விஜய் டிவி பிரியங்காவிற்கு பப்ளிசிட்டி வேணுமா? விஜய் டிவி வந்ததுக்கே இப்படி? வேணாம் வசி: பிரபலம்
சென்னை: விஜய் டிவி பிரபலம் விஜே பிரியங்கா, எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருவதுடன், தன்னை பற்றின பேச்சு எப்போதும் இருக்கும்படியாகவே லைம்லைட்டில் இருந்து வருகிறார்.. அந்தவகையில், இவரது இன்ஸ்டா போஸ்ட்டுகள் கூட வைரலாகி விடுகின்றன. இதுகுறித்துதான், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கருத்து கூறியிருக்கிறார்.
சமீபத்தில் விஜய் டிவி புகழ் பிரியங்காவிற்கு திருமணம் நடைபெற்றது. தன்னுடைய நீண்ட நாள் காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. இவர் இலங்கை வாழ் தமிழர்களின் ஆதரவை பெற்றவர்.. இவரும் டி.ஜே.வாக இருப்பவர்..

இந்த திருமண நிகழ்வுகள் இணையத்தில் வைரலானது.. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பிரியங்காவிற்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றதால், தன்னுடைய 2வது திருமணம் பற்றி யாருக்குமே சொல்லாமல் ரகசியமாக வைத்து இருந்தார்...
ஐ லவ் யூ
திருமணத்துக்கு பிறகு விஜய் டிவியிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமான தகவலை பிரியங்கா வெளியிட்டிருந்தார்.. எனினும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் பிரியங்கா.. தன்னுடைய வீடியோக்கள், போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில்கூட கணவர் வசி தன்னுடைய இன்ஸ்டாகிராமில், பிரியங்காவுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டு, "எப்போ வர்றீங்க" என கேட்டு இருந்தார். அதற்கு பிரியங்கா, "ஐ லவ் யூ! இன்னும் சில நாட்களில் வந்துவிடுகிறேன்" என கமெண்ட்டில் பதிலளித்திருந்தார்..
இதைப்பார்த்த ரசிகர்கள், இப்பதானே கல்யாணம் ஆச்சே? அதற்குள் பிரிவா? சீக்கிரமா கிளம்பி போங்க பிரியங்கா என்று உரிமையுடன் பதிலளித்தனர்.. மேலும் சிலர், அதுக்குள்ள விவாகரத்தா? என்றும் கிண்டலாக கேட்டிருந்தனர்..
பிரியங்கா விவாகரத்தா
பிறகு பிரியங்கா, காலில் கட்டு போட்டிருக்கும், போட்டோவை ஷேர் செய்து, காலில் எலும்பு முறிவு என பதிவிட்டிருந்தார்.. இதைப்பார்த்த ரசிகர்கள், Get well soon, take care என்றெல்லாம் அக்கறையுடன் கமெண்ட் பதிவிட்டனர்..
இந்நிலையில், பிரியங்கா பற்றி மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்தபோது, "பிரியங்கா விவாகரத்தா? என்று இணையத்தில் செய்திகள் வைரலாகி கொண்டிருக்கின்றன..
பிரியங்கா மிஸ்ஸிங் என்று திடீரென அவரது கணவர் போஸ்ட் போடுகிறார்.. பப்ளிசிட்டிக்காகவே இப்படியெல்லாம் இவர்கள் செய்றாங்களோன்னு தெரியல.. இங்கே சென்னையில் விஜய் டிவி பிரியங்காவை வரவேற்று கொண்டிருக்கிறது.
எதுக்கு இந்த பப்ளிசிட்டி?
அதாவது விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பிரியங்கா சென்னை வந்துள்ளார்.. அதுதான் உண்மை.. இதை யாரும் புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும், பிரியங்கா விவாகரத்தா என்று கிளப்பி விட்டுக் கொள்கிறார்கள்..
நிகழ்ச்சிக்காக பிரியங்கா சென்னைக்கு வந்துள்ளார் என்பதுதான் ஒன்லைன் செய்தி.. அதை இப்படி போட்டு குழப்பி, அதை ரசிகர்கள் வேறு மாதிரியாக புரிந்து கொண்டு, அதை நாங்கள் வேறுமாதிரியாக பேசி? எதுக்கு இந்த வேலையெல்லாம்? இப்படியொரு பப்ளிசிட்டி தேவையாமா பிரியங்கா & வசி.. வேண்டாம்!, நிறுத்திக்கோங்க" என்று தெரிவித்துள்ளார்.
தம்பி மகள் போட்டோ
ஆனாலும், பிரியங்கா வழக்கம்போல் இன்ஸ்டாவில் படு ஆக்டிவ்வாகவே இருந்து வருகிறார்.. நேற்றுகூட தன்னுடைய தம்பி மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை பதிவிட்டிருந்தார்.. தம்பி மகளுக்கு இப்போது 3 வயதாகிவிட்டது.. குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி, போட்டோவுடன் பிரியங்கா ஷேர் செய்திருந்தார்.. இந்த க்யூட் போட்டோவை பார்த்த ரசிகர்களும், பிரியங்காவின் மருமகளுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications