பிக் பாஸ் போய்ட்டு வந்த பிறகு தற்கொலை செய்ய நினைத்தேன்! முக்கிய காரணம் இதுதான்! அர்ச்சனா எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுப்பாளியாக பலருக்கும் பரிச்சயமான விஜே அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்ட பிறகு தற்கொலை செய்ய நினைத்தேன் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதோடு தான் எதற்காக அந்த முடிவு எடுத்தேன் என்பது பற்றியும் அதில் பேசி இருக்கிறார்.

தொகுப்பாளினி என்று சொன்னதும் ஒரு சிலருடைய முகம் டக் என்று நினைவிற்கு வரும் அதில் ஒருவர் தான் விஜே அர்ச்சனா. விஜே அர்ச்சனா விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என பல சேனல்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுக்கும் விதத்தில் இருக்கும்.

television bigg boss archana

90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்ப வரைக்கும் தொகுப்பாளனியாக கலக்கிக் கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்ருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அர்ச்சனா அன்பு ஜெயிக்கும் என்ற கூட்டணியில் இருந்து பேசியது மற்றும் அவருடைய நடவடிக்கைகள் இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

அதற்கு பிறகு அர்ச்சனா எந்த பேட்டி கொடுத்தாலும் அதற்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்களும் வந்து கொண்டே இருக்கிறது. இப்படியான நிலையில் தன்னை பற்றிய நெகடிவ் கமெண்ட்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடிக்கடி பேட்டிகளிலும் இன்ஸ்டாகிராம் லைவிலும் பதிலடி கொடுக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அர்ச்சனா கலந்து கொண்ட போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் போயிட்டு வந்த பிறகு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று என்கிற முடிவு எடுக்கும் அளவிற்கு நான் மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் அர்ஜுன் என்னுடைய தங்கையின் கணவர்தான் என்று கூறி இருக்கிறார்.

television bigg boss archana

என்னுடைய வாழ்க்கையில் நான் எத்தனையோ கஷ்டங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் தொடர்ச்சியாக எந்த பக்கம் திரும்பினாலும் நீ செய்வது தவறு, நீ நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று சொல்வது பிக் பாஸ் போயிட்டு வந்து பிறகு தான் எனக்கு நடந்தது. அப்போது என்னுடைய குடும்பத்தினர் எனக்கு சப்போர்ட்டாக இருந்தனர்.

என்னுடைய தங்கையின் கணவர் எதார்த்தத்தை புரிய வைத்தார். அதற்கு பிறகு முகம் காட்டாமல் பேசுபவர்கள் என்ன வேணாலும் பேசிக்கொண்டு போகட்டும் தைரியம் இருந்தால் அவர்கள் என்னுடைய முகத்துக்கு நேராக பேச வேண்டும், ஒரு இடத்திற்கு நான் போகிறேன் என்றால் அங்கு இருப்பவர்கள் எல்லோருமே என்னிடம் பாசமாக பேசுகிறார்கள்.

எல்லோரும் என்னிடம் அவ்வளவு உரிமையாக பேசுகிறார்கள். ஆனால் இணையத்தில் முகத்தை காட்டாமல் பேசுபவர்களின் வார்த்தைகளுக்கு நான் ஏன் செவி கொடுக்க வேண்டும் என்பது அதற்கு பிறகு தான் எனக்கு தெரிந்தது. முகத்துக்கு நேராக அன்பை காட்டுகிறார்கள் அவர்களுக்கு நாம் இன்னும் அன்பை கொடுப்போம் என்று முடிவெடுத்தேன்.

என்னுடைய மகள் சாரா தொகுப்பாளனியாக வந்தபோது அவரை அதிகமாக ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் என்னை விட என்னுடைய மகள் அதிகமாக மெச்சூரிட்டியாக இருக்கிறார். அது கூட சிலருக்கு கோபத்தை கொடுக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் நாம பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இப்போது அதை எல்லாம் கடந்து வந்து விட்டோம் என்று அந்த பேட்டியில் அர்ச்சனா பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+