Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Web Series: என்னாது மட்டன் ஊறுகாவா.. பயங்கர அலும்பா இருக்கேய்யா உங்களோட!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அலும்புநாட்டீஸ் வெப் சீரீஸில் 3வது எபிசோட் மட்டன் ஊறுகா. இந்த வெப் சீரீஸை நக்கலைட்ஸ் யூடியூப் சானல் வெளியிட்டு உள்ளது. மார்ச் 13ம் தேதி வெளியான இந்த வெப்சீரீஸின் 3வது எபிசோடை இதுவரை 15 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்து உள்ளனர்.

அலும்பு பண்ற குறும்பு பசங்க அலும்புநாட்டீஸ்... இந்த அர்த்தத்தில் எடுக்கப்பட்ட இந்த வெப்சீரீஸுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 30 க்கும் மேற்பட்ட பசங்க... பெரிய ஹாஸ்டல் என்று கைக்கு மீறின பட்ஜெட்டில் ஷூட் செய்து ஒளிபரப்பி வருகிறது இந்த யூடியூப் சானல்.

காசு இல்லாதபோது டீக்கடையில் ஒன் பை 2..ஒன் பை 4 என்றெல்லாம் பசங்க டீக்கடைக்காரரை திணற அடிப்பார்கள். அப்படி ஒரு அலும்பு பண்ணி இருக்கிறார்கள் இந்த எபிசோடில்.

ஒரு 2 பை 9 டீ

ஒரு 2 பை 9 டீ

1 பை 2.. 2 பை 4 டீ ஆர்டர் என்பது சாதாரண விஷயம். ஒரு படத்தில் கருணாஸ் கூட ஆள் கூட கூட டீ ஷேரை அதிகமாக்கிக் கொண்டே இருப்பார். அது ஒரு கதை.. இந்த கதை என்னன்னா..2 பை 9 டீ ண்ணா என்று இருக்கும் காசுக்கு ஆர்டர் செய்கிறான் ஒருத்தன். கடைக்காரரும் அதே போல2 டீயை 9 கிளாசில் ஊற்றித் தருகிறார்.

4 டீ வருது

4 டீ வருது

இந்த பசங்க 9 கிளாசில் இருக்கும் டீயை 4 கிளாசில் ஊற்றினால், சரியா 4 டீ கணக்கு வருது. அந்த 4 டீயை 4 பசங்க குடிக்கறாங்க..அடப் பாவிங்கள என்று டீக்கடைக்காரர் பசங்க டெக்னீக்கை பார்த்து வியக்கிறார். மாசக் கடைசியில் காசு இல்லாம.. பசங்க ஹாஸ்டலில் படும் கஷ்டங்கள்.. இதனுடன் தொடர்புடைய ஜாலியான விஷயங்கள் என்று இந்த எபிசோட் போகுது.

மட்டன் ஊறுகா

மட்டன் ஊறுகா

ஊருக்கு போயிட்டு வந்த ஒரு பையன் ஒரு ஜாடி நிறைய மட்டன் ஊறுகா அப்பா குடுத்துவிட்டார்னு எடுத்துக்கிட்டு வந்துட்டான். இப்போ இந்த பசங்களுக்கு அந்த மட்டன் ஊறுகாயை சப்பிட்டே ஆகணும். அவனா தரவே மாட்டேங்கிறான். எப்போதும் அந்த ஊறுகா ஜாடியை கூடவே கட்டிகிட்டு இருக்கான்.

ராத்திரியில் நைசா

ராத்திரியில் நைசா

ராத்திரி நைசா போயி...அந்த மட்டன் ஊறுகாயை திருடி சாப்பிட்டே ஆகணும்னு பசங்க பெரிய பிளான் போடறாங்க. இத்தனை மணிக்கு அவன் படுப்பான்.. படுத்த உடனே தூங்கிடுவான்..அந்த கேப்பில் கெடா வெட்டிடணும்னு பசங்க புறப்பட்டுட்டாங்க. மட்டன் ஊறுகா ஜாடியை எடுக்கப் போன இடத்தில் வகை வகையா ஸ்நாக்ஸ் மாட்டிக்கிச்சு. என்ன செய்யறாங்க பசங்க.. அலும்புநாட்டீஸ் பாருங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+