ஈசிஆர் பண்ணையில் நடிகை.. ஸ்டார் ஓட்டலில் மதுபானம்.. ஆரோக்கியத்தை இழக்கும் நடிகர்கள்.. பிரபலம் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: "குடி, பீடி, லேடி இல்லாதவர் பேடி" என்று ரஜினி சொல்வாரே.. அதுமாதிரிதான் சில நடிகர்களின் வாழ்க்கை இன்றுவரை தொடர்கிறது. இப்படியிருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்? இளம் வயதிலேயே போதிய ஆரோக்கியத்தை விரைவில் இழக்க நேரிடும்" என்று வருத்தத்துடன் கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.

kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், "முத்துக்குமார் என்ற அருமையான பாடலாசிரியர்.. இவர் தன்னுடைய கற்பனை குதிரையை தட்டி விட வேண்டுமானால், ஈசிஆர் கடற்கரை ஓரத்தில் ரிசார்ட்டை புக் செய்து தந்துவிடுவார்கள்..

television vishal actor vishal

மதுவின் துணையோடுதான் பாடல்களை எழுதுவார்.. கடைசியில் மரணமடைந்துவிட்டார்.. மது அரக்கனால் திரைப்பட நடிகர்கள் பலர் அழிந்து போயிருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாம் கட்டுப்படுத்தவே முடியாத சூழலுக்கு போய்விடுகிறார்கள்.

சுருளிராஜன்: எம்ஜிஆருக்கு மதுப்பழக்கம், புகைப்பழக்கம் கிடையாது. ஆனால், எம்ஜிஆருக்கு நிகரான அந்த நடிகர், காபி குடிப்பது போல பிளாஸ்கிலிருந்து ஊற்றி மதுவை குடிப்பார்.. ஷூட்டிங்கிலும் இப்படித்தான் குடிப்பார்.. நடிகர் சுருளி ராஜனும் நாட்டுச்சாராயம்தான் குடிப்பார்.

விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் என்கிறார்கள்.. அப்படின்னா வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே? அவரது அப்பா ஜிகே ரெட்டிக்கு 86, வயசாகுது.. ஜிம்முக்கு போய் கும்முனு இருக்கார்.. ஆனால் 48 வயதில் மகன் விஷால்? பெண்களுடன் தொடர்பு உட்பட பல்வேறு விஷயங்களினால், விஷாலுக்கு உடல் ஒருகட்டத்திற்கு மேல் தாங்காமல் போய்விட்டது. இயற்கையை ஒருபோதும் மறைக்கவே முடியாது. வளர வேண்டிய கலைஞன் மதுவினால் அழிகிறான்.

போதை வஸ்து: திரைப்பட உச்சபட்ச நடிகர் முதல் இளைஞர்கள்வரை இப்போது போதை வஸ்துவையே விரும்புகிறார்கள்.. முதலில் பாலிவுட்டிலிருந்த இந்த பழக்கம், இப்போது கோலிவுட்டை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டது. விஷாலின் உருவத்தை பார்த்தால், மீட்டெடுக்க முடியாத நிலைமைக்கு வந்துடுச்சோ என்று அச்சப்பட வேண்டி உள்ளது.

நடிகர் சங்க கட்டிடத்தில் பல கோடி ரூபாய் பணத்தையும் காணோமாம். மதுப்பழக்கத்துக்கு மேலும் மேலும் ஆளாகி, உடலும் இழந்து, சிந்திக்கும் திறனும் அவருக்கு போய்விட்டதாக தெரிகிறது. சுசித்ராதான், பக்கம் பக்கம் சொல்லுதே.. இவங்க எல்லாம் மது தவிர மற்ற வஸ்துகளையும் பன்படுத்துகிறார்களாம்.

ஷூட்டிங் ஸ்பாட்: நடிகர் கார்த்திக்குக்கு இப்படித்தான் குடிப்பழக்கம் உண்டு.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவே மாட்டார்.. அப்படியே வந்தாலும், போதையில் வந்து படுத்துடுவார். என் நண்பர் திருப்பூரை சேர்ந்த தயாரிப்பாளர், "தீ இவன்" என்று ஒரு படம் எடுத்தார்.. முழுக்க முழுக்க அவுட்டோரில் ஷூட்டிங் நடந்தது. கார்த்திக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டது.

அதில் கடைசி 2 காட்சிகள் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் கார்த்திக் திடீர்னு வரமாட்டேன்னு சொல்லிட்டார்.. தன்னால் நடக்கக்கூட முடியாது, வேற யாரையாவது வைத்து எடுத்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டார்.. இதைக்கேட்டு என்னுடைய நண்பர் அதிர்ச்சி அடைந்து, கடுமையாக போராடி, கார்த்திக்கை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தார்.

தயாரிப்பாளர்கள்: அங்கே ஒரு சேரில் கார்த்திக்கை உட்காரவைத்து, அவரது முகத்தை மட்டும் கேமராவில் எடுத்து, அவரது நடவடிக்கைகள் அத்தனையையும், வேறொரு டூப் போட்டு எடுத்து அந்த படத்தை முடித்தார்.. பல கோடிகளை கொட்டி படம் எடுக்கும் ஒரு தயாரிப்பாளருக்குதான் இந்த வலியெல்லாம் புரியும். பல தயாரிப்பாளர்களை தெருவுக்கு கொண்டு வந்த நடிகர்கள் பலர் உண்டு. நடிகர் சங்கத்தில், தயாரிப்பாளர் சங்கத்தில், விஷால், சிம்பு, தனுஷ் இவர்கள் மீதெல்லாம் புகார்களும் உள்ளன..

பாலாவின் "அவன் இவன்" படத்துக்காக, விஷாலின் கண்ணில் லென்ஸ் மாட்டப்பட்டு, அது கோளாறாகி, தலைவலி வந்துவிட்டதாம்.. 24 மணி நேரமும் தலைவலி என்பதால், மதுவை நாடி செல்ல வேண்டியதாயிற்று,. திரைப்பட நடிகர்களை பொறுத்தவரைக்கும் கட்டுப்பாடான வாழ்க்கை கிடையாது.. இவர்களுக்கு பணம் கொட்டும். 5 ஸ்டார் ஓட்டல்களில் நிரந்தர அறைகள் ஒதுக்கப்பட்டுவிடும்.. தினம் 20, 25 ஆயிரம் செலவுகள் வேற... மது, மாது துணையுடன்தான் அந்த ஸ்டார் ஓட்டல்களில் இருப்பார்கள்.

ஆரோக்கியம்: சில இளம் நடிகர்களின் எதிர்காலம் பல சர்ச்சைகளுக்கு உள்ளாக காரணமே, திட்டமிடாத அவர்களின் வாழ்க்கைதான்,.. குடி, பீடி, லேடி இல்லாதவர் பேடி என்று ரஜினி சொல்வாரே.. அதுமாதிரிதான் இவர்களின் வாழ்க்கை இன்றுவரை தொடர்கிறது. உடம்பு என்னத்துக்கு ஆகும்? போதிய ஆரோக்கியத்தை விரைவில் இழக்க நேரிடும் என்றெல்லாம் பேசியிருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+