Eeramana Rojave: ஐயோ மலர்.. .இதுக்கா இம்புட்டு அழுகாச்சி!
சென்னை: ஈரமான ரோஜாவே சீரியலில் வெற்றி முதல் காதலை தன்னிடம் மறைச்சுட்டான்னு அவனின் பொண்டாட்டி மலர் குமுறி குமுறி அழுகிறாள்.
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் மலர் வெற்றி இருவருக்கும் எதிர்பாராத விதமாத்தான் கல்யாணம் நடக்குது.
ஒரு வருஷமாகியும் தம்பதிகள் நெருக்கமாகாத நிலையில், வெற்றியின் முதல் காதலை அவனது காதலியே மலரிடம் சொல்லிவிட அப்போதுதான் மலர் குமுறி அழுகிறாள்.

பொய் சொல்லிட்டாரே
ஏற்காடு போயி பெஸ்ட் ஜோடின்னு கோப்பை எல்லாம் வாங்கிட்டு வந்தோம். எதுவும் தன்னிடம் மாமா மறைச்சதில்லைன்னு வேற சொன்னார். இப்போ என்னடான்னா படிக்கும் போது வெற்றி தன்னை காதலிச்சதா ஒருத்தி வந்து சொல்றா..நம்ம அத்தையும் அவளை மருமகளே மருமகளேன்னு கூப்பிடறாங்கன்னு நினைச்சு நினைச்சு அழறா.

வெற்றியின் அண்ணனை
இவளே ரெண்டாவது காதல்தான்..வெற்றியின் அண்ணணனை காதலிச்சு கல்யாண மேடை வரை வந்து மாப்பிள்ளைக்கு லாரி விபத்து ஏற்பட்டதால்தான் அவனின் தம்பியான வெற்றியுடன் இவளுக்கு கல்யாணம் நடக்குது. இதை நினைச்சு அதை மறந்து விடலாமே மலர்.

யாரையாவது காதலிச்சீங்களா?
மாமா படிக்கும்போது யரையயாவது காதலிச்சு இருக்கீங்களான்னு நாம் அன்னிக்கு ஏற்காட்டில் கூட மாமாகிட்டே கேட்டோம்.. மாமா இல்லேன்னுதானே சொன்னார்னு மறுபடியும் அழறா. போதாக் குறைக்கு இவளை வெறுப்பேத்த மாமியாரும், நாத்தனாரும் இவள் காது படவே வெற்றி படிக்கும்போதே நிறைய பெண்கள் இவனை சுத்தி வரும்.

பஞ்சாயத்து கூடும்
பெண்ணைப் பெத்தவங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டு அப்படினு இப்படின்னு எதாவது ஏழரையை இழுத்து விட்டுக்கிட்டே இருப்பான்னு பொய்யா பேசறாங்க..வேணுக்கும்னே..மலர் இதைக் கேட்டு இன்னும் குமுறி குமுறி அழறா. ஒரு வருஷமா அவனது நடவடிக்கையைப் பார்த்துக்கிட்டு இருந்தவளுக்கு, அதுவும் படிச்ச பொண்ணுக்கு தனக்குத் தானே ஒருத்தரைப்பத்தி ஜட்ஜ் பண்ண தெரியாதா?

ஆசை ஆசையாய்
வெற்றி அம்மா போட்டு உடைத்துவிட்ட சிறந்த ஜோடிக்கான கோப்பையை சரி செய்து மலரிடம் காண்பிக்க ஆசை ஆசையாய் வருகிறான்.அவளோ சோர்த்து படுத்து கிடக்கா. அவன் பதறிப் போயி ஏன் மலர் ஏதோ நடந்து இருக்கு என்னன்னு சொல்லு மலர்னா எதுவும் இல்லைங்கன்னு மறைக்கறா.

காதைத் திருகி
அதான் உன் புருஷன்னு ஆகிப்போச்சு இல்லே.. அவன் என்ன அரிச்சந்திரனா பொய்யே சொல்லாம வாழறதுக்கு? காதைத் திருகி ஏண்டா ராஸ்கல் பொய் சொன்னேன்னு கேட்கறதுதான் இந்த காலத்து பொண்ணுக்கு அழகு. அதைவிட்டு இப்படி ஒரு அழுகாச்சியா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications