முத்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வர்ணனைக்கு இங்கிலாந்து போயிருக்கார்....!

Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவி டி20 கிரிக்கெட் போட்டிகள், மற்ற கிரிக்கெட் போட்டிகள்... இப்போது இங்கிலாந்தில் நடந்து கொண்டு இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை எப்போதும் தமிழில் வர்ணனை கொடுத்து ஒளிபரப்பி வரும்.

இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி போன்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டை தமிழில் வர்ணனை செய்வார்கள்.

இவர்களுடன் அவ்வப்போது ஆர். ஜே.பாலாஜி, முத்து இவர்களும் சேர்ந்து வர்ணனையில் கலக்குகிறார்கள். இனிது இனிது கிரிக்கெட் விளையாட்டு.அதனினும் இனிது அதனைத் தமிழில் வர்ணனை செய்வதை கேட்பது என்பது போலத்தான் நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்ஜெ பாலாஜி

ஆர்ஜெ பாலாஜி

விஜே.முத்துவும், ஆர்ஜே பாலாஜியும் வர்ணனை செய்வதும், அருகில் இருக்கும் வீரர்களுடன் ,அவர்களை கலாய்ப்பதும், அவர்கள் இவர்கள் இருவரையும் கலாய்ப்பதும் என்று கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனை நிகழ்ச்சித்தமிழில் கேட்பது ரொம்பவே நன்றாக இருக்கும். அப்படித்தான் நடந்து முடிந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கூட இருந்தது.

கிரிக்கெட் உலகக்கோப்பை

கிரிக்கெட் உலகக்கோப்பை

இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகின்றன. இந்த போட்டியை தமிழில் வர்ணனை செய்வதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவியின் மூலமாக நம்ம முத்து இங்கிலாந்து சென்றிருக்கிறார்.

வளர்ச்சி ஏணியில் முத்து

வளர்ச்சி ஏணியில் முத்து

முத்து முதலில் புது யுகம் டிவியில் ஸ்ரீ ரஞ்சனியுடன் பிரபலங்களை நேர்காணும் ஷோ ஒன்றை நடத்தி வந்தவர். பின்னர் சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சியை நட்சத்திராவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவி

ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவி

முத்துவுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டு.சின்ன வயதில்மிகவும் ஆர்வமாக கிரிக்கெட் விளையாடியும் இருக்கிறார். இவருக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வேலை கிடைத்து நான்கு வருடங்களுக்கு மேலிருக்கும். இதில் வேலை கிடைத்ததில் பெரிய லெவலுக்கு போயிருக்கிறார் முத்து.

தமிழ் கலாச்சாரம்

தமிழ் கலாச்சாரம்

முத்து இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் . உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் டிவியின் சிறப்பு வர்ணனையாளராக லண்டன் சென்றிருக்கும் முத்து, தினமும் தமிழ் பாரம் பரியப்படி அவ்வப்போதுவேட்டி சட்டை உடுத்திக் கொள்கிறாராரம். அங்குள்ள சரவண பவன் ஹோட்டலைத் தேடிப்பிடித்து நம் நாட்டு கலாச்சார உணவுகளை சாப்பிட்டு வருகிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+