தாயாக மாறிய மணிமேகலை.. பணிவிடை செய்யும் கணவர்.. குவியும் வாழ்த்துக்கள்.. கூடவே அட்வைஸும்
சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக பிரபலம் அடைந்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிகமான ரசிகர்களின் மத்தியில் விஜே மணிமேகலை பிரபலம் அடைந்திருக்கிறார்.
அதுபோல மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஹூசேன் சமூக வலைத்தளத்திலும் பலருக்கும் பரிட்சயமாக இருந்தாலும் அவரும் ஒரு டான்ஸ் மாஸ்டராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டு இருக்கும்போது அங்கு ஒரு குழந்தையை வைத்து செய்த செயல்கள் பலரையும் வியக்க வைத்து இருக்கிறது.
90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பிடித்த தொகுப்பாளர் வரிசையில் இடம் பிடித்த வி.ஜே மணிமேகலை இப்போது 2-கே கிட்ஸ்கள் விரும்பிப் பார்க்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு பலருடைய மனதை கவர்ந்திருந்தார். சின்னத்திரையில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்களை மணிமேகலை தன்னை பாலோ பண்ண வைத்திருக்கிறார்.

மூன்று சீசன்களாக குக் வித் கோமாளியில் கலந்து கொண்ட மணிமேகலை தற்போதைய சீசனில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் இப்போது மீண்டும் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதுபோல இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டாலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தன்னுடைய காதல் கணவர் ஹூசேனோடு அடிக்கடி தன்னுடைய youtube சேனல் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
அதில் அடிக்கடி செல்லும் இடங்கள் பற்றியும், மட்டுமல்லாமல் தான் என்ன செய்தாலும் அதை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் மணிமேகலையின் வீடியோஸ் பல நேரங்களில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு குழந்தையை இவரிடம் கொடுத்து அதற்கு உடைமாற்ற கொடுத்து இருக்கிறார்கள்.

அப்போது அந்த குழந்தை மணிமேகலையை பார்த்ததும் அழுதது. ஆனால் ஹூசேனை பார்த்ததும் அந்த குழந்தை அழுகையை நிறுத்தி விட்டு சிரிக்கிறது. இதை பார்த்து கடுப்பான மணிமேகலை அந்த குழந்தையோடு க்யூட்டாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அந்த குழந்தைக்கு பார்த்து பார்த்து அவர் செய்யும் வேலைகளை பார்த்து ரசிகர்கள் சீக்கிரமாக உங்க வீட்டிலும் இதே போல நிகழ்வு நடக்க வேண்டும் என்று வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
மணிமேகலை மற்றும் ஹூசேன் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் இரண்டு பேரின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தான் இவர்கள் தனியாக வாழ்ந்து வருகின்றனர். பல வருடங்களாக இவர்களுடைய பெற்றோர் இவர்களிடம் இன்னும் பேசாமல் இருந்தாலும் அடுத்தடுத்து இவர்கள் நிஜ வாழ்க்கையில் சாதித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் தங்களுடைய சொந்த ஊரில் பிரம்மாண்டமான வீட்டை ஒன்றையும் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கு காரணமே அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்றும் சில வதந்திகள் வெளியாகி இருந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மணிமேகலை அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் சந்தோஷம்தான். அதற்காகத்தான் நாங்களும் எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இவர் இப்போது ஒரு குழந்தையை கையில் வைத்து மேனேஜ் பண்ண முடியாமல் திணறுவதை பார்த்து பலர் கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோல மணிமேகலைக்கு குழந்தை பிறந்து விட்டால் அவருடைய youtube சேனலில் தினமும் fun தான் இருக்க போகுது. இரவலாக கிடைத்த குழந்தைக்கே இந்த நிலைமை என்றால் மணிமேகலையின் குழந்தை என்ன பாடுபட போகிறதோ? என்றும் சிலர் அனுதாபப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications