எந்த துன்பம் வந்தாலும் தனியாகத்தான்.. என் வாழ்க்கையில் மூணு பேருக்கு உரிமை..நெகிழ்ச்சியில் பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விஜே பிரியங்கா தன்னுடைய நிஜ வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி பேசி இருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் எந்த துன்பம் வந்தாலும் தனியாகத்தான் பீல் பண்ணுவேன். மற்றவர்களிடம் அதை காட்டிக் கொள்ள மாட்டேன் என்று பிரியங்கா கூறியிருக்கிறார்.

மேலும் என்னுடைய வாழ்க்கையில் அப்பா, அம்மா, தம்பி இந்த மூணு பேருக்கு தான் உரிமை இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

விஜய் டிவி தொகுப்பாளர்:

ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் பிரியங்கா தேஷ் பாண்டே பல வருடங்களாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இவர் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுப்பதன் காரணமாகவே விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சிகளை எடுத்தாலும் அதில் பிரியங்காவின் பங்களிப்பு இல்லாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் தற்போது அட்டனன்ஸ் போட்டு விடுகிறார்.

What did Vijay TV host Priyanka say about her family friends

சோகங்கள் தெரியாது:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சி கிடைக்குமா? இல்லையா? என்று தவித்துக் கொண்டே இருந்த பிரியங்கா வழக்கம் போல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல இசை வெளியீட்டு விழாக்களும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இவருடைய கணீர் என்ற சிரிப்பொலி பலருக்கும் ஃபேவரைட் ஆனால் இவருடைய சோகங்கள் பலருக்கும் தெரியாத வகையில் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

அதைப் பற்றி பேசுவதில்லை:

விஜய் டிவி பிரபலத்தையே திருமணம் செய்து கொண்டிருந்த பிரியங்கா திருமணத்திற்கு பிறகு தற்போது தன்னுடைய கணவரைப் பற்றி எந்த தகவல்களையும் எந்த நிகழ்ச்சிகளிலும் பேசுவதே இல்லை. அந்த வகையில் தான் தற்போதைய ஒரு பேட்டியில் கூட தன்னுடைய அப்பா, அம்மா, தம்பி பற்றி பல விஷயங்களை பேசி இருக்கிறார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கடைசி வாரத்தில் இங்கிருந்து என்ன எடுத்துக்கொண்டு போகப் போகிறீர்கள் என்று கேட்டனர்.

What did Vijay TV host Priyanka say about her family friends

அப்பாவின் கட்டுப்பாடு:

அப்போது நான் எனக்கு எந்த துன்பம் வந்தாலும் தனியாக ஃபீல் பண்ணுவேன். மற்றவர்களிடம் அதை காட்டிக் கொள்ள மாட்டேன். அதுபோல் என்னுடன் இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று கூறினேர். அதுபோல என்னுடைய வாழ்க்கையில் ஸ்கூல் படிக்கும்போது நான் அதிகமாக முடி வளர்த்தது கிடையாது. ஆனால் அப்பா இறந்த பிறகு தான் நான் முடி வளர்த்தேன். அப்பா மிலிட்டரி ஸ்கூலில் படித்ததால் அப்படி ஒரு கண்டிஷன் வைத்திருந்தார் என்று அப்பாவை பற்றிய நினைவுகளை அசை போட்டு இருக்கிறார் .

மூவரும் போதுமாம்:

மேலும் எனக்கும் என்னுடைய தம்பிக்கும் ஒரே மாதிரி ஹேர் ஸ்டைல் தான் வைப்பார். ஆனால் அப்பா இறந்த பிறகு தான் என் அம்மாவை பார்க்க பார்க்க நான் எதற்கும் பயப்படக்கூடாது என்று கற்றுக்கொண்டேன். அன்று கற்றுக்கொண்டது தான் இன்று என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. நான் வளர்ந்து வந்த போது எனக்கு அட்வைஸ் செய்து வாழ்க்கையில் நல்லது கெட்டதை சொல்லித்தர யாரும் இல்லை. அதனால் என்னுடைய வாழ்க்கையில் அப்பா, அம்மா, தம்பி ஆகிய மூவருக்கும் பெரிய உரிமை இருக்கிறது. வேறு யாருக்கும் இல்லை என்று கூறி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+