Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vinayagar Chthurthi Special: அழகும் மெருகும் மிளிர ஸ்லிம் கொழுக்கட்டை வாணி போஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரன் சீரியல் குடும்பம் விநாயாகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகை வாணி போஜன் வந்திருந்தார். சிவப்பு நிற புடவையில் மிக அழகாக இருந்தார்.

ஒரு தமிழ்ப் படம், ஒரு தெலுங்கு படம் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறினார். முதலில் வாணி போஜனுக்கு புக்கானது தெலுங்கு படம்தானாம்.

தெலுங்கில் இப்போது இன்னும் இரண்டு படங்கள் நடித்துக் கொண்டு இருப்பதாக கூறினார். சன் டிவியின் தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் வாணி போஜன்.

நடிகை வாணி போஜன்

நடிகை வாணி போஜன்

நீலகிரியை சேர்ந்த படுகா மொழி பேசும் பெண்ணான வாணி போஜன், ஆங்கில இலக்கியம் படித்தவர். ஊட்டியில் படிப்புக்கு அருமையான பள்ளிகள் உண்டு.ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்படும் பள்ளியில் படித்த வாணி போஜன், கல்லூரியிலும் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படித்தவர். படிப்புக்கு பிறகு விமான பணிப் பெண்ணாக ஐந்து வருடங்கள் வேலை பார்த்து இருக்கிறார்.

தெய்வமகள் சீரியல்

தெய்வமகள் சீரியல்

மாடல் போல மிக அழகு, மெல்லிய தேகம், பளபளக்கும் சரும பொலிவு என்று விமானப் பணிப் பெண்ணாக தனது அழகைப் பராமரித்து வந்த வாணிக்கு விளம்பரப் படங்களில் நடிக்க அணுகியபோது மிக எளிதில் வாய்ப்பு கிடைத்தது. இதை அடுத்து அமைந்த வாய்ப்புத்தான் தெய்வ,மக்கள் சீரியலின் சத்யா கதாபாத்திரம்.. கதாபாத்திரகமாகவே பிரகாஷுடன் சத்யாவாக வாழ்ந்தார். அதனால்தான் இருவரும் சேர்ந்து பங்கு பெறும் பொது நிகழ்ச்சிகள் ஏராளமாகின.

ஜீ தமிழ் டிவி

ஜீ தமிழ் டிவி

சன் டிவியின் நடிக்க ஆரம்பித்த அதே புதிதில் ஜீ தமிழ் டிவிக்கு லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடித்தார். அதற்கு பிறகு வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு சீரியல் வாய்ப்புக்கள் ஒன்றும் வரவில்லை என்றாலும், விஜய் டிவியின் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றிற்கு நடுவராக இருந்தார். நல்ல கதாபாத்திரம் அது சினிமா அல்லது சீரியலாக இருக்கணும் என்று காத்திருந்தவருக்கு தெலுங்கு சினிமா வாய்ப்பு முதலில் கிடைத்தது.

சன் டிவியில் இன்று

சன் டிவியில் இன்று

இன்று சன் டிவியில் அதே பொலிவியுடன் சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். ரன் சீரியலில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சரண்யாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன் சீரியலுக்காக வாழ்த்து தெரிவித்து இருந்ததாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரண்யா கூறினார்.

எஜமான் படத்தில் நடிகை மீனா மாலையை ரஜினி கழுத்தில் போடுவது போல, சரண்யாவும், வாணி போஜனும் மாற்றி மாற்றி கிருஷ்ணா கழுத்தில் மாலை தூக்கிப் போட்டார்கள். இதை பார்த்து உங்க மனைவி என்ன நினைப்பாங்கன்னு கேட்க, மேலே போயி கேபிள் வயரை கட் பண்ணிட்டு வந்துருவாருன்னு வாணி சொல்லி சிரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+