என்ன ஐஸ்வர்யா.. ஆடி மாசம் ஜாலியா இருந்தியான்னு கேட்டாங்க.. இதுக்கு என்ன பதில் சொல்றது.. விஜே வேதனை
சென்னை: என்ன ஒரு மாசம் ஜாலியா இருந்தியான்னு கேட்டாங்க .இதற்கு என்ன பதில் சொல்றது என சங்கடத்தில் வேதனை அடைந்ததாக விஜே ஐஸ்வர்யா தெரிவித்தார்.
பிரபல தொலைக்காட்சியில் விஜே பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றிய விஜே ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் கலந்து விட்டார். அவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜேவாக இருந்த போது நிறைய பேசிக் கொண்டிருந்தேன்.

தற்போது திருமணமாகி இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துவிட்டதால் 2 ஆண்டுகளாக பேசாமல் வீட்டில் இருக்கிறேன். என் பசங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் கலகலவென பேசிவிட்டு அமைதியாக இருந்தது மன உளைச்சலாக இருந்தது.
ஆனால் இப்போது தேற்றிக் கொண்டுவிட்டேன். விஜே அர்ச்சனா அக்காவை பார்த்துதான் நான் விஜே ஆக வேண்டும் என இந்த பணிக்கு வந்தேன். இப்ப இருக்கும் விஜேக்களுக்கும் அர்ச்சனா அக்காவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. விஜே அர்ச்சனா அக்கா ரொம்ப சிம்பிளா இருப்பாங்க. இப்போ இருக்கும் விஜேக்கள் கொஞ்சம் ஆட்டிடியூட் காட்டுகிறார்கள்.
நான் பார்த்தவரை அப்படிதான் இருக்கிறது. பொதுவாகவே பெண்கள் என்றால் ஓவரா பண்ணுவாங்க, அதிலும் மீடியா பெண்கள் என்றால் கேட்கவே வேண்டும் என சிலர் நினைப்பார்கள். உண்மையில் மீடியாவில் இருக்கும் எல்லா பெண்களும் அப்படியில்லை. ஆண் விஜேக்கள் மாதிரி பெண் விஜேக்கள் நீண்ட காலம் தாக்குப் பிடிப்பதில்லை.
இதற்கு காரணமே கல்யாணம் ஆகிவிட்டால் பெண் வீடியோ ஜாக்கிகள் வேண்டாம் என கருதுகிறார்கள். எத்தனை பேர் கல்யாணம் ஆகி விஜேக்களாக இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்களுக்கு தேவை அவுட்புட்தானே. அதில் கல்யாணம் ஆனவர்களாக இருந்தால் என்ன ஆகாதவர்களாக இருந்தால் என்ன
நான் பணியாற்றிய காலத்தில் இருந்த ஒரு விஜே கூட இப்போது பணியில் இல்லை. இதுக்கு மேல அசிங்கப்பட எதுவுமே இல்லை என்பதால்தான் நான் வெளியே வந்தேன். ஒரு சின்ன மேடைக்கு போனால் கூட முகத்தை பார்க்கிறார்கள். திறமையை பார்ப்பதே இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்கிறார். ஆனால் அது போல் பார்ப்பதில்லையே.
எந்த இடத்திற்கு போனாலும் அதிலும் குறிப்பாக மீடியா துறையில் ஆண், பெண் பாரபட்சம் இருக்கிறது. நேரலையில் சில கேள்விகள் சங்கடப்படும்படியாக இருக்கும். எனக்கு திருமணமாகி சில நாட்கள் கழித்து நிகழ்ச்சிக்கு வந்தேன். எனக்கு வழக்கமாக போன் செய்யும் ஒருவர் என்ன மேடம் ரொம்ப நாளா ஜாலியா இருந்தீங்களா என கேட்டார்.
அவரின் கேள்விக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நானும் அவரை சமாளித்துக் கொண்டே நிற்கிறேன். அவர் விடுவதாக இல்லை. இதற்கெல்லாம் நான் எப்படி பதில் சொல்ல முடியும். இவருக்கு பதில் சொல்லிவிட்டு எப்படி என் குடும்பத்தை எப்படி பார்ப்பேன். இப்படி பல சங்கடங்கள் இருக்கும் என ஐஸ்வர்யா தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications