கங்கை அமரன் உடைத்த சீக்ரெட்.. பாரதிராஜா பேருக்கு பின்னாடி இப்படியொரு மேட்டரா? சபாஷ் பாவலர் வரதராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல டைரக்டர் பாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம், நட்பு பற்றி, பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் இசையமைப்பாளரும், டைரக்டருமான கங்கை அமரன். அதுமட்டுமல்ல, தன்னுடைய அண்ணன் பாவலர் வரதராஜன் பற்றி நெகிழ்ந்து போய் பல்வேறு விஷயங்களையும் தெரிவித்துள்ளார்.

IndiaGlitz Classics சேனல் சார்பாக நடிகர் ராஜேஷ், கங்கை அமரனை பேட்டி கண்டுள்ளார்.. அந்த பேட்டியில் கங்கை அமரன் சொல்லும்போது, "நான் பாட்டு எழுதவே முதலில் ஆர்வம் காட்டினேன்.. அதனால் இசையமைப்பதில் ஆர்வம் அப்போது வரல.. அதுக்கு காரணம், எங்க வீட்டில் இசை ரிகர்சல் தினமும் செய்துட்டே இருப்போம்..

television gangai amaran bharathiraja

சகோதரிகள்: அப்பதான் பாரதிராஜாவும் எங்களுக்கு பழக்கமானார்.. பாரதிராஜாவுக்கு 3, 4 பெயர்கள் உண்டு.. பால்பாண்டி, சின்னபாண்டி, இப்படி பல பெயர்கள் உண்டு.. பாரதிராஜாவுக்கு 2 தங்கைகள் இருக்கிறார்கள்.. ஒருவர் பெயர் பாரதி, இன்னொருவர் பெயர் ராஜி.. இதனை சேர்த்துதான் பாரதிராஜா என்று வைத்து கொண்டார்.

எங்க ஊருக்கு அப்போது மலேரியா இன்ஸ்பெக்டராக வந்திருந்தார் பாரதிராஜா.. 16 வயதினிலே படத்தில் வர்ற வில்லன் மாதிரியே பேன்ட்-பெல், கையில் பெட்டியுடன் வந்தார்.. ஆனால், அதுக்கு முன்னாடியே, இவருடன் வேலை பார்க்கும் நபர்கள் எல்லாம் எங்களுக்கு பழக்கமானவர்கள்தான்.

பாரதிராஜா: ஒருநாள் எங்க வீட்டு கச்சேரிக்கு வந்த பாரதிராஜா, எங்கள் பாட்டுக்களை கேட்டு ரசித்தார்.. அதற்கு பிறகு ஒன்றாகவே சாப்பிட்டு, நெருக்கமாக வளர்ந்தோம். பாரதிராஜாவுடன் பழக்கம் வந்ததுமே, அவர் செல்லும் இன்ஸ்பெக்டர் வேலைக்கு நாங்களும் துணைக்கு செல்வோம். ரத்தம் டெஸ்ட் பண்றதுதான் வேலை அது.. பொதுமக்களும் மலேரியா இன்ஸ்பெக்டர் என்பதால் நல்லபடியாக ட்ரீட் பண்ணுவாங்க..

1952லேயே என் அண்ணா பாவலர் வரதராஜன் மிகப்பெரிய பாடகராக இருந்தார். தேர்தல் நேரத்தில் ஓபன் ஜீப்பில்தான் பிரச்சாரம் செய்வார்.. வழியெல்லாம் பாடிட்டே போவார்.. அதிலும், மூணாறுபக்கம், பச்சை பசேலென தேயிலை எஸ்டேட்டுக்குள் பாட்டு பாடிட்டே போகும்போது, தோட்டத்தின் 2 பக்கமும் தொழிலாளர்கள் ஆர்வமாக நின்று கேட்பார்கள்.. இதுபோல இயற்கையோடு சேர்ந்து பாடியவர் என் அண்ணன்.. அவர் பாடினாலே, கூட்டம் சேர்ந்துவிடும்.

மாநில அரசு: ஈஎம்எஸ் வருகிறார் என்றால், அண்ணனைதான் முன்கூட்டியே பாட சொல்லுவாங்க.. அப்பதான் கூட்டம் வரும். இப்படித்தான், கேரளாவில் 1952-ல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, பாராட்டு கூட்டத்தை மாநில அரசு நடத்தியிருந்தது..

அப்போது அண்ணன் பாவலர் வரதராஜனையும் விழாவில் பாராட்ட போறதாக சொன்னாங்க, அதனால் நாங்க எல்லாருமே அந்த வெற்றி விழாவுக்கு போயிருந்தோம்.. மேடையில் ஏறியதுமே, "இவ்விட யாரனு பாவலர் வரதராஜன்?" என்று கேட்டுட்டே வந்தார் இஎம்எஸ்.. அண்ணனை பார்த்ததுமே, "இ முழு வெற்றியும் இவரோடதானு" என்று என் அண்ணனை பெருமைப்படுத்தினார்..

நெகிழ்ச்சி: ஆனால் அண்ணன் பாவலர் வரதராஜன் பணம் சம்பாதிக்கல.. கச்சேரி என்றாலே கிளம்பிவிடுவார்.. காசு நோக்கம் அவருக்கு கிடையாது.. சுயநலம் இல்லாமல் என் அண்ணன் இருந்தார்" என்று நெகிழ்ச்சியுடன் நினைவுகளை அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கங்கை அமரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+