கலக்கல் சேலையில்.. மாட்டு வண்டி பக்கத்தில்.. ரசிகர்களை புலம்ப வைத்த VJ ரம்யா
சென்னை: ரம்யா சுப்பிரமணியன்.. அப்படி சொன்னா யாருக்கும் தெரியாது.. விஜே ரம்யா இல்லாட்டி விஜய் டிவி ரம்யா.. பளிச்சுன்னு தெரியும்.
இவர் மூத்த வழக்கறிஞர் கே சுப்பிரமணியன் மற்றும் இல்லத்தரசி வசந்தி ஆகியோருக்கும் மகளாக சென்னையில் பிறந்தார். பிஎஸ்பிபில பத்தாம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை முடித்தவர். பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புகளை ஆதர்ஷ் வித்யாலயா வில் முடித்துள்ளார்.
சென்னை எம்ஓபி வைஷ்ணவ் கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு ரம்யா ஜர்னலிஸம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் முதுகலைப்பட்டம் படித்துள்ளார்.

மிஸ் சென்னை பைனல்
அழகுக்காரி ரம்யா.. அவரது அழகின் மெயின் பாயின்ட்டே அந்த சிரிப்புதான்.. உதடு பிரியாமல் சிரிச்சாபோதும்.. எல்லோருக்கும் அப்படி ஒரு உற்சாகம் தொத்திக்கும். ரம்யா 2004இல் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று இறுதிப்போட்டி வரை வந்தார். பட்டம் கிடைக்காவிட்டால் என்ன விஜய் டிவியின் பின்னர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுக்கும் வாய்ப்பு வந்தது. கப்பென்று பிடித்துக் கொண்டு மேலே வந்து விட்டார்.

கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள்
அதைத் தொடர்ந்து உங்களில் யார் அடுத்த பிரபுதேவா மற்றும் ஸ்டார் விஜய் யில் நம்ம வீட்டு கல்யாணம் கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள் அப்படி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். ரம்யா 2014இல் அமர்ஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணம் 10 நாட்களில் முடிந்து விட்டது. இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து விடலாம் என்று முடிவெடுத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

பெரிய திரையிலும்
2015ஆம் ஆண்டிற்கு பிறகு ரம்யா திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தார். அதே ஆண்டில் BIG FM 92.7 இல் RJஆனார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான WE இதழில் உடற்பயிற்சி சிறப்பு இதழில் அட்டை படங்களில் இடம் பிடித்தார். அவரது திறமைக்கு இது ஒரு அங்கீகாரமாக கிடைத்தது. இப்ப இருக்கிற சூழ்நிலையில நிகழ்ச்சி தொகுப்பாளர் களுக்கும் மக்களிடத்தில் ஒரு தனி வரவேற்பு உள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அழுத்தமான முத்திரை
அப்படிதான் சின்னத்திரை தொகுப்பாளர்களில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் ரம்யா. இவர் தன்னுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதத்தில் பல ரசிகர்கள் இவருக்கு பக்கபலமாக இருக்கின்றார்கள். சமீபகாலமாக சில பட புரமோஷனுக்கு தொகுத்து வழங்கிவருகிறார் .சில படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Recommended Video

மாடு மிரண்டுராதா
இப்போது டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கிற இன்ஸ்டாகிராமில் எல்லா கதாநாயகிகளும் போட்டோக்களை அப்லோட் பண்ணுவது போல இவரும் விதவிதமாக போட்டோ எடுத்து அப்லோட் பண்ணி கொண்டிருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராமில் மாட்டுவண்டி பக்கத்தில் இருக்கும் சில பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்துட்டு ரசிகர்கள் பயணம் செய்ய தயாராகி விட்டீர்களா என்று கமெண்ட் பண்ணி இருக்காங்க. மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு.. பாட்டுப் பாடாத குறையாக கலக்கலாக காட்சி தருகிறார் ரம்யா.












Click it and Unblock the Notifications