Web Series: Money Heist...செம திரில்லிங்.. திக் திக் கதை.. திரில் சீரிஸ்!
டெல்லி: NetFlix Money Heist வெப் சீரீஸ் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்ப எபிசோட் பார்க்க உட்கார்ந்தால்...காந்தம் மாதிரி அத்தனை எபிசோடையும் பார்க்க வைத்து விடுகிறது என்று சிலாகித்து பேசுகிறார்கள் ரசிகர்கள்.
வெப் சீரீஸ் என்றாலே வேண்டாத காட்சிகள் எல்லாம் இருக்கும்..எதிர்பாராத நேரத்தில் அதாவது சீன்ஸ் முகம் சுளிக்க வைக்கும் என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.
இதைத் தகர்க்கும் விதமாக Money Heist வெப் சீரீஸ் இருக்கிறது. லாக்டவுன் நேரத்தில் பசங்க கூட உட்கார்ந்து பார்த்தால் செம த்ரில்லாக இருக்கும் என்பது பலரது கருத்து. என்ன... ஆங்கில படம் பார்ப்பது போல இருக்கிறது...துப்பாக்கி சத்தம் காதுகளைத் துளைக்கிறது.

அதி புத்திசாலி கொள்ளையன்
அதி புத்திசாலி கொள்ளையன் ஒருவன் அறிவாளித்தனமாக செய்யும் மிகப் பெரிய வங்கி கொள்ளையே இந்த NetFlix தளத்தின் Money Heist வெப் சீரீஸ் கதை. மிகப்பெரிய வங்கிக் கொள்ளையை எந்த தடயமும் பதிக்காமல்...விட்டு வைக்காமல் எப்படி செய்கிறான் அந்த கொள்ளையன்? இந்த எதிர்பார்ப்புத்தான் வெப் சீரீஸை உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தபடி பார்க்கக் வைத்து இருக்கிறது.

ஒரு மணி நேர எபிசோட்
ஒரு மணி நேர எபிசோட் கொண்ட வெப் சீரீஸ் இது. அதுவும் மொத்தம் 22 எபிசோடுகள்... பார்க்க பார்க்க எழ மணம் இல்லாமல் பார்க்க வைக்கிறது. என்றாலும், சிறு பிள்ளைகள் பெரியவர்கள் பக்கத்தில் வந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டுத்தான் ஆசையாக பார்க்கிறார்கள்.

படப்பிடிப்பு ஒரே படபடப்பு
அத்தனை எபிசோடுகளின் படப்பிடிப்பும் ஒரே படபடப்பாக இருக்கிறது. அடுத்து என்ன நடக்குமோ... கண்டு பிடித்துவிடுவார்களோ..இருக்காது அவன்தான் புத்திசாலியாச்சே என்று லோக்கலாக பேசிக்கொண்டே பார்க்க வேண்டியதாக இருக்கிறது இந்த வெப் சீரீஸை. இப்படி பேசிக்கொள்ளாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு இருந்தால் திக் திக்குன்னு ..பயமா இருக்கே!

ஆரம்பம் முதல் இறுதிவரை
ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே சீராக திக் திக் நிமிடங்கள் தொடர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்று கூட யோசிக்க விடாமல் நம்மைத் துரத்தும் திக் திக் நிமிடங்கள் நிறைய சுவாரஸ்யம்தான்..இந்த அனுபவம் கொஞ்சம் புதிதுதான். கடைசியில் மயிர் கூச்செறிந்து கண் குத்திட்டு நிற்கும் காட்சி....அடடா... நீங்களும் பாருங்க!












Click it and Unblock the Notifications