Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன பார்ட்டி கல்ச்சர்? ரவி மோகன் - ஆர்த்தி விவகாரத்தில் தனுஷ் பெயர் மாட்டியது எப்படி? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள் பிரிய நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. பாடகி சுசித்ரா பல்வேறு ஊடகங்களில் தனுஷ் பெயரை அடிக்கடி கூறி வருகிறார்.

நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தன்னுடைய விவாகரத்து குறித்து அறிவித்து இருந்தார். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.

நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன், நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி என்று நடிகர் ரவி கூறியுள்ளார், என்றார்.

What is party culture How did Dhanush name brought into Ravi Mohan Aarthi divorce case

விவாகரத்து தொகை

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரியுள்ளார் ஆர்த்தி. இரு மைனர் குழந்தைகளையும் ரவிமோகனே பராமரிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு பேருமே விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மாதம் 40 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது என்ன பார்ட்டி கல்ச்சர்

இவர்கள் பிரிய நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. பாடகி சுசித்ரா பல்வேறு ஊடகங்களில் தனுஷ் பெயரை அடிக்கடி கூறி வருகிறார். அதாவது தனுஷ் காரணமாகவே.. தனுஷ் உடன் ஆர்த்தி தொடர்பில் இருந்த காரணத்தினாலே இந்த பிரிவு ஏற்பட்டது என்று கூறி உள்ளார் சுசித்ரா. அவர் சொன்னது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் கோலிவுட்டில் நிலவும் பார்ட்டி கல்ச்சர் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. பொதுவாக ஒரு நடிகரை எடுத்துக்கொள்ளலாம்.. இப்போது அர்னால்டு என்ற நடிகர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் திரை உலகில் பெரிய நடிகர் ஆன பின் இது போல பார்ட்டிகளை நடத்துவது உண்டு. அதற்கு சக நடிகைகள், நடிகர்கள், சில தயாரிப்பாளர்களை அழைப்பதும் உண்டு.

2. இவர்கள் ஒரு குழுவாக அப்படியே டீம் ஆகி விடுவார்கள். அடுத்தடுத்த படங்களில் தங்கள் டீமில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு தருவது தொடங்கி தங்கள் டீமில் உள்ளவர்களை மேலே கொண்டு வருவது வரை பல விஷயங்கள் நடக்கும்.

3. இது கேட்க கல்ட் குழு போல இருந்தாலும் அதில் தவறில்லை. உதாரணமாக நம் கல்லூரியில் கேங் சேருவோமே அப்படிதான். குழு குழுவாக இப்படி பிரிவார்கள்.

4. இரண்டு மூன்று கேங்கில் ஒரே நபர்கள் இருப்பதும் கூட சகஜம்தான். பொதுவாக வயது ஒத்த நடிகர்கள், நடிகைகள் இப்படி டீம் சேருவது உண்டு.

5. ஒரு காலத்தில் இப்படி ஒவ்வொரு நடிகர்களுக்கு டீம் இருந்தது உண்டு. அவர்கள் அடிக்கடி பார்ட்டி செய்தது உண்டு. இப்போது அப்படி இருந்த பல குழுக்கள் இல்லை.

6. ஆனால் அதற்கு பதிலாக புதிய பல குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களில் பெரிதாக நடப்பதெல்லாம் ஒன்றாக அமர்ந்து அரட்டை அடிப்பது , மது, போதை பொருள் பழக்கம் மேற்கொள்வது சகஜம்.

7. இன்னும் சில குழுக்களில் காதல் அல்லது காதல் தாண்டிய உறவுகளும் சகஜம்தான். இதெல்லாம் முழு consent உடன் நடக்கும் விஷயங்கள்தான்.

8.சில நடிகர்களுக்கு எதிராக புரளிகள், கிசுகிசுக்கள் வருமே. அவை கூட இங்கிருந்து திட்டமிட்டு புறப்படும் விஷயங்கள்தான். இப்போது அந்த அர்னால்டு என்ற நடிகருக்கு ஜான் சீனா என்ற நடிகரை பிடிக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக ஒரு கிசுகிசுவை இங்கிருந்து கூட கிளப்பி விடலாம்.

9. அல்லது அவருடன் நடிக்க வேண்டாம் என்று தனது குழுவிற்கு அன்பு கட்டளை போடலாம். இதெல்லாம் சினிமா உலகில் சகஜம்.

10. இது காதல் தாண்டிய உறவுகளும் இங்கே சகஜம் என்பதால்.. இது போன்ற பார்ட்டிகள் எளிதாக விவாகரத்திற்கு வித்திடும். இப்போது பெரிய நடிகர்கள் சிலரை எடுத்தால்.. அதாவது அஜித் போன்றவர்கள் பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டார்கள்.

11. அப்படிப்பட்ட நடிகர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இருக்காது. ஏன் ரஜினியே கூட இப்போது பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை. ஆனால் அதே வயது கொண்ட தெலுங்கு நடிகர்கள் அடிக்கடி பார்ட்டி நடத்துவது உண்டு.

12. இந்த பார்ட்டி கலாச்சாரம் நட்பு தாண்டி போதை பொருள் பழக்கம் தொடங்கி விவாகரத்து வரை பல விஷயங்களுக்கு காரணமாக உள்ளது மறுக்க முடியாதது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+