ராதிகா சீரியல் என்னாச்சு? மீண்டும் ஷூட்டிங் மோட் என்றாரே!
Recommended Video
சென்னை: ராதிகா இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் ஒரு ட்வீட் போட்டு இருந்தார். மீண்டும் ஷூட்டிங் மோட் சன் டிவிக்காக என்று.
ஆனால், இன்றுவரை அது பற்றிய தகவல் ஒன்றும் இல்லை. அவரது சீரியல் மீண்டும் சன் டிவியில் வரும் என்று அவரின் ரசிகர் ரசிகைகள் ஆர்வமாக இருக்கும் நிலையில் அதுக்குறித்த அறிவிப்பு சன் டிவியில் இன்னும் வெளிவரவில்லை.
ராதிகா அறிவித்த பின்னர் ரன், ராசாத்தி ஆகிய இரண்டு சீரியல்கள் தங்களது ஒளிபரப்பைத் துவங்கி உள்ளன. மகராசி என்கிற புது சீரியல் ஒன்றின் ப்ரோமோவும் வெளியாகி வருகிறது.

உண்டா இல்லையா?
சந்திரகுமாரி சீரியல் பெரும் சரிவை சந்தித்த நிலையில், மிக விரைவில் அந்த சீரியலை ராடான் டிவி முடித்துக் கொண்டது. சன் டிவி ரேட்டிங்கில் இல்லை என்றதும், சந்திரகுமாரி சீரியலின் நேரத்தை அதளபாதாளமான அடி என்று சொல்லக் கூடிய மாலை 6:30 மணி நேரத்தை சன் டிவி ஒதுக்கித் தந்தது.

விலகினார் ராதிகா
நேரத்தை மாற்றிய பிறகு அந்த சீரியலில் நடிக்க விரும்பாத ராதிகா தனக்கு பதிலாக விஜி சந்திரசேகரை நடிக்க வைத்துவிட்டு விலகிக் கொண்டார். அதன் பிறகு சீரியலும் குறுகிய காலத்தில் முடிந்து போனது. அதன் பிறகு ராதிகா மிஸ்டர் லோக்கல், மம்முட்டியுடன் மலையாளப் படம் என்று நிறைய படங்களில் நடித்தார்.

பக்கம் கவனத்தை
இப்படி பெரிய திரையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பிய ராதிகா, அதற்குள் ஒரு சில படங்களில் நடித்து முடித்து இருந்தார். இதற்கிடையில் குடும்பத்துடன் இங்கிலாந்து கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை கண்டு ரசித்தார். இப்படியான அவரது பொழுதுகள் பிஸியாகவே இருந்தன.

முன்னால் ட்வீட்
2 மாதங்களுக்கு முன் தன்னுடைய ட்வீட்டர் வலைத் தளத்தில் மீண்டும் ஷூட்டிங் மோட் சன் டிவிக்காக என்று பதிவிட்டு இருந்தார்.இவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில், என்னாச்சு..இன்னுமா ஷூட்டிங் மோட் மட்டுமே இருக்கிறது. ஷூட்டிங் நடந்துகொண்டு இல்லையா என்கிற கேள்வி பலரையும் கேட்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications