சித்ராவுக்காக.. இப்படி போஸ்ட் போட வேண்டியதாப் போச்சே.. உருகிய ரசிகர்கள்!
சென்னை: ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்தோஷமாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த பிறந்தநாளில் சித்ராவின் புகைப்படத்திற்கு படையலிட்டு கண்ணீரோடு ரசிகர்கள் போட்ட பதிவுகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அவரு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ரா கடந்த வருடம் தற்கொலை செய்து இறந்து விட்டார்.
அவருடைய மறைவை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் அந்த சோகத்தில் இருக்கும் நிலையில் அவருடைய பிறந்தநாளை கனத்த இதயத்தோடு கண்ணீரோடு கொண்டாடி இருக்கிறார்கள் .

வருத்தத்தில் ரசிகர்கள்
இது வரைக்கும் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இவருக்காக பரிசுகளை வாங்கி அனுப்பி வைத்த ரசிகர்கள் இந்த பிறந்தநாளுக்கு தங்களுடைய வருத்தத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜே சித்ரா முதல் முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகி காமெடி சீரியல் சின்ன பாப்பா பெரிய பாப்பா வில் காமெடி நட்சத்திரமாக தனது நடிப்பை வெளிக் காட்டி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்தார்.

சீரியல் பிரபலம்
அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் தனக்கான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார் இந்த சீரியலில் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமான இவரை ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார் இவர் செய்யும் குழந்தைத்தனமான சேட்டைகளை ரசிக்கும் ரசிகர்கள் இவருக்காக நாளுக்கு நாள் அதிகரித்து வந்தனர்.

எளிய முறையில் நிச்சயதார்த்தம்
இந்த நிலையில் இவரது நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்ற போது கூட இவரிடம் செல்லமாக கோபப்பட்ட ரசிகர்கள் அதிகமானோர். பல நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் இவருடைய ரசிகர்களுக்கு இவர் அவர்களின் வீட்டில் ஒரு நபராக தான் இருந்து வருகிறார் .அந்த அளவிற்கு அனைவரிடமும் பாசமாக பழகி வந்த இவருக்கு ரசிகர்கள் அதிகமானோர் இருந்தாலும் இளைஞர்களும் இவருக்கு ரசிகர்களாக இருந்தனர்.

திறப்பு விழாக்களில் அசத்தல்
நடிகராக மட்டுமல்லாமல் மாடலிங்கிலும் கலக்கிக் கொண்டிருந்தார் .அதிகமான கடை திறப்பு கோவில் பங்க்ஷன் களிலும் இவர் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நேரடி தொடர்பிலும் இருந்திருக்கிறார். இவர் ஒரு மனநல மருத்துவம் படித்திருந்தாலும் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி விடுவதால் இவர் கூட நடித்த நடிகைகள் அனைவரிடமும் ஜாலியாகவே இருப்பதனால்தான் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சின்ன சின்ன சேட்டைகளை கூட அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்.

செலபிரேஷன்
கடைசியாக நடந்த பிறந்தநாள் விழாவிற்கு கூட தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உள்ள ரசிகர்கள் மற்றும் இவருக்கு ஃபேன்ஸ் பேஜ் வைத்திருக்கும் ரசிகர்கள் அனைவரையும் ஒன்றாக வரவழைத்து பார்ட்டி வைத்து செலபிரைட் பண்ணி இருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடீரென பிறந்தநாள் கொண்டாடி ஒரு சில மாதங்களிலேயே இவர் இறந்துவிட்டார்.

கண்ணீரில் ரசிகர்கள்
ஆனால் இந்த வருடம் அதே பிறந்தநாளுக்கு இவருக்கு எப்போதுமே விஷ் பண்ணிக் கொண்டிருந்த ரசிகர்கள் கண்ணீரோடு விஷ் பண்ணி போஸ்ட் போட்டிருக்கிறார்கள் .எல்லா வருடமும் சரியாக 12 மணிக்கு நாங்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுப்போம் ஆனால் இந்த வருடம் எங்களால் முடியவில்லை என அவருடைய போட்டோக்கு மாலை அணிந்து இப்படி போஸ்ட் போடும் நிலைமை வந்துவிட்டது என அவருடைய ரசிகர்கள் கண்ணீரோடு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications