Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னத்தை கிள்ளிய சித்துவின் வருங்கால கணவர்.. வலித்தது என்னவோ ரசிகர்களுக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நிச்சயதார்த்தத்தை போட்டோவை வெளியிட்ட சித்துவின் இன்ஸ்டாகிராமில் அவரது வருங்கால கணவர் செல்லமாக இவரது கன்னத்தை கிள்ளுவது போல ஒரு போட்டோ பதிவிட்டிருக்கிறார்.

Recommended Video

    Sayyesha Bold reply for Rumours | Arya Sayyesha | LockDown stress buster

    அந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது பல ரசிகர்கள் இதற்கு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

    மக்கள் டிவியில் முதல் முதலில் அறிமுகமான சித்து அதன் பிறகு போகாத சேனலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா சேனல்களிலும் இவர் பணிபுரிந்து விட்டார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    மக்களைக் கவர்ந்த முல்லை

    மக்களைக் கவர்ந்த முல்லை

    சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக தற்போது இந்த சீரியலில் முல்லை - கதிர் ஜோடி தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இளைஞர்களையும் ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார்.இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு இந்த சீரியல்கள் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

    காத்திருந்த ரசிகர்கள்

    காத்திருந்த ரசிகர்கள்

    முன்பு நடித்த எந்த சீரியலும் கிடைக்காத பெயரும் புகழும் இந்த சீரியல் மூலமாக இவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் இவருக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் இவரிடம் கேட்டுக் கொண்டிருந்த போது சிறிது காலம் பொறுமையாக இருங்கள் நடக்கும் போது எல்லாம் நடக்கும் என்று மழுப்பலாக பேசி வந்தார். இப்போது திடீரென்று இன்ஸ்டாகிராமில் தன்னுடைய எங்கேஜ்மெண்ட் போட்டோக்களையும் அவரின் வருங்கால கணவரின் போட்டோவையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

    ரசிகர்கள் ஹேப்பி

    ரசிகர்கள் ஹேப்பி

    இந்த சீரியல் இப்ப தான் நன்றாக சூடு பிடித்துக் கொண்டிருக்கும் போது இவர் இணையதளத்தில் தன்னுடைய என்கேஷ்மெண்ட் போட்டோவை போட்டதும் பல ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள். இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். பலர் திருமணம் எப்போது என்று கேட்டு வருகிறார்கள். சித்துவுக்குக் கல்யாணம் என்ற செய்தி பலரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த அளவுக்கு எல்லோருக்கும் பிடித்த செல்லம் இவர்.

    கிள்ளிய வருங்கால கணவர்

    கிள்ளிய வருங்கால கணவர்

    அவரின் நிச்சயதார்த்த போட்டோஸ்கள் வைரலாகப் பரவி வரும் போது அதில் ஒரு போட்டோ வை கண்கொட்டாமல் பார்த்து வருகிறார்களாம். வருங்காலக் கணவர் செல்லமாக கிள்ளுவது ஆக இருக்கிறது. இந்த போட்டோவை பார்த்து பல ரசிகர்கள் கமெண்ட்டுகளாக போட்டு தள்ளுகிறார்கள். இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கும் கதிருக்கும் இப்போதுதான் காதல் உருவாகி ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    வாழ்த்தும் ரசிகர்கள்

    வாழ்த்தும் ரசிகர்கள்

    இந்த நேரத்தில் கதிரை ஸ்டேஷனில் போலீஸ் அடிக்கும்போது முல்லை கதறி அழுவது போன்று சீன் இருக்கு இணையதளத்தில் இவரது ரசிகர்கள் பலர் இவருக்காக மீம்ஸ்களை போட்டு வந்து கொண்டிருந்தார்கள். தற்போது இவரது எங்கேஜ்மென்ட் போட்டோவை பார்த்து உருகி வருகிறார்கள். ஆனாலும் குடும்பங்களில் ஒருவராக முல்லையும் இருப்பதால் சித்துவின் கல்யாணம் அத்தனை பேரின் ஆசிர்வாதத்தையும், அன்பையும் வாரி எடுத்து சித்துவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+