Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்ணை வீட்டு நடிகை யார்? வியாக்கியான நடிகரின் அசிங்கமான வேலை! கேரவன் கேவலமும், ரிசார்ட் பார்ட்டியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் எப்போதுமே பெண்கள் கவர்ச்சி பிண்டங்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.. நீண்டகாலமாகவே சினிமாவில் பெண்களுக்கு மேக்கப் போடுவதே ஆண்களாகவே இருந்தனர்.. இப்போதுதான், அந்த கலாச்சாரம் சிறிது மாறியிருக்கிறது.. அதுபோலவே கேரவன் கலாச்சாரமும் இப்போது சகஜமாகிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் புகார் கூறி பதிவிட்டிருந்தார், ரம்யா என்பவர்.. "பெண் ஒருவரை கேரவனுக்கு வர சொல்லி விஜய் சேதுபதி 2 லட்சம் தந்தார்.. உடன் driveக்கு வருவதற்கு 50000 தந்தார். பல வருடங்களாக விஜய் சேதுபதி பயன்படுத்திக்கொண்ட அந்த பெண் இப்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்" என பதிவிட்டு, பிறகு அந்த பதிவினை நீக்கியும் விட்டார்.

Viyakkiyana Actor Caravan senior actress

பாலியல் புகார்கள்

இந்த பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்த விஜய் சேதுபதி, இந்த புகார் ஆதாரமற்றது, அசிங்கமான குற்றச்சாட்டு என்று கோபமாக தந்திருந்தார்.

"என்னை பற்றி கொஞ்சமாக தெரிந்தவர்களுக்கு கூட இந்த புகார் உண்மையில்லை என தெரியும். அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக அப்பெண் இப்படி செய்திருக்கிறார். சில நிமிடங்கள் புகழ் அவருக்கு கிடைத்துவிடுகிறது.. இது பற்றி சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளேன், சட்டப்படி இதனை சந்திப்பேன்" என்றும் சேதுபதி கூறியிருந்தார்.

கசப்பான அனுபவம்

அதேபோல நடிகை தமன்னா தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பற்றி சமீபத்தில் கூறியிருந்தார்.. அதில், "தென்னிந்தியாவில் பெரிய ஸ்டாராக இருப்பவரின் படத்தில் நடித்தேன். அப்போது, சில காட்சிகளில் நடிக்க எனக்கு சங்கடமாக இருந்தது. அதிலும், குறிப்பிட்ட ஒரு காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன்.. உடனே, அந்த நடிகர் கோபப்பட்டு, "ஹீரோயினை மாற்றுங்க" என்றார்.. மறுநாள் அவரே என்னிடம் மன்னிப்பும் கேட்டார்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டிக்கு தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பாண்டியன், "திரைப்படத்துறையில் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது அந்த காலத்திலிருந்தே உள்ளது.. ஹீரோவுடன், அந்த பெண் அட்ஜெஸ்மென்ட் செய்யாவிட்டால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காது,..

சினிமா உலகில் ஒரு பெண் நடிக்க வந்துவிட்டால், இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கவே முடியாது.. அப்படி தப்பிக்க நினைத்தால் வாய்ப்பே கிடைக்காது.."கருப்பாக இருந்தால் நடிகையாகிவிடலாம், ஆனால் கற்போடு நடிகையாக முடியாது" என்று டி.ராஜேந்தர் சொல்வார்..

வியாக்கியானம் பேசும் நடிகர்

இப்போதெல்லாம் கேரவன் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது சாதாரணமாகிவிட்டது.. எனக்கு தெரிந்த ஒரு டைரக்டர், வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பயன்படுத்திக் கொண்டு, 150 ரூபாய்க்கு புடவை எடுத்து தந்து அனுப்பிவிடுவார்.. இதனால் தனக்கு தோஷம், பழி பாவம் எதுவும் வந்துவிடாது என்று நம்பினார்..

இப்படித்தான் ஒரு நடிகர், தன்னுடைய மனைவியையே, தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்.. இத்தனைக்கும் அந்த நடிகர், பெரிய வியாக்கியானம் , தத்துவம் எல்லாம் பேசுவார்.. தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர சொல்லவும், அந்த பெண் இவரை விவாகரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்..


தமன்னா சொன்ன நடிகர் யார்

சினிமாவில் சதை கவர்ச்சிதான் என்றும் தேவையாக இருக்கிறது.. ரஜினி படத்துக்கே தமன்னாவின் காவாலா பாடல்தானே தேவைப்படுகிறது? சினிமாவில் எப்போதுமே பெண்கள் கவர்ச்சி பிண்டங்கள்தான்.. நீண்டகாலமாகவே பெண்ணுக்கு மேக்கப் போடுவதே ஆண்களாகவே இருந்தனர்.. இப்போதுதான், அந்த கலாச்சாரம் சிறிது மாறியிருக்கிறது.. அதுபோல கேரவன் கலாச்சாரமும் சகஜமாகிவிட்டது..

தமன்னாவும் பாலியல் புகார் கூறியிருந்தார்.,. ஆனால், அந்த நடிகரின் பெயரை சொல்லவில்லை.. அப்படி சொன்னால், அந்த நடிகரின் இமேஜ் சரிந்துவிடும், ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் வந்துவிடும்.. மேலும், அந்த நடிகர் வயதானவர் என்பதால், தமன்னாவுக்கும் அவரை பிடிக்கவில்லை..

பண்ணை வீட்டு கலாச்சாரம்

அதேபோல, பண்ணை வீடுகளில் பார்ட்டிகள் நடக்கும் கலாச்சாரமும் சகஜமாகிவிட்டது.. தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட ஹீரோயினுடன், ஹீரோவுக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்பதுதான் முதல் அக்ரிமெண்ட்டாகவே உள்ளது.. இல்லாவிட்டால் ஹீரோயினுக்கு வாய்ப்பு கிடைக்காது.. திரைப்பட உலகில் இதை தவிர்க்க முடியாதது.. பாகவதர் காலத்திலிருந்தே இப்படித்தான் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+