என்ன இப்படி ஓப்பனா பேசிட்டீங்க.. சித்துவை பார்த்து ரசிகர்கள் வியப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமை திறந்தாலே கவர்ச்சி போட்டியாகத்தான் இருக்கிறது.. நடிகைகளுக்குள் போட்டி பலமாக போய்க் கொண்டுள்ளது. களை கட்டியுள்ளது.

மாற்றி மாற்றி இவர்கள் போட்டி போட்டு போடும் போஸ்ட்கள் இணையதளத்தில் வைரலாக இருந்தாலும் தற்போது இன்ஸ்டாகிராமில் விஜே சித்து கூறியிருக்கும் ஒரு கமெண்ட் வைரலாக பரவி வருகிறது.

என்ன இப்படி ஓப்பனா பேசிட்டீங்க சித்து என்று அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி என்னதான் கூறி விட்டார் சித்து. வாங்க பார்ப்போம்.

 பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்து

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்து

விஜேவாக அறிமுகமான சித்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும்போதே பல ரசிகர்கள் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஃபேன் பேஜ் களை உருவாக்கி வருகின்றனர். சீரியல்களில் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம் உள்ளேயும் இவர் ஆக்டிவாக இருக்கின்றார்.

Recommended Video

    Sayyesha Bold reply for Rumours | Arya Sayyesha | LockDown stress buster
     சித்து நிச்சயதார்த்தம்

    சித்து நிச்சயதார்த்தம்

    தற்போது இவரது நிச்சயதார்த்த போட்டோக்களை அப்லோட் பண்ணி இருந்தார். அதை பார்த்த பல ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் இவர் மேலும் சில போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். இவருடைய புது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலர் அழகாக இருக்கிறது வாழ்த்துக்கள் என்றெல்லாம் கமெண்ட் போட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் மட்டும் இவரிடம் கிளாமர் போஸ் எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கிறார்கள்.

     ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள்

    ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள்

    அதற்கு சித்து கிளாமர் போஸ் வேண்டுமென்றால் இரண்டாயிரத்தில் பிறந்தவர்களின் ப்ரோபைலை செக் பண்ணி பாருங்கள் என்று கூறி இருக்கிறார். இவர் இப்படி கமெண்ட் போட்டதும் ரசிகர்கள் பலர் அது ஷிவானி தானா என்று கேட்டு கமெண்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் இப்படி இன்ஸ்டாகிராமில் ஓப்பனாக பேசி விட்டீர்கள் என்று வாயடைத்து போய் இருக்கிறார்கள்.

     வைரலாகிறது போஸ்ட்

    வைரலாகிறது போஸ்ட்

    இவர் அதில் போட்ட கமெண்ட்டும் போட்டோவும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கும் போது இந்த விஷயம் ஷிவானியின் காதுக்கும் சென்றிருக்கிறது. உடனே அடுத்த நாள் அவரும் பதிலுக்கு ஒரு போஸ்ட் போட்டு அதில் 'மத்தவங்கள பத்தி பேசறதுக்கு முன்னாடி முதல்ல உன்னோட முதுகைப் பாரு 'என்று இவர் இப்படி கமெண்ட் போட்டதும் இருவரின் ரசிகர்களும் இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

     சீரியலை விட்டு விலகிய ஷிவானி

    சீரியலை விட்டு விலகிய ஷிவானி

    ஷிவானி தற்போது தான் நடித்துக்கொண்டிருந்த இரட்டை ரோஜா சீரியல் விட்டு வெளியே வந்ததும் அவரை பற்றிய பல வதந்திகள் பரவி வருகின்றன. முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகின் உடன் ஜோடி சேரப் போகிறார் என்று ஒரு வதந்தி வந்தது. அதை அவசரம் அவசரமாக முகின் மறுத்துள்ளார். அதை தொடர்ந்து இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் சீரியலை விட்டு வெளியேறினார் என்றும் ஒரு வதந்தி பரவி வருகிறது

     பிக்பாஸ் வீட்டுக்குப் போகிறாரா

    பிக்பாஸ் வீட்டுக்குப் போகிறாரா

    ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதைப் பற்றி இன்னமும் இவர் வாய்திறக்கவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வரும் இவர் அந்த வீட்டிற்குள் சென்றால் கிளாமருக்கும் ஆட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது என்றும் பல ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். என்ன நடந்தாலும் சரி இன்ஸ்டாகிராமில் இப்போது இவர்கள் இருவருக்குள் போர் தொடங்க ஆரம்பித்திருக்கிறது.

     ரசிகர்கள் ஆர்வம்

    ரசிகர்கள் ஆர்வம்

    இப்போது இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதால் கொளுத்திப் போடவும், வேடிக்கைப் பார்க்கவும் பலரும் வந்து இவர்களது பக்கங்களில் குத்த வைத்துக் காத்துள்ளனர். இந்த மோதலும், சாடலும் எதில் போய் முடியப் போகிறதோ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்ன நடந்தாலும் சரி என்னுடைய கேரக்டரை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன் என்று ஷிவானி அடுத்தடுத்தும் கிளாமர் லுக்கு விட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+