கமலுக்கு நோ சொன்ன பெப்சி உமா.. ரஜினிகாந்த் கேட்ட கேள்வி.. தற்போது நிலைமை இப்படியா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உமா பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா?
15 வருடங்களாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பெப்சி உமாவிற்கு திரை துறையில் பல வாய்ப்புகள் குவிந்து இருக்கிறது.
தனக்கு வந்த திரை வாய்ப்புகளை பெப்சி உமா மறுத்து விட்டாராம். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் வேற லெவல் அதை பார்ப்போம்.

தொகுப்பாளராக அறிமுகம் ஆகி கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கிற வகையில் ரசிகர்கள் பட்டாளத்தை பெருக்கி பல அரசியல் பிரபலங்களை விடவும் அதிகமான ரசிகர்களால் பொது இடத்தில் திக்கு முக்காடி போன பெப்சி உமா ஒரு காலத்தில் பலருடைய ஃபேவரைட் தொகுப்பாள,ர் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பலரும் இவரை தேடிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் வியாழக்கிழமை ஒளிபரப்பாகி வந்த பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பலர் டிவி முன்பு காத்துக் இருப்பார்கள். அதுவும் பலர் இரவு நேரத்தில் வேலை இருந்தாலும் கூட அந்த நேரத்தில் பிரேக் எடுத்துக் கொண்டு டிவி முன்பு இருந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்த பெப்சி உமா உடை மற்றும் அவருடைய தெளிவான மரியாதையான பேச்சு பலரையும் கவர்ந்திருக்கிறது. அப்படித்தான் பெப்சி உமாவிற்கு அந்த காலத்தில் கோயில் எல்லாம் கட்டினார்களாம், அப்போது ஒரு தலைவர் பெரும் பிரச்சனையும் செய்து இருக்கிறார்.
ஆரம்பத்தில் வாருங்கள் வாழ்த்துவோம் என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பெப்சி உமா விஜேவாக வந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் சன் டிவியில் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் தொடங்கி அதில் உமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். முதல் மூன்று எபிசோடுகளுக்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் இருந்திருக்கிறது.

அப்போ இதை தூக்கிடலாமா என்று யோசிக்கும்போது தான் சில திரைப்படங்களுக்கு லேட்டா கிடைக்கிற வரவேற்பு போல இவருடைய நிகழ்ச்சிக்கும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் என்றால் அது பெப்சி உமா தான். அது மறுக்க முடியாத உண்மை. அதுவும் தெளிவான தமிழை உச்சரித்து இவர் பேசும் வசீகரித்தாலே நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்து விட்டது. ஒரு விஜே செலிப்ரிட்டியாக மாறியது இந்த நிகழ்ச்சியில் தான்.
அதற்குப் பிறகுதான் பெப்சி உமாவிற்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வந்திருக்கிறது. அந்த நேரத்தில் மணிரத்தினம் திரைப்படம் அதாவது தாஜ்மஹால் திரைப்படதிற்கான கதாநாயகி தேடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த திரைப்படத்திற்காக பெப்சி உமாவை கேட்டிருக்கிறார்கள். அதற்கு பெப்சி உமா முடியாது என்று கூறிவிட்டாராம். மணிரத்தினத்தின் படத்தில் நடிப்பதற்காக பல பேர் தவம் கிடக்கும் நிலையில் தனக்கு வந்த வாய்ப்பை வேண்டாம் என்று இவர் உதறி தள்ளி இருக்கிறார். அது மணிரத்னத்திற்கே பெரிய அவமானமாகவும், ஏமாற்றமாக தான் இருந்திருக்கும்.
அதுமட்டுமல்லாமல் அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் என்ற திரைப்படத்திலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போதும் கமலுடன் நடிப்பதற்கு என்றால் பல பேர் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எல்லோரும் கமலுக்கு என்றால் இவர் சரி என்று சொல்லிவிடுவார் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கேயும் நான் வரவில்லை எனக்கு நடிப்பு செட்டாகாது என்று கூறியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
அதைத்தொடர்ந்து சில மாதங்கள் கழித்து ரஜினிகாந்தின் திரைப்படத்தில் இவருக்கு நடிப்பதற்கு இவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அப்போது ரஜினிகாந்த் போன் செய்து பெப்சி உமாவிடம் பேசி இருக்கிறார். ஆரம்பத்தில் நான் உங்களுடைய பெரிய பேன் நிகழ்ச்சியை சூப்பரா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று பாராட்டி விட்டு, பிறகு உங்களுக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு சாரி சார் எனக்கு சினிமாவில் நிறைய வாய்ப்பு வந்தது ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. நான் ஒரு விஜேவாகவே இருந்து விடுகிறேன் என்று கூறினாராம். திரைப்படத்தில் நடித்தால் பெரிய அளவில் பெயர் கிடைக்கும் ஆனால் எனக்கு அந்த பெயர் வேண்டாம். அதில் இருக்கும் கஷ்டங்களை என்னால் அனுபவிக்க முடியாது என்று அப்போது அவர் கதாநாயகி வாய்ப்பு வந்ததை விட்டு தள்ளி இருக்கிறார்.
15 வருடங்கள் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர் தற்போது ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் செய்து வருவதாகவும், தன்னுடைய வீட்டில் இருந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டிருப்பதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். வாய்ப்புக்காக எத்தனையோ பேர் தவம் கிடக்கையில், இவர் கிடைத்த வாய்ப்பை எல்லாம் தனக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக விட்டுவிட்டு தனக்கு பிடித்த குடும்பத்தை கவனித்து வரும் வேலையை செய்து வருகிறார். சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். தற்போது அது வைரலாகி வருகிறது.
-
கென் கருணாஸ் சொன்ன ஒரு வார்த்தை.. வம்புக்கு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. வந்து குவியும் கண்டனங்கள் -
“என் கால் மேல் ஏறி நில்” சூட்டிங் ஸ்பாட்டில் உதயநிதி சொன்ன வார்த்தை! அந்த நொடி எதிர்பார்க்கல! சீரியல் நடிகை ஒபன் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
நடிகை பானுப்ரியாவை வர்ணித்த நடிகருக்கு விழுந்த அடி.. இயக்குநர் செய்த தரமான சம்பவம்! இப்படியும் நடந்ததாம்! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
“இது சிம்பதிக்காக சொல்லல… இதுதான் ரியாலிட்டி!”.. காளிதாஸ் 2 விழாவில் நடிகர் பரத் எமோஷனல் -
நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன் -
Durandar 2 : துரந்தர் 2 தமிழில் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்.. மாஸான வசூல்.. அடுத்தடுத்த சம்பவம்! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
துரந்தர் 2 வசூலில் அதிரடி… 2 நாளில் இத்தனை கோடி வசூல்! உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் புயல் சுற்றுதே












Click it and Unblock the Notifications