For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜே ஜாக்குலினுக்கு என்னாச்சு.. அவரோட இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்தீங்களா?

Google Oneindia Tamil News

சென்னை: விஜேவும் சீரியல் நடிகையுமான ஜாக்குலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அவருக்கு என்னாச்சு என கேட்டு வருகிறார்கள்.

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக வந்தவர் ஜாக்குலின் லிடியா. இவர் ரக்ஷனுடன் இணைந்து கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்தார்.

இவருக்கு தேன்மொழி பி.ஏ. என்ற சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜே பணிக்கு முழுக்கு போட்டுவிட்டு சீரியல் நடிகையானார்.

ஜாக்குலின் உடற்பயிற்சி

ஜாக்குலின் உடற்பயிற்சி

சில நாட்களாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத ஜாக்குலின் உடற்பயிற்சி கூடத்திலிருந்து ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் தனது ஜிம் பயிற்சியாளர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார் என்றும் தனக்கு மயக்கமும் வாந்தியும் வருகிறது என்றும் காமெடியாக தெரிவித்திருந்தார்.

வீடியோ

வீடியோ

மேலும் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 இந்த மாதம் தொடங்குகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடந்து முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக தெரிகிறது.

கேபிஒய் சாம்பியன்ஸ்

கேபிஒய் சாம்பியன்ஸ்

அந்த வகையில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் டைட்டில் வின்னர் அமுதவாணன் கலந்து கொள்வதாக தகவல்கள வெளியாகியுள்ளன. அது போல் விஜே ரக்ஷன், அஞ்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி, சீரியல் நடிகைகள் ஸ்ரீநிதி, அர்ச்சனா, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, ரவீந்தர்- மகாலட்சுமி, மைனா நந்தினி, ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன.

 தொகுப்பாளினி டிடி

தொகுப்பாளினி டிடி

அது போல் தொகுப்பாளினி டிடியும் பிக்பாஸில் கலந்து கொள்கிறார் என்கிறார்கள். அது போல் விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளினியான ஜாக்குலினும் கலந்து கொள்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜாக்குலின் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

இன்ஸ்டா போஸ்ட்

இன்ஸ்டா போஸ்ட்

தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் மருத்துவமனை பெட்டில் இழுத்து போர்த்தி கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் எல்லாம் விரைவில் சரியாகிவிடும் என்ற கேப்ஷனை கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஜாக்குலினுக்கு என்னாச்சு என கேட்டு வருகிறார்கள்.

English summary
What happened to Serial actress Jackline who is admitted in hospital?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X