Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்ன பட்ஜெட் படங்களும் வெற்றி பெறணுமா? அப்போ இந்த 4 இருந்தால் மூவி ஹிட்தான்

Subscribe to Oneindia Tamil

சினிமா ஒரு கனவு உலகமாக இருந்தாலும், ஒவ்வொரு படமும் ஒரு வியாபார முயற்சியும் கூட. பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரிய சந்தைப்படுத்தல் (marketing) மற்றும் தியேட்டர் வசதி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு சரியான திட்டமிடல் இருந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும். இதற்கான முக்கிய வழிகள் பின்வருவன.

கதைக்குத் தகுந்த பட்ஜெட்

படத்தின் கதை, கதாபாத்திரங்கள், லொகேஷன், தொழில்நுட்ப ரீதியான தேவைகள் என அனைத்தையும் கணக்கிட்டு, ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ளதாக இருக்குமாறு திட்டமிட வேண்டும். அனாவசியமான செலவுகளை தவிர்த்தால், தயாரிப்பு (production) கட்டணத்தை குறைக்கலாம்.

television movies cinema

சிறப்பான திரைக்கதை - வலுவான கரு

பெரிய பட்ஜெட் இல்லாத படங்களுக்கு முக்கியமாக தேவைப்படும் விஷயம், வலுவான திரைக்கதை. கதை, கதாபாத்திரங்கள், வசனங்கள் மற்றும் திருப்பங்கள் (twists) நன்றாக இருந்தால், அது பார்வையாளர்களை ஈர்க்கும். ஒரு சர்வதேச ரீதியில் பேசப்படும் விஷயங்களை தேர்வு செய்தால், அது வெளிநாட்டு மார்க்கெட்டிலும் செல்லும்.

குறைந்த செலவில் குழு

பிரபலமான நடிகர்களை வைத்துப் படம் எடுத்தால் செலவு அதிகரிக்கும். ஆனால், நல்ல திறமைமிக்க புதிய நடிகர்களை தேர்வு செய்தால், பட்ஜெட்டை கட்டுப்படுத்தலாம். அதேபோல், திறமையான ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்ற தொழில்நுட்பக் குழுவினரை யதார்த்தமான தொகையில் சேர்த்துக் கொள்ளலாம்.

குறைந்த செலவில் படப்பிடிப்பு

சின்ன பட்ஜெட் படங்களில் மிகப்பெரிய செலவு படப்பிடிப்பு (shooting) பணிகளில்தான் ஆகும். ஆனால், சில வித்தியாசமான முறைகளை பயன்படுத்தி அதை குறைக்கலாம்.

நேச்சுரல் லொக்கேஷன்

ஸ்டுடியோவில் செட் அமைத்து படமாக்குவதற்குப் பதிலாக இயற்கையான லொகேஷன்களை பயன்படுத்தினால், செலவை கணிசமாகக் குறைக்கலாம். சாலை, வீடு, கடற்கரை, கிராமப்புறங்கள், புறநகரங்கள் போன்றவை மிகச் சிறந்த இலவச அல்லது குறைந்த வாடகையில் கிடைக்கக் கூடிய லொகேஷன்கள். இதனால், ஆட்களுக்கு அதிகமாகும் செலவுகளையும் தவிர்க்கலாம்.

லிமிடெட் டேக்குகள்

அதிக மறு எடுப்புகளை (retakes) தவிர்த்தால், செலவு மட்டும் படப்பிடிப்பு நேரமும் மிச்சமாகும். இது இயக்குநர் மற்றும் நடிகர்கள் தயாராக இருப்பதைப் பொருத்து அமையும். கதையை முன்கூட்டியே திட்டமிட்டு (storyboarding, rehearsals) சரியான திட்டமிடல் செய்தால், தேவையற்ற செலவுகளை குறைக்கலாம்.

வேலை பார்க்கும் குழு

ஒரே நபர் பல வேலைகளை செய்தால் செலவு கட்டுப்படும். உதாரணமாக, ஒளிப்பதிவாளர் எடிட்டிங் வேலைகளையும் செய்யலாம், தயாரிப்பாளர் விநியோக பிரிவிலும் செயல்படலாம் செயல்படலாம். சிறிய குழுவுடன் பணிபுரிந்தால், போக்குவரத்து, தங்குமிடம், உணவு போன்ற செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது.

டிஜிட்டல் மற்றும் ஓடிடி (OTT) வருவாய்

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஓடிடி தளங்கள் மிகப்பெரிய வருமான வாய்ப்புகளை உருவாக்குகின்றன. Netflix, Amazon Prime, Disney+ Hotstar போன்ற தளங்கள் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வாங்குகின்றன. ஏற்கனவே வெற்றிகரமான குறைந்த பட்ஜெட் படங்கள், ரொம்ப விரைவாக ஓடிடியில் பிரபலமடைந்துள்ளன. படத்தின் தரம், கதையின் புதுமை மற்றும் தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பொறுத்து, ஓடிடி தளங்கள் உரிமத்தை வாங்க தயாராக இருக்கும்.

YouTube, Pay-per-view & TV உரிமை விற்பனை

YouTube Monetization மூலம் விளம்பர வருவாய் பெறலாம், அதேசமயம், YouTube Premium, Google Play Movies போன்ற Pay-Per-View மாடல் மூலம் நேரடி வருமானம் பெறலாம். மினி-ஸ்கிரீன் உரிமையாக தொலைக்காட்சிகளுக்கும் விற்பனை செய்யலாம், குறிப்பாக, பிரபலமான பிராந்திய சேனல்கள், குறைந்த பட்ஜெட் படங்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளன.

திரைப்பட விழாக்கள் (Film Festivals)

சின்ன பட்ஜெட் படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் பெற்ற திரைப்பட விழாக்கள் (IFFI, Sundance, Cannes) ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கலாம். அங்கு படம் திரையிடப்பட்டாலே, சர்வதேச ஓடிடி தளங்கள் மற்றும் விநியோக நிறுவனங்கள் கவனம் செலுத்தலாம். இதுவே படம் விரிவாக விநியோகமாக ஒரு வாய்ப்பாக அமையும்.

சந்தைப்படுத்தல் (Marketing)

Social Media Promotions: இன்ஸ்டாகிராம், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி இலவச விளம்பரங்களை மேற்கொள்ளலாம்.

Influencer Marketing: சிறிய செலவில் யூடியூப், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்யலாம்.

Viral Content Creation: டீசர், டிரைலர், memes, short clips போன்றவற்றை வியப்பூட்டும் வகையில் உருவாக்கினால், அது இயல்பாகவே வைரலாகும்.

கூடுதல் லாபம்

சின்ன பட்ஜெட் படங்களுக்கும் சிறப்பு வருவாய் ஆதாரங்களை பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டலாம்.

Product Placement: பிராண்டுகள், படத்தில் அவர்களின் தயாரிப்புகளை காட்டுவதற்காக நிதியுதவி செய்யலாம். உதாரணமாக, ஒரு கதாப்பாத்திரம் குறிப்பிட்ட பிராண்டு காப்பி அல்லது மொபைலைப் பயன்படுத்தினால், அந்த நிறுவனத்திடம் இருந்து வருமானம் பெறலாம்.

Merchandising: படத்தின் பிரபலமான வசனங்கள், காட்சிகள் அடங்கிய T-Shirts, Posters, Stickers, Exclusive Digital Content போன்றவற்றை விற்பனை செய்யலாம். ரசிகர்களுக்கு இது தனிப்பட்ட தொடர்பு கொடுக்கும், அதேசமயம் படக்குழுவிற்கு கூடுதல் வருவாய் தரும்.

கூடுதல் யோசனைகள்

குறைந்த செலவில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை கண்ட "Kaadhal", "Pizza", GoodNight போன்ற படங்களை மாதிரியாக கொண்டு, சந்தைப்படுத்தல் உள்ளிட்டவைகளை கற்றுக் கொள்ளலாம்.

எல்லாவற்றையும் துல்லியமாக திட்டமிட்டு, ஆட்சேபனைகள் இல்லாமல் படத்தை உருவாக்கினால், சின்ன பட்ஜெட் படங்களும் மிகப்பெரிய லாபம் ஈட்ட முடியும். சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிபெற நன்கு திட்டமிடுதல், சரியான விநியோகம், பட்ஜெட் கட்டுப்பாடு, சமூக ஊடகங்களை சரியாகப் பயன்படுத்துதல் ஆகியவை இருந்தால் எந்த நேரத்திலும் படம் ஹிட்டாகலாம்.

- குரு கிருஷ்ணன்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+