Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்து படத்தில் ரஜினியோடு நடிக்க மறுத்தது இவரா? ஃபெப்சி உமாவின் மறக்க முடியாத ஹேப்பி தருணம்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெப்சி உமாவுக்கு சினிமாவில் வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டார்.. சினிமா துறையில் நடக்கும் பல்வேறு விஷயங்களை கேள்விப்பட்டுகூட, தனக்கு ஒத்துவராது என்று உமா நினைத்திருக்கலாம். அவசர அவசரமாக பேசுவது, கடகடவென்று ஒப்பிப்பது என்றில்லாமல், பொறுமையாக, அடக்கமாக, அழகாக, இதமாக பேசுவதும், அவரது தமிழ உச்சரிப்பும்தான், உமாவை மக்கள் நேசிக்க காரணம்" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், "பெப்சி உமா அந்த காலத்து கனவு கன்னி.. இன்றைய கனவு டிடி.. காம்பியரிங் என்பது மனப்பாடம் செய்ததை ஒப்புப்பது மட்டுமே கிடையாது.. அதை உள்வாங்கி, யாரிடம் எப்படி கேள்வி கேட்கணும், பதில் வாங்கணும்? அவர்களுக்கு எந்த பதிலை சொல்வது? இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.. அந்தவகையில், பெப்சி உமா, டிடி இருவருமே சிறப்பாக கையாண்டார்கள். இருவருமே படபடவென பேசாமல், பொறுமையாக பேசுவார்கள்..

Television Pepsi Uma Pepsi Ungal Choice

அன்றைய கனவுக்கன்னி பெப்சி உமாவுக்கு, தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் ரசிகர்கள் காதல் கடிதங்களை எழுதினார்கள்.. அவரை கல்யாணம் செய்து கொள்ள தங்களது ஜாதகங்களை பல ரசிகர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள், தங்களது, பேங்க் பேலன்ஸ்களையும் பெப்சி உமாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஹோம்லி லுக் உமா

சேலை அணிந்து, மிகவும் சாதாரணமாக இருப்பார் உமா.. ஆனால், ரொம்ப ஹோம்லியாக இருப்பாங்க.. நடுத்தர குடுமபத்தை சேர்ந்தவர் உமா.. மாயவரத்தை சேர்ந்த அவரது அப்பா ஒரு வழக்கறிஞர், உமாவின் அம்மா பெயர் பத்மா.. அந்த காலத்தில் எம்ஜிஆர் போன்ற பிரபலங்களுக்கு நடனம் கற்றுத்தந்த மிக புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் நடனம் கற்றுக் கொண்டார்.. தன்னுடைய அம்மாவிடமிருந்து பெப்சி உமா நடனம் கற்றுக் கொண்டார்.

அக்கா, அண்ணன் உமாவுக்கு இருக்கிறார்கள்.. நடுத்தர குடும்பம் என்பதால்,ஆரம்பத்தில் காயிதே மில்லத் கல்லூரியில் படிக்கும்போது, பஸ்ஸில்தான் சென்று வந்துள்ளார்.. சினிமாவில் குஷ்புக்கு கோயில் கட்டியதாக சொல்வார்கள். ஆனால் ஃபெப்சி உமாவுக்கும் குமுளி என்ற இடத்தில் கோயில் கட்டியிருக்கிறார்கள்.. இதுகுறித்து உமாவிடம் கேட்டதற்கு, 'சந்தோஷப்படுவதா? சங்கடப்படுவதா? நல்லதா? கெட்டதா?" தெரியவில்லை என்றார்..

"ஹலோ பெப்சி உமாவா?"

தீனா படத்தில், "ஹலோ பெப்சி உமாவா?" என்று அஜித் டயலாக் பேசியிருப்பார்.. அந்த அளவுக்கு கிரேஸ் கொண்டவர். முத்து படத்தில் மீனா கேரக்டரில் நடிக்க ரஜினி சார் கேட்டிருந்தார்.. ஆனால், பெப்சி உமா அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.. இன்னொரு படத்திலும் ரஜினி நடிக்க கூப்பிட்டும் மறுத்துவிட்டார்..

பாரதிராஜா அழைத்தும், அந்த படத்தையும் மறுத்துவிட்டார்.. ஷாருக்கான் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் தவிர்த்துவிட்டார்.. எந்த வாய்ப்பையுமே பயன்படுத்தி கொள்ளாமல், இப்போதுள்ள புகழே தனக்கு போதும் என்று சொல்லிவிட்டார்.

சச்சின் டெண்டுல்கருடன் விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.. ஆனால் விளம்பரம் என்பதால், அதில் ஆடை குறைப்பு செய்து நடிக்க வேண்டும் என்றார்களாம். தமிழக மக்களிடம் பல வருட காலம் சேலையிலேயே பழக்கப்பட்டுவிட்ட உமா ஆடை குறைப்புக்கு மறுத்துவிட்டார். அதனால், டெண்டுல்கருடனான விளம்பர வாய்ப்பையும் மறுத்துவிட்டார்.

மறக்க முடியாத பாராட்டு

உங்களுக்கு மறக்க முடியாத பாராட்டு எது? என்று பெப்சி உமாவிடம் கேட்டார்கள். வாய்ப்பேச முடியாத மாற்று திறனாளி குழந்தை ஒன்று, பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை அடிக்கடி பார்க்குமாம்.. அடிக்கடி இந்த நிகழ்ச்சியை பார்த்து, பார்த்து, திடீர்னு உமான்னு கூப்பிட்டதாம்.. இதைக்கேள்விப்பட்டு குழந்தையை நேரில் சென்று பார்த்ததுமே மறுபடியும் உமான்னு கூப்பிட்டதாம் அந்த குழந்தை.. இதை பார்த்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போய்விட்டாராம் உமா.

அவசர அவசரமாக பேசுவது, கடகடவென்று ஒப்பிப்பது என்றில்லாமல், பொறுமையாக, அடக்கமாக, அழகாக, இதமாக பேசுவதும், அவரது தமிழ உச்சரிப்பும்தான், உமாவை மக்கள் நேசிக்க காரணம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+