Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியல் களத்தில் குதித்தார்.. கொழு கொழு அர்ச்சனா.. ரசிகர்கள் செம உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளர்களும் இப்போது சீரியல், சினிமா என நடிப்புக் களத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில், விஜே அர்ச்சனாவும் சீரியலில் அறிமுகமாகிறார்.

இதுவரை இவரை டிவிக்களிலும் டிக் டாக் வீடியோக்களிலும் பார்த்துக்கொண்டிருந்த இவரது ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கிறதாம்.

இவர் முதன்முதலில் டிக் டாக் வீடியோக்களில் காதல் பாடல்களை ரசம் சொட்டச் சொட்ட நடித்து பிரபலமானவர். இவரது கொழு கொழு கன்னம் ,வில் போன்ற புருவம், பெரிய கண்களும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறதாம்.

டிக் டாக் வீடியோக்கள்

டிக் டாக் வீடியோக்கள்

இவர்களின் காதல் பாட்டுக்களில் காதல் ரசம் சொட்ட சொட்ட எக்ஸ்பிரஷன் காட்டி நடித்திருப்பார். அதனை பார்த்த டைரக்டர் மூலமாக தான் இவருக்கு ஆதித்யா காமெடி நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் டிவிக்களில் தோன்றும் போது இவரது டிக் டாக் ரசிகர்கள் இவரை புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.

டிக்டாக்கால் திருப்புமுனை

டிக்டாக்கால் திருப்புமுனை

டிக் டாக்கால் பலரது வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன . பலருக்கு அது பாதிப்பையும் கொடுத்துள்ளது. ஆனால் அர்ச்சனாவைப் பொறுத்தவரை நிறைய பாசிட்டிவ் வைப்ஸ்தான் டிக் டாக் மூலம் கிடைத்திருக்கிறதாம். ரசிகர்கள் நிறைய கிடைத்தனர். டிவியில் அறிமுகமானார். இப்போது சீரியலுக்கும் வந்து விட்டார்.

ஏகப்பட்ட ரசிகர்கள்

ஏகப்பட்ட ரசிகர்கள்

நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு ரசிகர்களும் கிடைத்திருக்கிறார்கள். தற்போது இந்த ஆப் தடை செய்யப்பட்டு இருப்பதால் இதில் பிரபலமாக இருந்த நடிகர்களை காண முடியாமல் அவரது ரசிகர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகு இவர்களுக்கு வரப்பிரசாதமாக இன்ஸ்டாகிராம் அமைந்திருக்கிறது. பழைய டிக் டாக் வீடியோ க்களை இதில் அப்லோட் பண்ணி மீண்டும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார்கள்.

போட்டோஸ்

போட்டோஸ்

அதுமட்டுமல்லாமல் பல மொட்டை மாடி போட்டோக்களையும் எடுத்து அவர்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். அதுபோலதான் அர்ச்சனாவும் இப்போது பண்ணிக் கொண்டிருக்கிறார். டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்தாலும் இவரது காதல் பாட்டுகள் மட்டும் தான் அதில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு சில புகைப்படங்கள்தான் அதில் இடம் பெற்றிருந்தாலும் அதுவும் வேற லெவல் இருக்கிறது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2

இப்போது எல்லா டிவியிலும் சீரியல்களில் பெரும் மாற்றம் தெரிகிறது. கொரோனா காரணமாக பல நடிகர் நடிகைகள் நடிக்க முடியாமல் போகவே சீசன் 2 என்ற பெயரில் பல சீரியல்களை மாற்றி எடுக்கின்றனர். அந்த வரிசையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில், சீசன் 2 வந்து விட்டது. இதில் நடிக்க உள்ளார் அர்ச்சனா. இது அவரது ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸாகும். தங்களது தலைவி சீரியலில் அறிமுகமாவதால் அவர்கள் குஷியாகியுள்ளனராம்.

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

அர்ச்சனாவை சீரியலில் அறிமுகப்படுத்துவதால் கூடுதல் இளைஞர்களை கவரும் என்றும் இந்த டீம் எதிர்பார்த்திருக்கும் போல. இவருக்கு டிக் டாக், இன்ஸ்டாகிராம் மூலமாக பெறும் இளைஞர்கள் பட்டாளத்தை ரசிகர்களாக வைத்திருக்கிறார். அதனால் இந்த சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ஆதரவு கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

காத்திருக்கிறோம்

காத்திருக்கிறோம்

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நெடுந்தொடரில் பங்கேற்பதாக தன் ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார் அர்ச்சனா. இதைக் கேட்டதும் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து இருக்கிறோம். உங்களது அழகான நடிப்பை திரையில் பார்ப்பதற்கு என்றும் கூறி மகிழ்ச்சி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சீரியலை சரவணன் மீனாட்சி, ராஜா ராணி, பாரதிகண்ணம்மா போன்ற வெற்றி படங்களை கொடுத்த பிரவீன் பெண்ணெட் இயக்குகிறார்.

வாழ்த்துகள் குவிகின்றன

வாழ்த்துகள் குவிகின்றன

இந்த சீரியலுக்கான புரோமோ போஸ்ட்டை அவரது இன்ஸ்டாகிராமில் அப்லோட் பண்ணியதும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சில ரசிகர்கள் இந்த சீரியலுக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். வழக்கம் போல் உங்கள் வழியில் உங்கள் சிறந்த மற்றும் அதிக வெற்றியை கொடுப்பீர்கள். உங்களிடமுள்ள திறமைகளை கடின உழைப்பிற்கு உங்கள் வேலையில் நீங்கள் செய்யப் போகிற முயற்சிக்கு, உங்கள் நல்ல எண்ணங்களுக்கு நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமாக நபராக இருப்பீர்கள்.

நடிப்பை தொடருங்கள்

நடிப்பை தொடருங்கள்

பிரகாசிக்கும் அன்பை தொடருங்கள் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள். அதே போல இன்னொரு ரசிகர், வாவ் நீங்கள் உண்மையிலேயே அற்புதமானவர். நான் உங்களை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் நிறைய உயரங்களை அடைந்து விட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எனவே நீங்கள் நிறைய மற்றும் நிறைய திறமையினால் நிறைந்திருக்கிறார்கள்.

கொடி பிடிக்க காத்திருக்கும் ரசிகர்கள்

கொடி பிடிக்க காத்திருக்கும் ரசிகர்கள்

உங்கள் கடின உழைப்புக்கு நான் எப்போதும் பாராட்டுகிறேன். என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் என்றும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் ஆக இருக்கிறது. இந்த மாதிரி இவருக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் வரவேற்போடு இருக்கும் நிலையில் இந்த சீரியலுக்கும் வரவேற்பு இருக்கிறது. சீரியலில் இவரது கேரக்டர் என்னவென்று இன்னும் வெளியே தெரியாத நிலையில் இவரை ஆதரிக்கவும் இவருக்கு கொடி பிடிக்கவும் ரசிகர்கள் கிளம்பிவிட்டார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+