தவறாக பேசியவரை பதிலடிக் கொடுத்து மன்னிப்பு கேட்க வைத்த பாரதி கண்ணம்மா நடிகை.. வெளியான ஸ்க்ரீன் ஷாட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிகை அருள்ஜோதி நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் அருள்ஜோதியிடம் ஒருவர் தவறாக பேசி கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னை பற்றி தவறாக பேசிய நபரை அருள்ஜோதி மன்னிப்பு கேட்க வைத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இரண்டாவது சீசன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்த நடிகர்கள் அனைவருமே ரசிகர்களில் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாகவும் ஆகி இருந்தனர். அதுபோல தற்போது இரண்டாவது சீசனிலும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகி வருகின்றனர். அந்த வகையில் இந்த சீரியலில் அஞ்சலி கேரக்டரில் நடிகை அருள் ஜோதி நடித்து வருகிறார்.

சீரியலில் அறிமுகம்
நடிகை அருள்ஜோதி சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். பாரதி கண்ணம்மா சீரியலில் மட்டுமல்லாமல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலிலும் இவர் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை அருள்ஜோதியிடம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் மோசமாக கமெண்ட் செய்து இருக்கிறார்.

நடிகையின் பதிலடி
தன்னைப் பற்றி ஆபாசமாக பேசிய அந்த நபரை அருள்ஜோதி இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார். அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். தவறாக பேசுபவர்களிடம் கடுமையாக இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்

மன்னிப்பு கேட்பு
அருள் ஜோதி பேசிய வார்த்தைகளை கேட்டு அந்த நபர் தான் தவறாக பதிவு செய்த கமெண்டை டெலிட் செய்து விடுகிறேன் என்று கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதை பகிர்ந்த அருள்ஜோதி இந்த மனிதர் அடுத்த நேரம் இப்படி பண்ணாம இருப்பாங்களான்னு தெரியல. ஆனால் அட்லீஸ்ட் இது தப்புன்னு அவங்களுக்கு புரிஞ்சு இருக்கிறது. கடைசியாக தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறார் என்று பகிர்ந்து இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
"முத்து ஜெயித்த நேரத்தில் வந்த புதிய சிக்கல்!"... ரோகிணி போன் காலால் தலைகீழான சிறகடிக்க ஆசை கதை -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications