எத்தனை ஏமாற்றம்.. என்னை அழிக்க பாக்குறாங்க.. திடீரென வேதனையின் உச்சத்தில் பாக்கியலட்சுமி கோபி பதிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் கதாநாயகனாக நடிகர் சதீஷ் நடித்து வருகிறார்.
நான் ஆசையோடு, எதிர்பார்ப்புடன் ஒத்துக் கொண்ட ரோல் ஆனால் என்னுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்து விட்டது என்று அதில் நடிகர் சதீஷ் கூறி இருக்கிறார்.

இவர் சமீபத்தில் மலையாள சீரியலின் கிளிப்ஸ் ஒன்றை வெளியிட்டு அதற்கு உருக்கமான கேப்ஷனை கொடுத்து இருக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் இவ்வளவு பிரபலம் அடைவதற்கு காரணம் அந்த சீரியலில் நடிக்கும் கோபியின் கேரக்டர் தான். இவர் வில்லனாக இருப்பதால்தான் பாக்யாவை அதிகமான ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. கோபி வில்லனாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பின் மூலமாக அவர்தான் இந்த சீரியலின் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் தான் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த அவார்டு ஃபங்ஷனில் கோபிக்கு அதாவது சதீசுக்கு அவார்ட் கொடுக்கவில்லை என்பது அவரை விடவும் அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியும் கொடுத்து இருந்தது. தொடர்ச்சியாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு தான் விலகப் போவதாகவும் சதீஷ் திடீரென்று கூறி இருந்தார்.
பிறகு ரசிகர்களின் அன்பு பார்த்து நான் போகவில்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது தான் நடித்த மலையாள சீரியல் வீடியோ ஒன்றை பதிவிட்டு நான் மிகவும் ஆசையுடனும் பெரும் எதிர்பார்ப்புடன் நடித்து ஒத்துக்கொண்ட ரோல் ஆனால் எதிர்பார்ப்புகள் பெரும் ஏமாற்றத்தில் தான் முடியும் என்பதை வாழ்க்கை எனக்கு மீண்டும் பாடம் கற்பித்தது. நாம் என்னதான் சிறப்பாக செய்தாலும் அதை அழிப்பதற்கு சில பேர் காத்துக் கொண்டிருப்பார்கள் நண்பர்களே... இதுதான் உண்மை வாழ்க்கை தத்துவம் என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பு வருகின்றனர். என்ன ஆச்சு, என்ன நடந்தது என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் அது குறித்து சதீஷ் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதனால் அவர் நடித்து வரும் சீரியலில் இனி அவர் நடிக்க மாட்டாரோ என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது. அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அடிக்கடி வீடியோவில் சதீஷ் கூறிக் கொண்டிருப்பார்.
அது மட்டும் அல்லாமல் தினமும் அவருடைய ரசிகர்களுக்கு மோட்டிவேஷனலாக பல கதைகளையும் கூறிக் கொண்டிருப்பார். அதுபோல உடற்பயிற்சியில் தீவிரமான ஆர்வம் கொண்ட சதீஷ் அடிக்கடி தான் உடற்பயிற்சி செய்வதையும் வீடியோவாக வெளியிட்டு வருவார். இந்த நிலையில் இவர் இப்போது பீல் பண்ணி வெளியிட்டு இருக்கும் கருத்திற்கு பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications