Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்ரா கையைப் பார்த்தீங்களா.. செமையா குத்திருக்காங்க பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சியில் முதல்முறையாக விஜே ஆக அறிமுகமாகி சீரியல்களில் தனக்குன்னு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டு இணையதளங்களில் பல ரசிகர்களை வைத்திருக்கும் விஜே சித்து தான் இப்போ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறார்.

மக்கள் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அறிமுகமாகி அதன் பிறகு இவர் போகாத தொலைக்காட்சி இல்லை என்கிற நிலையில் எல்லா தொலைக்காட்சியிலும் இவர் மாறி மாறி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி ரசிகர்கள் பட்டாளத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில்தான் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க நடிப்புகள் வந்தது அதை உடனே பயன்படுத்திக்கொண்டார். இப்போது நல்ல நடிகையாக வலம் வருகிறார்.

 பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் தொடங்கி சரவணன் மீனாட்சி இப்படி பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு போல் எந்த சீரியலிலும் கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார். இந்த சீரியலில் இவருக்கும் இவருடன் கதிர் கேரக்டரில் நடிப்பவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

 கிராமத்துப் பேச்சு

கிராமத்துப் பேச்சு

இந்த சீரியலில் இவர் காலேஜ் படித்து இருந்தாலும் பட்டிக்காட்டுப் பெண் போல பேச்சு வழக்கும் அமைதியின் சொரூபமாக ரொம்பவும் நல்ல பொண்ணாக நடித்து இருப்பது ரசிகர்களிடம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சீரியல்களில் மட்டும்தான் இவர் அமைதியான பொண்மாக நடித்திருக்கிறாராம். ஆனால் செட்டில் எல்லாரையும் ஒரு வழி பண்ணி விடுவாராம்.

 கலாய்க்க ஆரம்பிச்சா அவ்வளவுதான்

கலாய்க்க ஆரம்பிச்சா அவ்வளவுதான்


எப்பவும் எல்லாரையும் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக சுற்றி வருவதுதான் இவரது ப்ளஸ் பாய்ண்ட். இவருக்கு ஏதாவது கஷ்டம் என்றால் தனியாக காரில் அமர்ந்து கொள்வாராம் . அதுவே சந்தோஷமாக இருந்தால் அனைவரிடமும் சந்தோசத்தை பகிர்ந்துகொண்டு ரொம்பவும் ஜாலியாக இருப்பாராம்
இவர் வால்தனம் பண்ணுவதை யாராலும் அடிச்சிக்கவே முடியாது.

 வாலுத்தனம் ஜாஸ்தி

வாலுத்தனம் ஜாஸ்தி

இவர் காலேஜ் படிக்கும்போதும் சரி அதற்குப் பிறகும் சரி எப்பவும் பிரண்ட்ஸோட தியேட்டரில் படம் பார்க்க சென்றால் பூமர் சாப்பிட்டுட்டு அதை தியேட்டரில் சேரில் ஒட்டி வைத்து விடுவாராம். அதில் யாரும் தெரியாமல் உட்கார்ந்தால் அவர்கள் கதி அவ்வளவுதான். அதுமட்டுமில்ல சூட்டிங்கிலும் சில டைம்ல இந்த மாதிரி சேட்டை தனமும் குறும்புகளும் செஞ்சுகிட்டு தான் இருப்பாராம்.

 அப்பா பிடிக்கும்

அப்பா பிடிக்கும்

சிறுவயதிலிருந்தே இவருக்கு இவருடைய அப்பா என்றால் ரொம்ப பிடிக்குமாம் .அவர் ஒரு போலீஸ் என்பதால் அவருடைய டிரஸ்சை மாட்டிக்கொண்டு ரொம்ப ஜாலியா விளையாட்டு கொண்டு இருப்பாராம். முதல்முதலாக ஸ்டேஜ் ப்ரோக்ராம் பண்ணும்போது பல நெகட்டிவ் கமெண்ட்கள் இவரை பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். முதலில் இந்த மாதிரி கமெண்ட் களுக்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்தாராம் சித்ரா.

 திறமையே வெல்லும்

திறமையே வெல்லும்

ஆனால் பின்பு கமெண்டுக்கு பதில் சொல்லாமல் தன்னுடைய முன்னேற்றத்தில் மட்டுமே கவனமாகவும் தன்னுடைய திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதில் கவனமாக இருந்திருக்கிறார்.அதனால் தான் இன்று இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்கும் அவர் இதே தாரக மந்திரத்தை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

 மொய்க்கும் ரசிகர்கள்

மொய்க்கும் ரசிகர்கள்

இணையதளங்களில் இவற்காக பல ரசிகர்கள் பேஐ்களை ஓபன் பண்ணி இருக்கிறார்கள். இவர்களுடைய ரசிகர்களிடம் இவருக்கு நல்ல மரியாதையும் இருக்கிறது. நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகி கொண்டு வருகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சீரியல் மூலமாக இவருக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். இணையதளம் மூலமாக இளைஞர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

 கையைப் பாருங்க

கையைப் பாருங்க

இவர் அறிமுகமானது தொகுப்பாளர் பணி மூலமாகத்தான் என்பதால் அந்தப் பணி மீது அதிக மரியாதையும், பக்தியும் வைத்துள்ளார். அதை எப்படி வெளிப்படுத்தியுள்ளார் தெரியுமா.. அவரது கையில் ஒரு மைக் டாட்டூ போட்டு இருக்கிறார். இந்த டாட்டூ தெரியிற மாதிரி இவர் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார். இந்த போட்டோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சூப்பர்ல.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+