Anbudan Kushi Serial: விஜய் டிவி என்றால் நம்பி இருக்கலாம் போல!
சென்னை: விஜய் டிவியில் ஒரு முறை கமிட்டாகி விட்டால் போதும். அடுத்த முறை வாய்ப்பு தருகிறேன் என்றால் நம்பி ஹாயாக வீட்டில் இருக்கலாம்.
பிரஜன் அப்படித்தான்.. சின்ன தம்பி சீரியலுக்குப் பிறகு, ஒரு சில மாதங்கள் ஓய்வுக்குப் பின், இப்போது அன்புடன் குஷி என்றொரு சீரியலில் நடிக்க உள்ளார்.
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் அன்புடன் குஷி.

நடிகர் பிரஜன்
நடிகர் பிரஜன் முதன் முதலில் சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக இருந்தவர். ஆரம்பத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த இவர், பின்னர் இரவு நேரத்தில் மட்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி பல இளம் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தார்.

வெள்ளித் திரை
வெள்ளித் திரையில் வாய்ப்பு வர, சன் மியூசிக் பணியை விட்டு வெளியேறினார். ஆனாலும் வெள்ளித் திரை இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஜீ தமிழ் டிவி, விஜய் டிவி என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர், மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டு இருந்தார்.

விஜய் டிவி
விஜய் டிவியில் சின்ன தம்பி என்று ஒரு சீரியலில் கமிட்டாகி நடித்து வந்தார். அதன் பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் விஜய் டிவி ஒன்றையே நம்பி இருந்தார். சின்ன தம்பி சீரியல் முடிந்து சில மாதங்கள் நல்ல ஓய்வில் இருந்தார் போலும். விஜய் டிவி, ஒரு சீரியலை முடிக்கும்போதே அடுத்த வாய்ப்பையும் சொல்லி விடுவார்கள்.

அன்புடன் குஷி
அதன்படி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அன்புடன் குஷி என்கிற புதிய தொடரில் பிரஜன் நடிக்கிறார். இந்த கதை ராஜஸ்தானி பெண் ஃபேஷன் டிசைனைராக ஆசைப்படுகிறார். ராஜஸ்தானி பையனை கல்யாணம் செய்து கொண்டால் இந்த மாதிரி ஆசை எல்லாம் நிறைவேறாது, சப்பாத்திதான் தட்டி போடணும்.. அமெரிக்க போயி ஃபேஷன் டிசைனிங் படிக்க என்பது போல் கதை செல்கிறது.
இந்த முறை விஜய் டிவி இந்திய அளவில் குறைகளை கையில் எடுக்கிறது போலும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications