்திக்கவே இல்லை. நேரத்தை கடத்த சிறப்பு நிகழ்ச்சி என்று எதையாவது ஒளிபரப்பும் இது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் அவாய்ட் செய்து எத்தனை வருஷங்களாச்சு..

ஆனால், சேனல்கள் என்னவோ இன்னும் பின் தங்கியே இருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+