நானும் சித்துவும் அவ்வளவு ஜாலியா இருந்தோம்.. குமுறும் ஹேமா
சென்னை: நானும் சித்துவும் நிஜ வாழ்க்கையிலும் அக்கா தங்கை போலத்தான் ஜாலியா இருந்தோம். எங்களுக்குள்ளும் கூட கருத்து வேறுபாடுகள் வந்ததுதான்.. ஆனால் உடனே அது போய் விட்டது என்று ஹேமா கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ராவின் இறப்பைப் பற்றி ரசிகர்களும் நடிகர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவருடன் ஒன்றாக நடித்த ஹேமா, சித்ரா தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு கோழை கிடையாது என்று அவர் இறந்த அந்த நாளிலிருந்தே கூறிக் கொண்டிருக்கிறார்.

அக்கா தங்கை போல
தற்போது அவர் சித்ராவை பற்றி பேசி ஒரு சானலுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் ஹேமா கூறியிருப்பதாவது: இந்த சீரியலில் இரண்டு வருடங்களாக ஒன்றாக நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு இருக்கிறதாம் .இருந்தாலும் அது எல்லா வீட்டிலும் நடப்பது போல தான் சீக்கிரத்தில் நாங்கள் பேசி விட்டோம் .

ரொம்ப அக்கறை
ஆனால் அதற்குள் நிறைய பேர் ஹேமாவுக்கும் சித்ராவுக்கும் பெரிய பிரச்சனை இருவரும் பேச மாட்டாங்க வீடியோ போட மாட்டாங்க என்றெல்லாம் வதந்தியை கிளப்பி வந்தார்கள் .அந்த அளவிற்கு அது பெரிய பிரச்சனையும் இல்லை சீக்கிரத்தில் நாங்கள் பேசி தீர்த்து விட்டோம் .ஆனால் அதற்குப்பிறகு நான் கன்சீவ் ஆக இருக்கும்போது என்னை ரொம்பவும் கேர் பண்ணி பாத்துகிட்டது சித்ரா தான்.

பத்திரமாக பார்த்துக் கொண்டார்
கொரோனா டைம்ஸ் முடிஞ்சி லாக் டவுனுக்கு பிறகு சூட்டிங் ஆரம்பித்ததும் நான் நடிக்க வந்தபோது பல ரசிகர்களும் எதற்காக இந்த டைமில் நீங்க நடிக்க வந்தீர்கள் என்று கமெண்ட்டுகளை போட்டு வந்தனர் .இந்த சூழ்நிலையில் நீங்கள் நடிக்க வந்து இருக்கீங்களே என்று ஆனால் எனக்கு பக்கபலமாக என்னை பத்திரமாக பார்த்து கொண்டது சித்ரா தான்.

அம்மாவிடம் சொல்லி சாப்பாடு
எனக்கு ஏழாவது மாசம் இருக்கும் போது ஐந்து வகை சாப்பாடு அவங்க அம்மாவிடம் பண்ண சொல்லி எனக்காக கொண்டு தந்தார் .எனக்கு மட்டுமல்ல எனக்காக செட்டில் உள்ள அனைவருக்கும் அவர் கையாலேயே பரிமாறினார். அந்த அளவிற்கு அடுத்தவர்கள் மீது ரொம்பவே ஹேர் பண்ணி பார்க்கும் நபர் தான் சித்ரா என்று கூறியிருக்கிறார்.

ஆண்களுக்கு நிகரானவர்
அதுமட்டுமல்லாமல் அவர் எதற்கும் பயப்படாத நபர்தான் வெளியிடங்களுக்கு நாங்கள் சென்றால் கூட யாராவது பிரச்சனைகள் பண்ணினாலும் தைரியமாக பேசக்கூடியவர் நான் கூட பயந்து வேண்டாம் விட்டுவிடு என்று சொன்னாலும் அவர் விடமாட்டார் . ஆண்களுக்கு நிகராக தான் அவரும் எப்போதும் இருப்பார்.

பொய்வலி வந்தபோது
எனக்கு ஒன்பதாவது மாதம் இருக்கும்போது விஜய் டிவியில் வளைகாப்பு பங்க்ஷன் சூட்டிங்கில் எனக்கு பிரசவத்திற்கு முந்தைய வயிறு வலி வந்த போது கூட என்னை அப்படியே தூக்கிக்கொண்டு போனார். அவ்வளவு பெரிய வயிறோட இருந்த என்னையும் அசால்டாக அப்படியே என்னை கையில் தூக்கிக் கொண்டு சென்று விட்டார் அந்த அளவிற்கு ஒரு போல்டான நபர்தான் சித்ரா.

ரொம்ப ஜாலி
நாங்கள் எல்லாரும் எப்பவுமே ஜாலியாக வெளிப்படையாக பேசுபவர்கள்தான். அவரும் எங்களிடம் அப்படித்தான் இருந்தார் .ஆனால் அவரின் மன அழுத்தமோ எதுவும் இருந்த மாதிரி கொஞ்சம் கூட வெளியில் தெரியவில்லை .நாங்கள் சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு ஜாலியாக இருந்தோம். கடைசியாக எடுத்த சூட்டிங்கில் கூட நான் இந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ண போறேன் இந்த தோடு போடப்போறேன். இது எனக்கு நல்லா இருக்கா என்று ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டிருந்தார்.

முகம்தான் வருகிறது
நீ எந்த டிரஸ் போடப் போறே என்று என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தார் .அவ்வளவு ஜாலியாக செட்டில் இருந்தவர் தற்கொலை செய்யும் எண்ணத்தில் கொஞ்சம் கூட இல்லை . அதனால் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பதை எங்களால் நம்பவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியாது. சித்ராவை மறப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை சூட்டிங் நடக்கும் இடங்களுக்கு செல்லும் போதெல்லாம் அவருடைய முகம் தான் எங்களுக்கு ஞாபகத்தில் வந்து கொண்டு இருக்கிறது.

அவரது நினைவுகளுடன் வாழ்வோம்
அங்கே இங்கே நின்று கொண்டு போட்டோஸ் வீடியோஸ் எடுத்துக் கொண்டிருப்பார். அதைத்தான் நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் இனி அவர் திரும்பி வரப்போவதில்லை என்பது மனதிற்கு புரிகிறது ஆனாலும் அவருடைய இனிமையான நினைவுகள் நம்மிடம் இருக்கிறது. அந்த நினைவுகளோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று சித்ராவின் ரசிகர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications