Vinayagar chathurthi special: விநாயகர் சதுர்த்தி கல்யாண வீடு கலாட்டா!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் தஞ்சை மாவட்டம் திருவையாறு என்கிற ஊரில், அவ்வூர் மக்களிடையே ஷூட்டிங் நடைப்பெற்று வருகிறது.
சன் டிவியின் விநாயகர் சதுர்த்திக்கான சிறப்பு நிகழ்ச்சியையும் திருவையாறு மக்கள் இடையே, சீரியல் கல்யாண வீடு நடிகர் நடிகைகளை வைத்து ஒரு கேம் ஷோ நடத்தி இருந்தார்கள்.
நடிகர், நடிகைகளுடன் இயக்குநரும் நடிகருமான திருமுருகனும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

வழக்கமான விளையாட்டுக்கள்
பெண்கள்,ஆண்களுக்கு என்று தனித்தனியாக இல்லாமல், சாக்குப் போட்டி, சைக்கிளில் மெதுவாக செல்லும் போட்டி, ஸ்பூனில் எலுமிச்சம் பழம் எடுத்து செல்லும் விளையாட்டு என்று பல்வேறு விதமான போட்டிகளில் சீரியல் நடிகர், நடிகைகள் விளையாடி சிரிக்க வைத்தனர்.இதில் அம்மாவாக, மாமியாராக நடிக்கும் பெண்களும் கலந்து கொண்டதும், சைக்கிள் ஓட்டியதும் சிறப்பு.

திருமுருகன் இயக்குநர்
இந்த சிறப்பு நிகழ்ச்சி நடத்திக் கொடுத்ததே இயக்குநர் திருமுருகன் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தனது சீரியல் சின்னத்திரை நடிகர் நடிகைகளை களத்தில் இறங்கி ஊக்குவித்தார். தானே போட்டியையும், போட்டிக்கான ஆட்களையும் தேர்வு செய்தார். வின்னர், ரன்னரையும் அறிவித்தார்.

இயக்குநர் பந்தா
இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர் ,நடிகர் என்று பல்வேறு திறமைகளை கொண்ட கலைஞன் திருமுருகன். ஆனால், எந்தவித பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கார்.தான் இயக்கும் சீரியல் நட்சத்திரங்களிடம் மிக இயல்பாகப் பழகி, தானும் விளையாட்டை சிரித்து ரசிச்சது ரொம்ப இயல்பாக இருந்தது. இந்த இயல்புதான் திருமுருகன்.

கூல் இயக்குனர்
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி கூல் கேப்டன் என்று சொல்வார்கள்.அது போல சீரியல் இயக்குநர் திருமுருகன் ரொம்பவும் கூல் என்று சொல்லலாம்.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் அன்றன்றைய வேலைகளை கவனமாகப் பிரிச்சு கொடுத்து மேற்பார்வை பார்ப்பதில் வல்லவர். இதனால்தானோ என்னவோ,இவரது செட்டில் எப்போதும் இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் எப்படி திருமுருகன் கலகலப்பாக இருந்தாரோ அப்படித்தான் செட்டிலும் எல்லாருடனும் கலகலப்பாக இருப்பாராம்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications