முகப்பரு பிரச்சனையால் கடன் எல்லாம் அடைச்சிட்டேன்.. சேனலில் தான் முடிவெடுத்தாங்க.. Vj தீபிகா பளிச்
சென்னை: விஜே தீபிகா தான் முகப்பரு பிரச்சனையால் பாண்டியன் ஸ்டோர் சீசன் 1 சீரியலிருந்து விலகியது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் தான் விலக வேண்டும் என்று முடிவெடுத்தது சேனல் தரப்பினர்தான். அதே நேரத்தில் எனக்கு வந்த முகப்பரு பிரச்சனையால் என்னுடைய கடன் எல்லாம் அடைந்து விட்டது என்று அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
ஒரு சிலருக்கு என்னதான் திறமை இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதற்கு சரியான வாய்ப்பு கிடைப்பது கிடையாது. அதற்காக பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ஒருவர்தான் விஜே தீபிகா. இவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி பக்கத்தில் உள்ள கிராமம்தான்.

கிராமத்தில் பிறந்த தீபிகா திருநெல்வேலியில் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது தான் அங்கு பரியேறும் பெருமாள் திரைப்படம் சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அப்போது அந்த படத்தில் சின்ன கேரக்டரில் தீபிகாவும் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஸ்கூல் காலேஜில் கல்ச்சுரல் ப்ரோக்ராம்களில் கலந்து கொண்டு வந்த தீபிகாவிற்கு நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.
அதற்கு பிறகு மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் தங்கி படித்திருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பார்ட் டைமில் சினிமா வாய்ப்புக்காக அலைந்து இருக்கிறார். அந்த நேரத்தில் தான் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் பல போராட்டங்களுக்குப் பிறகு அவர் நடிக்க தொடங்கி இருந்தாலும் அவர் மக்கள் மனதில் தொடங்கிய நேரத்தில் தான் அவருக்கு முகப்பரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
அதனால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ப்ரோமோக்களில் தீபிகாவை அதிகமாக திட்டி இருக்கிறார்கள். இவருடைய முகம் அழகாக இல்லை முகத்தில் அதிகமான முகப்பரு இருக்கிறது என்று பலர் சொல்லி வந்ததை தொடர்ந்து சேனல் தரப்பில் இருந்து இவருக்கு பதிலாக வேறு ஒருவரை மாற்ற சொல்லி இருக்கிறார்கள். ஆனால் சீரியல் தரப்பில் இருந்து தீபிகாவின் முகப்பரு வெளியே தெரியாத அளவில் பல்வேறு வேலைகளை செய்து இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு கட்டத்தில் எதுவும் செட் ஆகவில்லை, நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகமாக வருகிறது என்ற நேரத்தில் தான் இவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைத்திருக்கிறார்கள். இது தீபிகாவிற்கு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தீபிகா வருத்தத்துடன் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
அதுவரைக்கும் தீபிகா முகப்பருவை வைத்து கிண்டல் செய்து திட்டி தீர்த்த ரசிகர்கள் கூட அதற்கு பிறகு தீபிகாவிற்கு சப்போர்ட் செய்ய தொடங்கிவிட்டார்கள். இணையத்திலும் அவர் ட்ரெண்டாக தொடங்கியதை தொடர்ந்து அவருக்கு அதிகமான பிரமோஷன் கிடைத்திருக்கிறது. ஒன்றரை வருடங்களாக பெரிதாக எந்த சீரியல் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றாலும் இவருடைய youtube வீடியோக்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு மற்றும் இவருடைய பிரமோஷனுக்கு கிடைத்த வருமானம் போன்றவற்றை வைத்து அவர் இத்தனை வருடங்களாக இருந்த கடன் எல்லாவற்றையும் அடைத்திருக்கிறார்.
தீபிகாவின் அப்பாவும் அம்மாவும் விவசாயம் பார்த்து தான் வருகிறார்கள். தீபிகாவிற்கு இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் இரண்டு அக்காகளையும் திருமணத்திற்கும் கடன் வாங்கி அவருடைய அப்பா திருமணம் செய்திருந்தாராம். ஆனால் தன்னுடைய முகப்பரு பிரச்சனையால் தான் பிரபலமானதை தொடர்ந்து தனக்கு வந்த வருமானத்தால் தான் அவ்வளவு கடனையும் அடைத்து விட்டேன் என்று பேட்டி ஒன்றில் மனந்திறந்து பேசி இருக்கிறார்.
பிரச்சனை வருகிறது என்று பலர் துவண்டு போயிருக்கும் நிலையில் அந்த பிரச்சனை மூலமாகவே இவருக்கு ஒரு நல்லதும் நடந்திருக்கிறது.. இது எப்படியோ போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று இவர் தன்னுடைய மைனசை பிளஸ் ஆக மாற்றி கடனை எல்லாம் அடைத்திருக்கிறார் ஆனாலும் தன்னுடைய முகப்பரு பிரச்சனை ஒரு வழியா சரியான நேரத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு பதிலாக ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரி அந்த சீரியலில் இருந்து விலக மீண்டும் தீபிகாவே ஐஸ்வர்யாவாக அந்த சீரியலில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications