தல அஜீத்துக்கு போட்டியாக பிரியாணி சமைக்கும் விடிவி கணேஷ்!
சென்னை: இருட்டு பட ஷூட்டிங்கின்போது நடிகர் விடிவி கணேஷ் வகை வகையாய் சமைத்ததில் பிரியாணியும் சமைத்து அசத்தினாராம்.
சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் சுந்தர் சி தனது இருட்டு படம் பற்றி நிறைய விஷயங்களை நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இருட்டு படத்தின் டீசர் வெளியான நிலையில் இதில் சுந்தர் சி தன்னுடன் நடித்த நடிகர் விடிவி காணேஷுடன் சன் டிவியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

சில்வர் ஜூப்ளி
சுந்தர் சி சினிமா உலகில் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதையும் நினைவு கூர்ந்து இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தது குறிப்பிடத் தக்கது. இந்த 25 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களை சுந்தர் சி இயக்கி உள்ளார்.

ஜின் பேய் படம்
இருட்டு படத்தின் டீசர் வெளியாகிவிட்ட நிலையில் இது ஜின் என்கிற ஒரு வகையான பேய் படம் என்று கூறப்படுகிறது. ஜின் என்கிற வகையான திகில் பேய் குறித்து கூகுள் சர்ச் செய்து கதை திரைக் கதை எழுதி படம் ஷூட்டிங் செய்யப்பட்டது என்றும் சுந்தர் சி கூறி இருக்கிறார்.

பாம்பே பிளட்
ஒரு பிணத்தை தோண்டி எடுத்து அதை பாம்பே பிளட் என்று ஆய்வு செய்து எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன் கதை திரைக்கதை எழுதி இருக்கிறார் என்றும் கூறி இருக்கிறார். தானே ஆச்சரியப்பட்டு என்ன சார் இப்படி எல்லாம் இருக்கிறதா என்று கேட்டதாகவும். உண்மையில் கூகிள் சர்ச்சில் இருக்கிறது என்று இந்திரா சவுந்திரராஜன் கூறியதாகவும் சுந்தர் சி கூறினார்.

நாயகிகள் மூவர்
சாக்ஷி, தன்ஷிகா உள்ளிட்ட மூன்று பேர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர் என்றும் விடிவி கணேஷ், தான் இருவரும் ஒரே காஸ்டியூமில் அசத்தி உள்ளதாகவும் சுந்தர் சி கூறி உள்ளார். இதற்குள் இடைமறித்த விடிவி கணேஷ் காஸ்டியூம் வேட்டையாடு விளையாடு கமல்ஹாசன் ஸ்டைலில் அசத்தலாக இருந்ததாக கூறினார்.

குஷ்பூ துறுதுறு
குடும்பத்தில் குஷ்பூ எப்போதும் துறுதுறு என்று இருப்பார் என்றும், அவரைப் போல தனது சின்ன பெண் துறுதுறு என்று இருப்பார், பெரிய பெண் தன்னை மாதிரி அமைதியாக இருப்பார் என்றும், குஷ்பூ எதுவும் வேலை இல்லை என்றால் பீரோவில் இருக்கும் துணிகளை எடுத்து போட்டு மடிக்க ஆரம்பித்து விடுவார் என்றும் கூறினார்.

கணேஷ் பிரியணி
செட்டில் விடிவி கணேஷ் அவ்வப்போது அசத்தலாக சமைத்து போடுவார் என்றும், உலகெங்கும் சாப்பிட்டாலும் கணேஷ் சமைப்பது போன்று சுவையாக பிரியாணி சமைத்து சாப்பிட்டதில்லை என்றும் சுந்தர் சி கூறினார்.விடிவி கணேஷ் தல அஜீத்துக்கு போட்டியாக வந்துவிட்டார் போலும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications