போற போக்கைப் பார்த்தா ‘முழுப் படத்தையும்’ போட்டுக் காட்டிடுவாரு போலயே!
சென்னை: கமலின் விஸ்வரூபம் 2 பட நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் நடந்து வருகிறது.
பிக் பாஸ் முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த முறையைவிட இம்முறை போட்டியாளர்கள் அதிக உற்சாகம் இல்லாமல் விளையாடி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பு குறைந்து காணப்படுகிறது.
கமல் வரும் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிகள் மட்டுமே கொஞ்சம் விறுவிறுப்பாகச் செல்கிறது. எனவே, கமலைக் காட்டி டி ஆர் பி-ஐ அதிகப்படுத்தும் நிலைக்கு பிக் பாஸ் தள்ளப்பட்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, தன்னை வைத்து டி ஆர் பி காணும் பிக் பாஸுக்கு பதிலடியாக, தானும் இந்நிகழ்ச்சியைப் பயன்படுத்தி வருகிறார் கமல்.

விஸ்வரூபம் 2:
இதற்காக வாரம்தோறும் தன் அரசியல் பிரவேசம் மற்றும் படவேலைகளுக்காக பிக் பாஸ் மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறார் அவர். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது விஸ்வரூபம் 2 படப் பாடலை பிக் பாஸ் மேடையில் அவர் வெளியிட்டார்.

ஆண்ட்ரியா:
அதன் தொடர்ச்சியாக நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 படத்தின் மற்றொரு பாடலையும், புதிய டிரெய்லரையும் வெளியிட்டனர். இதற்காக அப்படத்தில் நடித்த ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

மகிழ்ச்சி:
அங்கு வைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் அப்பாடலை அவர்கள் பாடிக் காட்டினர். பின்னர் அகம் டிவி வழியே அவர்களுக்கு விஸ்வரூபம் 2 டிரெய்லர் போட்டுக் காட்டப்பட்டது. இதனைப் பார்த்து போட்டியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

கமல் ஹேப்பி:
அதோடு, படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் போட்டியாளர்கள் அனைவருக்கும் விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதியுடன் கூடிய டி சர்ட்டும் வழங்கப்பட்டது. அதனை அணிந்து கமலுக்கு அவர்கள் காண்பித்தனர். இதனால் கமல் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

இதுவும் நடக்கலாம்:
இதை எல்லாம் பார்க்கும் போது, ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாக இருக்கும் இப்படத்தை, முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் போட்டுக் காட்டும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. ஒருவேளை போட்டியாளர்களை படம் பார்க்க வைத்து, அவர்களை வைத்தே படத்தை விமர்சிக்கச் சொல்லி வித்தியாசமாக விளம்பரம் தேடினாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications