Pandian Stores Serial: மைண்ட் வாய்ஸ் இப்படி கன்னா பின்னான்னா கேட்குது...?
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனாவை எப்போதும் கேலி செய்வது.. அவள் பேசுவது மாதிரியை பேசி நக்கலடிப்பது இதுதான் கடைக்குட்டி கண்ணன் வேலை.
முற்றத்தில் எல்லாரும் பேசிக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது, குட்டி அண்ணி மீனா மைண்ட் வாய்ஸில் பேசியது தனக்கு கேட்டுவிட்டது என்று போட்டு வாங்குகிறான்.
முல்லையும், கதிரும் சென்னைக்கு போறாங்களாம். உன் அம்மாவை வரச்சொல்லு முல்லை.. அவங்களும் உன்னை வழி அனுப்புவாங்க என்று தனம் சொல்கிறாள். அப்போதுதான் மீனாவின் மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்றான் கண்ணன்.

கொடைக்கானல் போகும்போது
ஜீவா அண்ணன் ஃபிரண்ட் அண்ணனை கூப்பிட்டபோது, நாம் எல்லாரும்தானே கொடைக்கானலுக்கு போனோம்.. இப்போ கதிர் அண்ணன் ஃபிரண்ட் கூப்பிடறப்போ.. நாமளும்தானே போகணும்னு கண்ணன் கேட்கிறான். டேய்.. அப்போ ஜீவா ஃபிரண்ட் நம்ம எல்லாரையும் கூப்பிட்டு இருந்தான். அதோட அவனுக்கு அங்கே காட்டேஜ் இருந்துச்சு.

கதிர் ஃபிரண்ட்
கதிர் ஃபிரண்ட் கதிரையும் முல்லையையும் மட்டும்தான் கூப்பிட்டு இருக்கான். இப்போ நாம எப்படிடா அவன் கூட போக முடியும்னு தனம் கண்ணனுக்கு புத்தி சொல்றா.ம்ம்ம் சரி சரி என்று கண்ணன் சலிச்சுக்கறான். முல்லை நீயும் கதிரும் சென்னைக்கு போறீங்களே.. அதை உன் அம்மாகிட்டே சொன்னியான்னு தனம் கேட்கிறாள்.

இப்போ சொல்லிடறேன்க்கா
இல்லக்கா.. சொல்லணும்னு நினைச்சேன். மறந்துட்டேன்னு முல்லை சொல்ல.. சொல்லு முல்லை.. அவங்களும் வருவாங்க.. சந்தோஷப்படுவாங்க என்று தனம் சொல்கிறாள்.ஆமாக்கா.. இப்போ போன் பண்ணி வர சொல்றேன்னு முல்லை சொல்றா. அப்போ இன்னிக்கு சாயந்தரம் ஒரு டிராமா இருக்குன்னு மனசுக்குள் சொலிக்கறா மீனா.

புரிஞ்சு போச்சு
புரிஞ்சு போச்சு.. புரிஞ்சு போச்சு என்று கண்ணன் குட்டி அண்ணியைப் பார்த்து சொல்ல...என்னடா என்ன புரிஞ்சுது உனக்குன்னு மீனா பதற்றத்துடன் கேட்கிறாள். நீங்க என்ன பேசினீங்கன்னு புரிஞ்சு போச்சுன்னு மீண்டும் கண்ணன் சொல்றான். என்னடா நான் மனசுக்குள்ள பேசினது அங்க இருக்கற உனக்கு எப்படி கேட்டுச்சுன்னு மீனா கேட்கிறாள். கேட்டுச்சேன்னு இவன் சொல்ல.. என்ன கேட்டுச்சு சொல்லுன்னு கேட்கிறாள் மீனா.

நினைச்சதை சொல்லி
இவ மட்டும்தான் போறா.. நம்மால போக முடியலைன்னு தானே நினைச்சீக என்று கண்ணன் சொல்ல.. இல்லியே.. இன்னிக்கு முல்லையோட அப்பா அம்மா வந்தா ஒரு எமோஷனல் சீன் இருக்குன்னுதானே நினைச்சேன்னு கண்ணன் விரிச்ச வலையில் விழுந்துட்டா மீனா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications