Vinayagar Chathuthi Special: பிள்ளையாருடன் செல்பி.. ரம்யா வீட்டில் கொழுக்கட்டை வச்சாச்சுங்க!
சென்னை: விநாயகர் சதுர்த்தி. வழக்கமாக டிவிகளில் இந்நேரத்துக்கு சீரியல்கள் களை கட்டியிருக்கும். ஆனால் இன்று திருவிழா என்பதால் மக்களுக்காக என்ற பெயரில் விதம் விதமான சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டுத் தாக்கிக் கொண்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டைதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அவல், பொரி உபரி ஞாபகம். இதெல்லாம் காலாலமாக நடப்பதுதானே.
இன்று நடிகர் நடிகைகளும் கூட தங்களது வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் என்ன பண்றாங்கன்னு தெரியலையே.

மக்கள் ஐதீகம்
விநாயகரை முக்கண் முதல்வன் என்று சொல்வார்கள். எந்த செயலைச்செய்தாலும் விநாயகரைத் தொழுது செய்தால் அக்காரியம் நல்லபடியாக முடியும் என்பது ஐதீகம். மக்கள் நம்பிக்கைதானே இங்கு முக்கியம்.

ரம்யாவும்
நம்ம டிவி காம்பயர் ரம்யாவும் கூட முதல்வன் விநாயகரை காலையிலேயே வணங்கி வழிபட்டு விட்டார் போல. அவரது டிவிட்டருக்குள் போய்ப் பார்த்தால் குட்டிப் பிள்ளையார் சிலையை கையில் தூக்கிப் பிடித்தபடி ஒரு செல்பி போட்டுள்ளார். ஸோ, க்யூட்டாக இருக்கிறது.
|
பிள்ளையாருடன் போஸ்
அதேபோல விநாயகர் சிலையை வைத்து பூஜையும் போட்டுள்ளார். அந்தப் படமும் போட்டுள்ளார். காலையிலேயே கடமையாக எல்லாவற்றையும் செய்து விட்டு பக்திப் பழமாக காட்சி தருகிறார் ரம்யா. நெற்றியில் குங்குமம், மங்களகரம், கையில் விநாயகர், பூஜை என்று பார்க்கவே ரம்யமாக இருக்கிறது.

பாரம்பரியம்
இதேபோலத்தான் பிற நடிகர் நடிகைகளும் கூட. கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் விநாயகரை விதம் விதமாக. சரி மக்களே நீங்களும் கொழுக்கட்டை வச்சாச்சா.. ஜாலியா கொண்டாடுங்க.. டிவியும் பாருங்க.. ஒரே படமா காட்டிட்டிருக்காங்க.












Click it and Unblock the Notifications