Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்ரா சித்ரா.. கண்ணீரை அள்ளி வீசிய "கால்ஸ்".. ரசிகர்கள் கதறல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த விஜே சித்ரா நடித்திருந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை பார்த்து கதறுகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

இன்ஸ்டாகிராமில் கவலையோடு பலர் போஸ்ட் போட்டு வருகின்றனர். இதனைப் பார்க்கும்போது மேலும் வேதனை அளிப்பதாக இருக்கிறது என்று பலர் கமெண்ட் களையும் போட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென்று மரணம் அடைந்தாலும் அவர்களுடைய ரசிகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

அவர் இல்லை என்ற உண்மையை பலர் நம்ப முடியாமல் தவித்து வருகிறார்கள் .தினமும் அவருடைய ரசிகர்கள் அவருடைய போட்டோக்களை தங்களுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி வருகிறார்கள். அந்த அளவிற்கு அவர் மீது பாசத்தோடு இருக்கும் ரசிகர்கள் தற்போது உருக்கமான பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்கள்.

கால்ஸ் படம்

கால்ஸ் படம்

அவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் முதல்முறையாக கால்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் .இந்தத் திரைப்படத்திற்காக அவரும் அவருடைய ரசிகர்களும் ஆர்வமுடன் காத்திருந்தனர் .இந்த திரைப்படம் லாக்டோன் க்கு முன்பாகவே வெளியிடப்பட வேண்டியது. இந்த லாக்டோன் காரணமாக இதன் வெளியீட்டு விழா லேட் ஆகிவிட்டது .

டிரைலருக்கு வரவேற்பு

டிரைலருக்கு வரவேற்பு

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு பெரும் வரவேற்பையும் விஜே சித்துவின் ரசிகர்களின் அனுதாபத்தையும் பெற்றிருந்தது .அதன் ஆடியோ வெளியீடு நேற்று நடைபெற்றது .இதில் அவரது பெற்றோர்கள் கலந்து கொண்டனர் .இந்த வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

கண்ணீர் வீடியோ

கண்ணீர் வீடியோ

அதுவும் அவருடைய ரசிகர்கள் கண்ணீரோடும் கவலையோடும் இந்த வீடியோக்களை அப்லோட் பண்ணி வருகிறார்கள். அதில் இந்த திரைப்படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டு நடிக்கிறீர்கள் அதுமட்டுமல்லாமல் இதற்காக எவ்வளவு ஆர்வமோடு காத்திருந்தீர்கள் என்பது ரசிகர்களாகிய எங்களுக்கு தான் தெரியும் வெற்றிகரமாக திரைப்படத்தை வெளியிடும் நாளில் அதை பார்ப்பதற்கு தான் நீங்கள் இல்லை என்று கவலையோடு பதிவிட்டு வருகிறார்கள் .

நிஜத்திலும் இப்படி ஆயிருச்சே

நிஜத்திலும் இப்படி ஆயிருச்சே

அதுவும் சிலர் கடைசியில் அந்த திரைப்படத்தில் நீங்கள் நடித்தது போலவே உங்களது சொந்த வாழ்க்கையும் மாறிவிட்டதே என்று கண்ணீரோடு தெரிவித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் கதை என்ன என்பது பலருக்கு தெரியா விட்டாலும் அந்த ட்ரைலர் மூலமாக அந்தத் திரைப்படத்தில் இறந்து விடுவார் என்றுதான் தெரிகிறது .அதில் அவரது அம்மா மார்ச்சுவரியில் உட்கார்ந்து அழுவது போலவே கடைசியில் சித்துவின் அம்மா அழுகின்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது .

மர்மம்

மர்மம்

அது அவருடைய லைஃப் லவே ரியல் ஆகவே நடந்து விட்டதே என்று பலர் வேதனையோடு தெரிவித்து வருகிறார்கள். சித்துவின் இறப்பில் பல்வேறு முடிச்சுகள் அவிழ்ந்து வந்தாலும் புதுப்புது திருப்பங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவருடைய இறப்பு பற்றி இன்னமும் உண்மையான காரணம் தெரியாமல் அனைவரும் தவித்து வரும் நிலையில் அவருடைய ரசிகர்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்பது இணையதளங்கள் மூலமாக தெரிகிறது.

கண்ணீரில் ரசிகர்கள்

கண்ணீரில் ரசிகர்கள்

அவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் கூட சித்ராவின் பெற்றோர்களுக்கு கால் பண்ணி பேசி வருகிறார்களாம் .தற்போது சித்ராவின் பெற்றோர்களுக்கு அவருடைய ரசிகர்கள் தான் ஆறுதலாக இருந்து வருகிறார்கள். விஜே சித்ராவுக்கு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

பாசம் குறையல

பாசம் குறையல

ஆனாலும் அவர் இல்லை என்ற போதிலும் அவர்களுடைய பாசம் இன்னும் குறையவில்லை என்று தான் தினமும் அவருடைய ஓல்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தங்களுடைய கவலைகளை தெரிவித்து வருகிறார்கள். என்னதான் ஆனாலும், நாட்கள் கடந்தாலும் கூட சித்ராவின் நினைவுகள் இன்னும் ரசிகர்களை விட்டுப் போகவில்லை என்பதே உண்மை. அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு போயுள்ளார் அவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+