இப்படி தூங்க விடாம செஞ்சா எப்படி ஜாக்குலின்.. ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்
சென்னை: இலைமறைகாயாக பாதி கவர்ச்சியாகவும் பாதி ஹோம்லியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்த ஜாக்லின் இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால் எப்படி எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியும் புலம்பி தவிக்கிறார்கள் ரசிகர்கள் .
சீரியல்களை விட இப்பெல்லாம் செம ஹாட்டாக இருப்பது நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள்தான்.. படு ஹாட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது ஒவ்வொரு போஸ்களும்.
சினிமா ஹீரோயின்களுக்கு போட்டியாக சின்னத்திரையில் கதாநாயகிகளாக நடிப்பவர்களும் நாளுக்கு நாள் இணையதளத்தில் ரனகளம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

போட்டோவுக்கு போட்டி
நடிகைகளுக்குப் போட்டியாக தொகுப்பாளினிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு விதம் விதமாக போஸ் கொடுத்து அசத்துகிறார்கள். இவர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டமும் கூடிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் நடிக்கும் நடிகர்களை விடவும் இவர்களை தினமும் ரசிகர்கள் பார்ப்பதால் மட்டுமல்லாமல் இணையதளங்களிலும் இவர்கள் ஆக்டிவாக இருக்கிறார்கள்.

க்யூட் சிரிப்பழகி ஜாக்லின்
விஜய் டிவி மூலம் பிரபலமானவர் ஜாக்லின். படு க்யூட்டான சிரிப்புக்குச் சொந்தக்காரர். நம்ம வீட்டுப் பொண்ணு தோற்றம் இவருக்கு பொருத்தமாக இருப்பதால் யாருக்குமே இவரை ரொம்ப் பிடித்துப் போய் விடும். ஜாக்லின் சீரியல்களிலும் இணையதளங்களிலும் படுஆக்டிவாகவும் ஹாட்டாகவும் இருக்கிறார். இவருடைய அவுட்டோர் போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

குறும்பு நடிப்பு
இவர் முதன்முதலில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலமாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். கல்லூரி கதையில் இவருடைய குறும்பான நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து இருக்கிறார்கள். இவருடைய அழகான படபட வென்ற பேச்சுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர்.

தேன்மொழி அசத்தல்
இவர் கனா காணும் காலங்களைத் தொடர்ந்து ஆண்டாள் அழகர் மற்றும் தற்போது தேன்மொழி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். கலக்கப்போவது யாரு சீசன் களில் இவர்தான் தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவருடைய குழந்தைத்தனமான பேச்சை பார்த்து பலர் கலாய்த்து இருக்கிறார்கள். விஜய் டிவி புகழ் தர்ஷன் உடன் 3 சீசனிலும் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

ஜாக்லின் ராசி சூப்பர்
வடிவேலுவின் பாணியில் அவரை அடித்தவர் எல்லாம் பிரபலமானதை போல இவரை கலாய்த்தவரல்லாம் பிரபலம் ஆகி விட்டார்கள். அந்த அளவிற்கு ராசியானவராக இவர் இருந்து கொண்டிருக்கிறார். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தேன்மொழி பிஏ சீரியலில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய செல்லமான குறும்பால் அனைவரையும் கட்டி இழுத்து இருக்கிறார்.

ஜாலியா இருப்போம்
தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அதனால் பலர் இவரை கலாய்த்தாலும் அதை நினைத்து கவலைப்படுவதே இல்லை. தற்போது இந்த சீரியலில் இவருடன் நடிக்கும் சித்தார்த்துக்கும் நல்ல காம்பினேஷனுடந் இப்பதான் சீரியல் சூடு பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் இவருடன் நடிக்கும் பாட்டியின் செல்லமான பேத்தியா இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பாட்டி வைக்கும் ரொமான்ஸ் கேம்ஸ்
அதுமட்டுமல்லாமல் அந்த பாட்டி ரொமான்ஸ் கேம்களில் இவருக்குப் போட்டி எல்லாம் வைத்து இந்த சீரியல் கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது. எப்பவும் அழுதுகொண்டிருக்கும் சீரியல்களை காட்டிலும் இந்த மாதிரி ஜாலியான சீரியல்களை பார்ப்பதால் ரசிகர்களுக்கு பிடிக்கிறது. குழந்தைகளும் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார்.

மாடர்ன் லுக்
சீரியலில் இவர் ஹோம்லியாக புடவை உடுத்திக் கொண்டு நடிப்பதால் அதே புடவையில் பல புகைப்படங்களை எடுத்திருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இவர் வெளியில் டி-ஷர்ட்டும் டைட் ஜீன்ஸும் போட்டுகிட்டு கலக்கலான போட்டோக்களை எடுத்திருக்கிறார் .அதையும் இன்ஸ்டாகிராமில் அவர் தட்டி விடுவதும் ரசிகர்கள் இவரை எக்குத்தப்பாக ரசித்து வருகிறார்கள்.

ரசித்து கலாய்க்கும் ரசிகர்கள்
அங்கங்கள் எல்லாம் தெரியும் படி இவர் போட்டிருக்கும் போட்டோவை பார்த்து பல ரசிகர்கள் தூக்கம் கெட்டு போய் விட்டோம் என்று புலம்புகிறார்கள். இதற்கு மேலும் சில நெட்டிசன்கள் இவரை விதவிதமாக கலாய்க்கிறார்கள். ஆனால் யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலைப்படாத ஜாக்லின் இந்த மாதிரிக் கமெண்ட்களுக்கு திருப்பி ரிப்ளே பண்ணுவதே இல்லையம். அதுமட்டுமல்லாமல் இவருக்கு வரும் பேட் கமெண்ட்களை இவர் யோசித்து கூட பார்க்க மாட்டாராம்.












Click it and Unblock the Notifications