ரஜினிகாந்திடம் வெட்கமே இல்லாமல் அதை கேட்டேன்.. ஆனால் 3 வருஷம் காத்திருப்பு! வி.ஜே பாவனா ஓப்பன் அப்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பிரபலமடைந்த பாவனா சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். பாவனா ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகையாக இருக்கும் நிலையில் அவரிடம் தான் ஒரு போட்டோ எடுப்பதற்காக மூன்று வருடங்கள் காத்திருந்ததாக கூறி இருக்கிறார்.
அதோடு மேடையில் தன்னிடம் எதிர்பார்க்காத நேரத்தில் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தையை குறித்த சந்தோஷத்தை பாவனா பகிர்ந்து இருக்கும் நிலையில் இதை நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தொகுப்பாளினி என்று சொன்னதுமே டக் என்று நினைவிற்கு வருபவர்களில் ஒருவர்தான் விஜே பாவனா. அதுபோல பாவனா விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆரம்ப காலகட்டத்தில் பாவனா தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஆனால் இப்போது விஜய் டிவியில் அதிகமாக இவர் காணப்படுவதில்லை. சமீபத்தில் முடிவடைந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு மட்டும் சிறப்பு தொகுப்பாளராக கலந்து கொண்டு இருந்தார்.
ஆனால் இப்போது முழு நேரமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் வைத்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதில் நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகை. இதை எல்லா இடங்களிலும் சொல்லி இருப்பேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட ரஜினிகாந்த் உடன் எடுத்த புகைப்படத்தை நான் பின் பண்ணி வைத்திருக்கிறேன். நான் மூன்று பேரோடு எடுத்த புகைப்படத்தை தான் பின் பண்ணி வைத்திருக்கிறேன்.
அதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மற்றும் டோனியோடு எடுத்த புகைப்படங்களை மட்டும்தான் நான் பின் பண்ணி வைத்திருக்கிறேன். அதே நேரத்தில் ரஜினிகாந்தோடு எப்படியாவது ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டு கொண்டிருந்தேன். அதற்காக எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் நான் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகையாக இருந்தாலும் அவரோடு வேலை பார்க்காமல் நான் அவரிடம் புகைப்படம் கேட்கக் கூடாது என்று பல இடங்களில் தவிர்த்து இருந்தேன்.

ஆனால் கோச்சடையான் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். அப்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நானும் நினைத்த மாதிரியே ரஜினி சாரோடு வேலை பார்த்து விட்டேன். அவரிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அங்கிருந்தவர்களிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டேன். ஆனால் அவரிடம் நான் மேடையில் பேசும்போது என்னால் அங்கு சரியாக பேசவே முடியவில்லை.
என்னுடைய துப்பட்டா கீழே விழுகிறது... நான் அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு பேச்சை தொடங்கும் போது திணறுகிறேன்.. இப்படியாக பல தடைகள் வந்து கொண்டே இருந்தது அதனால் அன்று போட்டோ எடுக்க முடியாமல் ஆகிவிட்டது. அவர் போன பிறகு எனக்கு நானே திட்டிக் கொண்டேன் என்ன பண்ணி வச்சிருக்கே என்று நான் என்னை அன்றிலிருந்து மூன்று வருடமாக ஒவ்வொரு நாளும் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தேன். அதற்கு பிறகு இப்போது லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கும் வாய்ப்பை எனக்கு ஐஸ்வர்யா கொடுத்தார்.

அந்த வாய்ப்பை விட்டு விடக்கூடாது என்று ரஜினிகாந்தோடு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆட்களை எல்லாம் செட் பண்ணி வைத்து விட்டேன். பிறகு இந்த முறை ரஜினி சாரிடம் மேடையில் பேசும்போது நான் திணறாமல் பேசி விட்டேன். அவரே எனக்கு வணக்கம் சொல்லி என்னை பற்றி பேசியது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. அப்போது நான் வெட்கத்தை விட்டு அவரிடம் சார் ஒரு போட்டோ எடுக்கலாமா என்று கேட்டேன். அவர் உடனே எடுக்கலாமே என்று சொல்லிவிட்டார். மூன்று வருட காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது என்று அந்த பேட்டியில் பாவனா பேசியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications