அவரை பார்த்து பார்த்து கதறி அழும் விஜே அர்ச்சனா மகள் ஸாரா.. ஏன் என்னாச்சு? யார் அனுப்பியது?
இவருக்காக விஜே அர்ச்சனாவின் மகள் ஸாரா கதறி கதறி ஆனந்தத்தில் அழுகிறாரே. ஏன் என்னாச்சு
சென்னை: விஜே அர்ச்சனாவின் மகள் ஸாரா இவருக்காக இப்படி அழுகிறாரே ஏன் என்னாச்சு, இந்த வீடியோ தீயாய் பரவி வருகிறது.
சின்னத்திரையில் 23 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. ஜெயா டிவி ஆங்கில் செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
இவர் திருமணமாகி குழந்தை பிறந்தவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு சன் டிவியில் இருந்து விலகினார். இதையடுத்து 2008ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் நிகழ்ச்சியில் நுழைந்த அர்ச்சனா, அங்கு நம்ம வீட்டு கல்யாணம் எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியை 2014 ஆம் ஆண்டு வரை தொகுத்து வழங்கினார். இதையடுத்து 2015ஆம் ஆண்டு ஜீ தமிழில் அதிர்ஷ்ட லட்சுமி எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கே பாக்யராஜ் மற்றும் குஷ்புவுடன் ஒரு நடுவராக பங்கேற்றார். இதையடுத்து 2020ஆம் ஆண்டு வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸில் நுழைந்தார்.

ரசிகர்களின் வெறுப்பு
இந்த நிகழ்ச்சியில் அவர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இதையடுத்து மீண்டும் விஜய் டிவியில் நுழைந்தார். இங்கு காதலே காதலே, ஓல்டு இஸ் கோல்ட் பிளாக் அன்ட் ஒயிட், பரிவட்டம், நம்ம வீட்டு கல்யாணம் ஸ்னேகன் கனிகா ஸ்பெஷல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினார். இதையடுத்து மீண்டும் ஜீ தமிழ் சேனலுக்கே திரும்பிவிட்டார். இது கூட சர்ச்சையானது. விஜய் டிவியிலிருந்து அர்ச்சனாவை விரட்டிவிட்டார்கள் நெட்டிசன்கள் சிலர் விமர்சனம் செய்தனர்.

பேட்டி
ஆனால் ஒரு பேட்டியில் அர்ச்சனா மற்றவர்கள் எப்படி ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு மாறுகிறார்களோ அப்படித்தான் நானும் சென்றேன். இதில் துரத்திவிடுவதற்கு என்ன இருக்கிறது என கேட்டிருந்தார். விஜே அர்ச்சனாவுடன் இணைந்து அவருடைய மகள் ஸாராவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது தாய் குறித்த கருத்துகளுக்கு சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகிறார்.

குழந்தை நட்சத்திரம்
மேலும் தனது சித்தி அனிதாவுடன் சேர்ந்து இன்ஸ்டா ரீல்ஸ் செய்து வருகிறார். 2018 ஆம் ஆணடு சூப்பர் மாம் எனும் நிகழ்ச்சியை தனது 11 வயதில் தொகுத்து வழங்கினார். குழந்தை நட்சத்திரங்களிலேயே 11 வயதில் ஒரு ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கிய மிக இளம் வயது குழந்தை ஸாரா வினித் என்ற பெருமையை பெற்றார்.

டாக்டர் படத்தில்
அது போல் 2021 ஆம் ஆண்டு டாக்டர் எனும் படத்தில் தாய் அர்ச்சனாவுடன் நடித்துள்ளார். பிக்பாஸில் அர்ச்சனா இருந்த போது சமூகவலைதளங்களில் வந்த நெகட்டிவ் கமென்ட்ஸ்களுக்கு ஸாரா வினித் பதிலடி கொடுத்தார். உலகிலேயே என் தாய்தான் சிறந்தவர். அவர் மீதான விமர்சனங்களை என்னால் பொறுத்து கொள்ள முடியாது என்றார். தற்போது ஜீ தமிழில் தனது தாயுடன் சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆக்டிவ்
இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பார். இவருக்கு விஜய் என்றால் மிகவும் நடிக்கும். இந்த நிலையில் ஸாரா வீட்டிற்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் ஒரு சிலை இருந்தது. அது விஜய் சிலையாம். அதை பார்த்ததும் கட்டி அணைத்துக் கொண்டு ஆனந்த கண்ணீர் விடத் தொடங்கினார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications