ஆமா... ஸ்ருதி ஹாசனோட ஹலோ சகோ ஏன் திடீர்னு நின்னு போச்சு?
சென்னை: அனு ஹாசன் காஃபி வித் அனு நிகழ்ச்சியை விஜய் டிவியில் சக்ஸஸா நடத்தினார். சுஹாசினி மணிரத்னம் பேசும்படம் நிகழ்ச்சியை ஜெயா டிவியில் நல்லாவே நடத்தினார். அதே பாணியில்தான் சன் டிவியில் ஹலோ சகோவை ஆரம்பித்தார் ஸ்ருதி ஹாசன். ஆனால் அது இப்போது காணால் போய்ருச்சு.
எங்கே போனார் ஸ்ருதி ஹாசன்.. இந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதிலே இல்லை. ஆனால் ஸ்ருதி ஹாசன் காத்து மாதிரி, ஒரு இடத்துல நிக்க மாட்டார். பல விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
அப்பா கமல்ஹாசன் கிட்ட வெறும் ஆலோசனை மட்டுமே கேட்டுவிட்டு, முடிவை தன் இஷ்டம் போல எடுப்பவர். தைரியம் மிக்க புத்திசாலி பெண். தில்லாக இறங்கிச் செய்பவரும் கூட.

ரொமான்ஸும்
அப்பா கமல் மாதிரியே அதிக திறமை, அதுவும் நடிப்பு, இசை, பாடல்கள் பாடுவது, இன்னும் தனக்கு தேவையான விஷயங்களை அறிந்து அதில் முத்திரை பதிப்பது என்று எல்லா விஷயத்திலும் ஸ்ருதி அப்பா கமல் மாதிரி. ரொமான்ஸ் கூட அப்படித்தான்னா பாருங்களேன். அவர் காதலிக்கும் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் லண்டன் காதலர் உலகறிந்தவர்.

ஊடலும்
தன துறை சார்பான பல விஷயஙங்களை அறிந்து கொள்ளும் தேடலும் அவரிடம் உண்டு. அடிப்படை வாழ்க்கை முறைக்குத் தேவையான காதல், ஊடல் விஷயங்களும் அவரிடம் உண்டு.

ஹலோ சகோ
ஹலோ சகோ ஒப்பந்தம் செய்யும்போதே தொடர்ந்து எல்லாம் என்னால செய்ய முடியாதுங்க .. இவ்ளோ பணம் குடுத்தா என்னால முடிஞ்ச எபிசோட்ஸ் பண்ணித் தரேன்... இஷ்டம்னா ஓகே.. இல்லேன்னா பரவால்லன்னு சொன்னாராம்.

ஷ்ருதியாச்சே
ஸ்ருதி ஹாசனாச்சே.. விட முடியுமா? உங்களால முடிஞ்சவரைக்கும் செய்ங்க. அதுக்குள்ளே வேற யார் பொருத்தமா இருப்பாங்கன்னு பார்க்கறோம்னு சொன்னாங்களாம். ஆனா, பாருங்க அவர் இடத்தை நிரப்ப இதுவரைக்கும் யாரும் கிடைக்காம நிகழ்ச்சி கிடப்புல இருக்கு.

யாருக்காகவும்
ஸ்ருதி ஹாசன் அப்பா கமல் ஹாசன் மாதிரிதான்... யாருக்காகவும் தனது முழு நேரத்தை ஒதுக்கித் தரமாட்டார். இது முடிஞ்சா அது, அது முடிஞ்சா இதுன்னு ரெண்டு பேருமே தேடல், ஓடல்னு இருக்கறவங்க.

ஹலோ சகோ
அப்பா கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் அடுத்தடுத்து எந்த மொழியில செய்தாலும் சரி. நான் வருஷத்துக்கு ஒரு தடவைதான்னு கண்டிப்புடன் சொன்னார். ஹலோ சகோவும் அப்படி நடந்தா சரிதான்.


Click it and Unblock the Notifications
