இவங்க தான் எல்லாம்! 3 வருஷம் ஆச்சு! குழந்தையுடன் போட்டோவை பகிர்ந்து நெகிழ்ந்த பிரியங்கா
சென்னை: விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கும் விஜே பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது இவர்தான் என்று ஒரு பெண் குழந்தையோடு எடுத்த புகைப்படத்தை பிரியங்கா பகிர்ந்து இருக்கிறார்.
விஜே பிரியங்காவிற்கு அறிமுகமே தேவையில்லை. சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரியங்கா சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். விஜய் டிவியில் பல வருடங்களாக இருக்கும் பிரியங்கா பற்றிய சர்ச்சைகளும் வதந்திகளும் இணையத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த செய்தி இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதல் திருமணம்
பிரியங்கா ஏற்கனவே விஜய் டிவி பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களில் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அதற்கு பிறகு சில வருடங்களாகவே பிரியங்கா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். அப்போது வசி என்பவரை காதலித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எளிமையாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரியங்கா அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார்.
விஜே பிரியங்காவின் கணவர் பதிவு
அப்போது பிரியங்காவின் கணவர் யார் என்ற தேடல் இணையத்தில் அதிகமாக இருந்தது. அதற்கு பிறகு தன்னுடைய கணவரோடு ஹனிமூன் செல்லும் புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்டு கொண்டிருந்தார். அதுபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரியங்காவின் கணவர் எமோஷனலாக ஒரு "போஸ்ட் போட்டு இருந்தார். அதில் மிஸ்ஸஸ் பிரியங்கா தேஷ்பாண்டே வசி நீங்க எப்போ மீண்டும் வர போறீங்க?" என்று கேள்வி கேட்டிருந்தார்.
பிரியங்கா பற்றிய சர்ச்சை
அந்த பதிவை பார்த்ததும் கல்யாணம் முடிந்து ரெண்டு மாசம் தானே ஆகிறது அதற்குள் இருவரும் பிரிந்து இருக்கிறார்கள் என்று கேள்விகளும் எழுந்து வந்தது. அதுபோல பிரியங்கா கல்யாணத்திற்கு பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க மாட்டார் என்ற சர்ச்சைகள் ஆரம்பத்தில் இருந்த நிலையில் அதுவெல்லாம் பொய் என்று சொல்லும்படியாக பிரியங்கா தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சி
நேற்று கூட ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடக்கம் குறித்த ப்ரோமோவை வெளியிட்டு இருந்தார். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் பிரியங்கா ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில் பிரியங்காவிற்கு காலில் அடிபட்டு அதற்காக கட்டு போடப்பட்டிருக்கிறது. அதோடு நின்று கொண்டு புகைப்படமும் எடுத்து பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா ஒரு குழந்தையோடு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பிரியங்கா பதிவு
அந்த புகைப்படம் பற்றிய அவருடைய பதிவில் "மூன்று வருடங்களாக அவள் வளர்வதை பார்க்கிறேன். மூன்று வருடங்களாக அவள் அன்பினால் குணமடைந்தேன். மகிழ்ச்சியான மூன்று வயது அன்பே" என்று குறிப்பிட்டு இருக்கிறார். அந்த குழந்தை பிரியங்காவின் தம்பியின் மகள் தான். தம்பியின் மகள் "சியா மேல்தான் தனக்கு அதிக பாசம், அவள் தான் என்னுடைய உயிர், என்னுடைய மகிழ்ச்சியை மீட்டு தந்தவள்" என்று பல இடங்களில் பிரியங்கா பேசியிருக்கிறார். பிரியங்கா தம்பியின் மகள் சியா குறித்து அவர் பதிவிட்ட பதிவிற்கு பிரியங்காவின் கணவர் சியாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications