மனோஜ்ஜின் கடைசி நொடிகள்.. போனில் என்ன பேசினார்? பண்ணை வீட்டை ரெடி பண்ண சொன்னாரா? பிரபலம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இன்று மனோஜ் இறந்ததும், அத்தனை சினிமா உலகினரும் திரண்டு வருகிறார்கள்.. அதுவும் பாரதிராஜாவுக்காக, அஞ்சலி செலுத்த வந்ததாகவே நான் நினைக்கிறேன். யாராவது மனோஜூக்கு தங்கள் படங்களில் நடிக்கவாவது வாய்ப்பு தந்திருக்கலாம்.. சினிமா என்பது எப்போதுமே நிஜம் கிடையாது" என்று மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அத்துடன் கடைசி நேரத்தில் மனோஜூக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் தெரிவித்துள்ளார்.

Public Wing இதுகுறித்து பேசும்போது, "சுசீந்திரன் நடிப்பதற்கு மனோஜூக்கு ஒரு வாய்ந்தார்.. அதனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் மனோஜ் உறுதியாக இருந்தார். அப்போதுதான் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஷூட்டிங்கில் மறைத்துவிட்டார்..
அதாவது, கிட்னி பிரச்சனை வந்துள்ளது.. மூச்சுவிடுவதில் சிரமம், மயக்கம், வீக்கம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற உபாதைகளை எல்லாம் தனக்குள்ளேயே மறைத்து கொண்டு விட்டார். தன்னால் படத்தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

Television manoj bharathiraja manoj

மோசமான கண்டிஷன்

அப்போதே மனோஜ் சுதாரித்திருந்திருக்கலாம். ஆனால், வலிகளை மறைத்து கொண்டு, படத்தையும் முடித்து தந்துவிட்டார்.. இதற்கு பிறகுதான் மருத்துவமனையில், சீரியஸான கண்டிஷனில் மனோஜ் அட்மிட் ஆனார்.. உடனே ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.. அப்போது முதுகு வலியும் மனோஜூக்கு வருகிறது. இதற்கு காரணம் ஏற்கனவே ஏற்பட்ட கிட்னி பாதிப்புதான்.. ஒருபக்கம் இதய வலி, மற்றொரு பக்கம் கிட்னி பிரச்சனை என இரண்டுமே சேரும்போது, டாக்டர்கள் திணறுகிறார்கள்.

பைபாஸ் ஆபரேஷன் செய்வதென்று டாக்டர்கள் ஆலோசிக்கிறார்கள். ஆனால், காப்பாற்றுவது கடினம் என்று குடும்பத்தினரிடம் சொல்லி, அவர்களின் அனுமதியை பெற்றுத்தான் பைபாஸ் செய்கிறார்கள். அந்த அளவுக்கு மோசமான கண்டிஷனாக இருந்திருக்கிறது. ஆனால், நல்லபடியாக ஆபரேஷன் முடிந்துள்ளது. 15 நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..

ஸ்கிரிப்ட் பணிகள்

வீட்டிற்கு வந்தும்கூட, மனோஜ் ஓய்வு எடுக்க நினைக்கவில்லை.. ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலையில் இறங்க முடிவு செய்கிறார். இறப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்புகூட, தனக்கு வேண்டிய 5 தயாரிப்பாளர்களுக்கும், ஹீரோக்களுக்கும் போன் செய்து பேசியிருக்கிறார்.

அடுத்த கதை தயாராக இருப்பதால், அதற்கான ஸ்கிரிப்ட் எழுத ஊரிலுள்ள பண்ணை வீட்டுக்கு செல்வதாகவும், ஸ்கிரிப்ட் எழுதி முடித்ததும் தகவல் சொல்வதாகவும் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட தயாரிப்பாளர்களும், மனோஜ்ஜை நன்றாக ரெஸ்ட் எடுக்க சொல்லி உள்ளார்கள். எனினும் மனோஜ், ஸ்கிரிப்ட் எழுதுவதிலேயே உறுதியாக இருந்துள்ளார். ஊரிலுள்ள பண்ணை வீட்டையும் தயார் செய்து ரெடியாக வைக்க சொல்லியிருக்கிறார்.

வத்தலகுண்டு பண்ணை வீடு

இதனிடையே, மனோஜ் உடல்நிலை தேறி வீட்டுக்கு வந்துவிட்டதால், பாரதிராஜாவும் ஓய்வு எடுப்பதற்காக, வத்தலகுண்டு பண்ணை வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தார்.. அதாவது இருவருமே பண்ணை வீட்டுக்கு செல்வதென ஒரே நாளில், ஆனால் தனித்தனியாக முடிவெடுத்திருந்தனர்.

நாலரை மணிக்கு போனில் ஸ்கிரிப்ட் குறித்து பேசிக் கொண்டிருந்த மனோஜூக்கு 2 மணி நேரத்தில் இறப்பு நிகழ்ந்துள்ளது.. சொத்துக்கள் பல இருந்தாலும், தான் ஒரே வாரிசாக இருந்தாலும், தனக்கு உடல்நல பாதிப்பு உள்ளிட்ட நெருக்கடி நேரத்திலும், அவரது எண்ணம் முழுவதுமே சினிமாவாகவே இருந்துள்ளது.. கடைசி பேச்சும் சினிமாவாகவே இருந்துள்ளது. சினிமாவுக்காக, உடல், உயிரை விட்டுவிட்டார் மனோஜ்.

அப்பா அப்பான்னு கூப்பிடறாங்க

அப்பா, அப்பான்னு பாரதிராஜாவை எல்லாரும் சொல்றாங்க.. மனோஜ்க்கு யாராவது ஒரு வாய்ப்பை தந்திருக்கலாம்.. அத்தனை பிரபல நடிகர்களும் மனோஜ் வீட்டை சுற்றித்தான் இருக்காங்க.. தங்கள் படத்தில் மனோஜூக்கு ஒரு கேரக்டர் தந்திருக்கலாம். கடைசிவரை யாருமே அவருக்கு உதவல.. ஆஸ்பத்திரியில் 15 நாள் இருந்தபோதும் யாரும் போய் அவரை பார்க்கல.

இன்று அவர் இறந்ததும் அத்தனை பேரும் வருகிறார்கள்.. அதுவும் பாரதிராஜாவுக்காக, அஞ்சலி செலுத்த வந்ததாகவே நினைக்கிறேன். சினிமா என்பது எப்போதுமே நிஜம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+