Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த இடத்தில் டாட்டூ.. ரம்யாவைப் பார்த்துப் பார்த்து பொறாமைப்படும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: போட்டோஷூட் போட்டியில் தற்போது களமிறங்கி இருக்கும் விஜே ரம்யா போட்டுள்ள ஒரு போஸ்ட் ரசிகர்களிடம் படு வைரலாகியுள்ளது.

விதவிதமாக போட்டோ அப்லோட் பண்ணி ரசிகர்களை சூடேற்றிக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ரம்யாவும் வித்தியாசமான போட்டோக்களைப் போடுவது வழக்கம். ஆனால் இப்போது அவர் போட்டிருக்கும் ஒரு டாட்டூ போட்டோ படு சூடாக இருக்கிறது.

இந்த போட்டோ ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அதை விட இந்த டாட்டூவை வரைஞ்சவன் கொடுத்து வச்சவன் என்றும் குறும்புத்தனமாக ரசிகர்கள் கமெண்ட் போட்டுக் கொண்டுள்ளனர்.

 ஹீரோயின் போல கலக்கல்

ஹீரோயின் போல கலக்கல்

சின்னத்திரை சினிமா கதாநாயகிகளை விடவும் இப்போ எல்லாம் தொகுப்பாளர்களும் போட்டோ சூட்டில் பிஸியாக இருந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாக்களில் பெயர் வாங்குவதை விடவும் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற இணையத்தளங்களில் பல நடிகைகள் கொடிகட்டி பறந்து வருகிறார்கள் .அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் களம் இறங்கி இருக்கிறார்.

 விஜய் டிவி புகழ் விஜே ரம்யா

விஜய் டிவி புகழ் விஜே ரம்யா

இவர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சி சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர். சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரம்யா. இவர் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான அவர்களில் ஒருவராக இருக்கிறார் இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சில பட வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

 சினிமாவிலும் கலக்கல்

சினிமாவிலும் கலக்கல்

தொகுப்பாளராக மட்டுமல்லாமல் தற்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கும் சங்க தலைவன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கருணாஸ் நடிகை சுவலட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர் .இந்த படத்தை இயக்குனர் மணிமாறன் இயக்கி வருகிறார் .வெற்றிமாறன் தயாரித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் அஜித்துடன் மங்காத்தா ,ஓ காதல் கண்மணி ,மாசு என்கிற மாசிலாமணி வனமகன் அப்படி பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

 மாஸ்டர் ரம்யா

மாஸ்டர் ரம்யா

அதை விட முக்கியமாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் ரம்யா இருக்கிறார். விசுவல் கம்யூனிகேஷன் இல் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். இருந்தாலும் இவருக்கு நடிப்பை விடவும் தொகுப்பாளராக பணியாற்றுவது மனதுக்கு பிடித்ததாக இருக்கிறதாம். இவர் ஏற்கனவே ஒரு சினிமா பைத்தியம் என்று தன்னை கூறியிருக்கிறார். எல்லா படங்களையும் வாராவாரம் சத்தியம் தியேட்டரில் சென்று பார்த்துவிடுவது வழக்கம்.

 நிறைய பிடிக்கும்

நிறைய பிடிக்கும்

சினிமாவை பற்றிய நியூ அப்டேட் இவருக்கு நன்றாகவே தெரியுமாம். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் இந்தி இங்கிலிஷ் எல்லா மொழிப் படங்களையும் பார்த்து விடுவாராம். அது தான் இவருக்கு ரொம்பவும் பிடித்தது. இவர் எல்லா படங்களையும் மனசுக்கு புடிச்சு பார்க்கிறது தால் தான் தன்னால் இதில் சிறப்பாக பணியாற்ற முடிகிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் 2004இல் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றுள்ளார்.

 கில்லாடி பெண்கள்

கில்லாடி பெண்கள்

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா , நம்ம வீட்டு கல்யாணம் மற்றும் கேடி பாய்ஸ் கில்லாடி பெண்கள் இப்படி பல சிறப்பான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் இளைஞர்களுக்கு இவர் மீது எப்போதுமே ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அது போதாதென்று இவர் தற்போது உடலை குறைத்து செம ஹாட்டாக வேற மாறி இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவர் அடிக்கடி கொடுக்கும் டயட் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களும் வைரலாக பரவி வருகிறது.

 பிட்னஸ் பிடிக்கும்

பிட்னஸ் பிடிக்கும்

இது போதாதென்று இப்போது இவர் யூடியூப் சேனல் ஓபன் பண்ணி அதிலும் டயட், உடல் பராமரிப்பு குறித்து ரசிகர்களிடம் பேசி வருகிறார். இது இவரை பாலோ பண்ணும் ரசிகர்களுக்கு ஊக்கமாக இருக்கிறதாம். பல பெண்களுக்கு முன்னோடியாகவும் உதாரணமாகவும் தான் இருப்பதால் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் இவர் அதை நினைத்து கவலைப்படாமல் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

 அடுத்த திருமணம் எப்போது

அடுத்த திருமணம் எப்போது

வெகு விமர்சனமாக நடைபெற்ற இவரது திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு இவர் மேலும் மன உறுதியோடு தனது வேலைகளில் கவனத்தைச் செலுத்தி வருகிறார் . பல ரசிகர்களும் அடுத்தது திருமணம் எப்போது என்று கேட்டு வரும் நிலையில் பாப்போம் நல்ல ஒரு ஆண் கிடைத்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோ சூட்டும் நடத்திக்கொண்டிருக்கிறார்.

 கலகல போஸ்கள்

கலகல போஸ்கள்

பல நடிகைகள் இதே பாணியை கையாண்டு கொண்டிருக்கும் போது ரம்யாவும் அந்த ஆயுதத்தை கையிலெடுத்து களத்தில் குதித்து தனக்கான ஒரு முத்திரையை பதித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இவருடைய போட்டோஸ்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. சேலை கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக இவர் கொடுத்திருக்கும் வைரல் போஸ்கள் வேற லெவல் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் இவை பெற்றுள்ளன.

 இன்னொரு முகம்

இன்னொரு முகம்

சின்னத்திரை தொகுப்பாளர்கள் பலர் இருந்தாலும் ஒரு சிலரே இளைஞர்கள் மனதில் சட்டென்று இடம் பிடிப்பார்கள். அப்படி ஒருவர்தான் ரம்யா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விருது நிகழ்ச்சிகள் திரைப்பட நிகழ்ச்சிகள் என பல மேடைகளில் தன் திறமையால் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார். அது போதாது என்று பதிமூன்று ஆண்டுகள் முறைப்படி பரதம் கற்று அரங்கேற்றமும் செய்திருக்கிறார். இதிலேயும் தன்னுடைய திறமையை முழுமையாக வெளியிடவில்லை என்று கருதி அடுத்து பிட்னஸ் பிரேக் என்ற இன்னொரு முகமும் இருக்கிறது என்று அதுதொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளையும் வென்றிருக்கிறார்.

 சூப்பர் ரோல் மாடல்

சூப்பர் ரோல் மாடல்

இவரைப் பார்த்து பல பெண்களும் பளு தூக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அது இவருக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறதாம். சிலர் இந்த முயற்சி ரொம்பவும் ஆபத்தானது தசைப்பிடிப்பு ஏற்பட்டு விடும். கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு விடும் என்று பயந்து கொண்டிருக்கும் போது அதெல்லாம் ஒன்றும் ஏற்படாது என்று இவர் அவர்களுக்கு மன தைரியத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்து பெருமையாக எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் போது இவர் நான் செய்வதெல்லாம் ஒரு சின்ன சாதாரணமான செயல் தான்.

 இதுதான் சாதனை

இதுதான் சாதனை

என்னை பார்த்து ஒரு அறுபது வயது பெண் ஐஏஎஸ் ஆபீசர் இந்த முயற்சியில் ஈடுபட்டு மேடையில் தோன்றினார். அதை பார்க்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது. அப்போததான் நான் சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்று என் மனதுக்குள் ஒரு ஊக்கமும் கிடைத்தது. அந்த ஒரு நிம்மதி போதும். இதில் நான் தொடர்ந்து இன்னமும் சிறப்பாக செய்வேன் என்றும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.. லைஃப்ல இவ்வளவு பிஸியாக இருந்தாலும் இவர் போட்டோ ஷூட் நடத்துவதிலும் மனதிற்கு ஆனந்தமாகவும் சின்னதா ரிலாக்ஸ் ஆகவும் இருக்கிறது.

 அசத்தல் போட்டோ

அசத்தல் போட்டோ

அதனால் அதையும் அப்பப்ப செஞ்சு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அவரது போட்டோக்கள் சில நேரம் ரசிகர்களை தூங்க விடாமல் செய்து விடும். கொஞ்சம் கூடுதல் மசாலா சேர்ந்து விடுவதுதான் இதற்குக் காறணம். சேலை அணிந்து தன்னாலும் கவர்ச்சியில் கலக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் லேட்டஸ்ட் போட்டோ மூலம். அவரது மார்புப் பகுதியில் குத்தியிருக்கும் டாட்டூவை முழுக்க வெளிக்காட்டியபடி ஒரு போட்டோவைப் போட்டுள்ளார் ரம்யா.

 ஹாட்டான டாட்டூ

ஹாட்டான டாட்டூ

அதைப் பார்த்ததும் குவிந்து விட்டனர் ரசிகர்கள். அந்த பச்சையில் என்ன இருக்கு.. எதைப் பற்றியது அந்த பச்சை என்று ஆராய்ச்சியில் குதித்து விட்டனர். சூப்பர்டா, லவ்லி என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு புளகாங்கிதமடைந்துள்ளனர். சிலர் கவர்ச்சியா இருக்கே என்றும் சொல்லி சிலாகித்துள்ளனர். ஆனால் யார் என்ன சொன்னாலும் கொஞ்சமும் கவலைப்படாமல் தனது வேலைகளில் சீரியஸாகவே மூழ்கியுள்ளார் ரம்யா.. தொடர் முயற்சிகள்தானே அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முக்கியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+