மூக்கு வெடச்சு.. முல்லை சிரிச்சு.. சித்துவை மேடையில் ஏற்றி அழகு பார்த்து.. செம!
சென்னை: எப்பவுமே விஜய் டிவி புதுசு புதுசா எதையாவது பண்ணிட்டு தான் இருக்காங்க. இது பல ரசிகர்களுக்கு பிடித்து இருந்தாலும் சில நெட்டிசன்கள் இதை கலாய்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
அந்த மாதிரிதான் அடிக்கடி விஜய் டிவியில் பிரபலங்களுக்கு திருமணம் முதல் சீமந்தம் வரை மேடையில் நடத்தி அதையும் காசு பார்த்து விடுகிறார்கள். அந்த மாதிரி இப்போ பாண்டியன் ஸ்டோர் சித்துவுக்கும் அவரது வருங்கால கணவருக்கும் மாலை மாற்றி கொண்டாட்டத்தை அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த மாதிரி பண்ணுவது இது புதுசு அல்ல என்றாலும் ஏற்கனவே சரவணன் மீனாட்சி செந்தில் ஸ்ரீஜா தொடங்கி ராஜா ராணி ஆலியா மானசா சஞ்சீவ் வரைக்கும் இந்த மேடையில் பலருக்கு திருமணத்தை நடத்தி இருக்கிறார்கள்.

மைனா நந்தினி
அதுமட்டுமல்லாமல் டி டி மற்றும் மைனா நந்தினிக்கும் இந்த டிவியில் தான் திருமணத்தை தடபுடலாக நடத்தினார்கள் .ஆனால் அது வேற மாதிரி போய்விட்டது .ஆனாலும் இவர்கள் இந்த மாதிரி லவ்ஸ் பண்ணுவதை குறைச்சபாடு இல்லை என்று பல ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். பழைய கதையை பேசாமல் புதிய கதையாக சித்துவின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் என்று அவருடைய ரசிகர்களும் அவருக்கு கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

புருஷனைத் தெரியலையா
அதிலேயும் சில நெட்டிசன்கள் அது என்னமா பின்னாடி வர உங்க வருங்கால புருஷன் உங்களுக்கு தெரியாதா இத நாங்க நம்பனும் சூப்பரா எக்ஸ்பிரஷன் காட்டியே இதே தானே எல்லா நிகழ்ச்சியிலும் எல்லாரும் இப்படியே அதிர்ச்சி அடைந்த மாதிரி எங்களை ஏமாற்றிவிட்டு இருக்கிறீர்களா என்று கலாய்த்து வருகிறார்கள். ஆனாலும் இவருக்கு இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சூப்பர் புரோமோ
இவர்கள் இந்த ப்ரேமோவை பார்த்து இவருக்கு வாழ்த்து மழைகளை பொழிந்து வருகிறார்கள். VJவாக அறிமுகமாகி தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் சித்துவுக்கு சீரியல் வட்டாரத்திலும் சரி இன்ஸ்டாகிராமில் சரி பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது .இவரது திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

முல்லைக்கு நிச்சயதார்த்தம்
அந்த நேரத்தில்தான் தற்போது இவருக்கு எளிமையாக எங்கேஜிமெண்ட் முடிந்திருக்கிறது .அதற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் .சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் வருங்கால கணவருடன் அடிக்கடி போட்டோ சூட்டும் நடத்தி கொண்டுதான் இருக்கிறார். இவ்வளவு பிஸியாக இருக்கும் இவருக்கு தற்போது விஜய் டிவியில் பிரம்மாண்டமாக மேடையில் திருமணத்தை முடித்து இருக்கிறார்கள்.

காதலும் பாசமும்
அந்த மேடையில் இவர் தனது வருங்கால கணவர் மீது வைத்திருக்கும் பாசத்தையும் அவர் யாரும் வைக்காத அளவிற்கு காதலை தன்மீது வைத்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியாக கூறிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அங்கு அவரது வருங்கால கணவர் வருகின்றார். அதைப்பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்து அவரை கட்டிப்பிடித்து தழுவிக் கொண்டு இருக்கிறார் இந்த ப்ரோமோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications