ஹீரோ மாறி வந்துட்டாரு.. பிக்பாஸ் வீட்டில் புதுமை? விஜய் சேதுபதி என்ன செய்வாரோ தெரியலயே? பிக்பாஸ் 8

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் பிக்பாஸ் சீசன் 8, ஆரம்பிக்க உள்ள நிலையில், சில சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கின்றன. இதனால், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்த போகிறார் என்று, ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் காத்து கிடக்கிறார்கள்.

சீனியர் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக, விஜய் சேதுபதியை இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த போகிறார்.. வழக்கமாக பிக்பாஸ் வீட்டுக்குள், ஏதாவது புதுமையான விஷயங்களையும், தன்னுடைய அனுபவங்களையும் போட்டியாளர்களிடம் பேசுவது கமலின் வழக்கமாக இருந்து வருகிறது..

bigg boss season 8 vijay sethupathi 8

அதேபோல, வாசிப்பு பழக்கத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, புத்தகப்பரிந்துரையையும் செய்வது கமலின் பழக்கமாகும்.. இதைத்தவிர, அரசியல், சினிமா, சமூகம் என அனைத்து துறைகளையும் பேசாமல், தன்னுடைய வார நிகழ்ச்சிகளை கமல் முடித்தது கிடையாது, எனவே, இந்த விஷயங்களையெல்லாம் விஜய் சேதுபதி எந்த அளவுக்கு நிறைவேற்றுவார் என்று தெரியவில்லை..

கமல் பாணி: கமலின் பாணியையே கையில் எடுப்பாரா? அல்லது புதுபாணி ஏதாவது கைவசம் வைத்திருக்கிறாரா? விஜய் டிவி இது சம்பந்தமாக ஏதாவது ஐடியாக்களை தந்துள்ளதா? என்றும் தெரியவில்லை.. இவையெல்லாம் சேர்ந்துதான், இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறதோ என்ற ஆர்வத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமல்ல, சில ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.. அத்துடன், விஜய் சேதுபதிக்கு ஆலோசனைகளையும், அட்வைஸ்களையும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அந்தவகையில், 3 முக்கிய அட்வைஸ்களை பெரும்பாலானோர் தந்துள்ளார்கள்.

பட்டென பேசிடுங்க: முதலாவதாக, "புரியும்படி பேசுங்க சேது" என்று கூறியிருக்கிறார்கள்.. அறிவார்த்தமாக கமல் பேசும்போது, சில சமயம் புரியாமல் போய்விடுவதை குறிப்பிட்டு, இந்த அட்வைஸை தந்துள்ளனர்.

"உங்களது பிளஸ் பாயிண்டே இயல்பாக பேசுவதுதான்.. அதனால் எக்காரணம் கொண்டும் கேஷூவலாக பேசுவதை விட்டுவிட வேண்டாம்.. அதேசமயம், எதை சொல்ல வருகிறீரோ அதை பட்டென உடைத்து பேசிவிடுங்கள்.. தலையை சுற்றி மூக்கை தொட்டால், நிகழ்ச்சி டல்லடித்துவிடும்" என்றெல்லாம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல, புத்தக பரிந்துரையை தவறவிடக்கூடாது, கட்டாயம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.. நல்ல விஷயத்தை யார் செய்தாலும் அதை ஊக்குவிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.. அந்தவகையில், பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட புத்தகங்களை கமல் பரிந்துரைத்துள்ளார்.. இது மக்களின் வாசிப்பு பழக்கத்தையும் அதிகப்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. எனவே, புத்தக பரிந்துரையை இந்த சீசனிலும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் இணையத்தில் பறக்கின்றன.

ஃபேவரிசம்: அதைவிட முக்கியமாக, "அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவானவர்" என்ற நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே, மக்கள் மனதில் பதிய வைத்துவிட வேண்டும் என்பது மற்றொரு அட்வைஸாக உள்ளது.. ஃபேவரிசம் என்ற வார்த்தையை தவிர்த்தாலே, நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முடியும் என்றும் சொல்லி வருகிறார்கள்.

இப்படி ஆளுக்கு ஒருபக்கம் அட்வைஸ்களை அள்ளிவீச, விஜய் சேதுபதி என்னதான் செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

அதேபோல, வீட்டிற்குள் நடத்தப்படும் போட்டிகளிலும் சுவாரஸ்யங்களை கூட்ட வேண்டும் என்றும், சுணக்கமில்லாமல் விறுவிறுப்பு கூட்டக்கூடிய டாஸ்க்குகளை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலம்வருகின்றன..

இதனிடையே, பிக்பாஸ் 8வது சீசன் இனி இரவு 9.30 மணி முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், சில சீரியல்களின் நேரம் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது... அந்தவகையில், நீ நான் காதல் மாலை 6 மணிக்கும், மகாநதி 6.30 மணிக்கும், சின்ன மருமகள் 7 மணிக்கும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+